சனி, 30 ஜூலை, 2011

போற்றுதலுக்குரிய “தவ்ஹீத்” பின்பற்றுவதற்கே! பிதற்றுவதற்கல்ல!

போற்றுதலுக்​குரிய “தவ்ஹீத்” பின்பற்றுவ​தற்கே! பிதற்றுவதற்​கல்ல!

அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்லாஹ்வின் அருள் மறையையும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின், வழி முறையையும் (குர்ஆன்-ஹதீஸை) அடிப்படையாகக் கொண்ட அழகிய மார்க்கத்தில்.. ‘இல்லா ஒன்றை’ அறியாமையால் இறுகப்பிடித்துக் கொண்டு..இதுதான் மார்க்கம் என (பித்அத் மற்றும் இணைவைத்தல் எனும்) இருளில் மூழ்கிகிடக்கும் சமுதாயத்தை.. ’தவ்ஹீத்’ எனும் ஒளியைக் கொண்டு, மாற்றமடையச் செய்யப் போராடும் இயக்கச்சகோதரர்களுக்கு...! உங்களின் அழகிய கொள்கைக்கு ஆதரவு கரம் நீட்டக்காத்திருக்கும் பொதுமக்களாகிய நாங்களும்.. “உங்களிடமிருந்தும்” சிலவற்றை எதிர் பார்த்துத்தான் நிற்கிறோம்.

“தவ்ஹீத்” அமைப்பு அல்லது இயக்கம் ‘ஓரிறையை’ ஓங்கிச் சொல்லும் ஓர் ஒப்பற்ற உன்னத இயக்கம்! இதன் கொள்கைக்கு மறுப்பு தெரிவிப்பவன்... ஒன்று, (மூடநம்பிக்கையில் மூழ்கிய) மூடனாக இருக்கவேண்டும். அல்லது.. தன் சுயநலத்துக்காகவோ, வரட்டு வாதத்துக்காகவோ, மறுப்பதைப்போல் நடிப்பவனாக இருக்க வேண்டும்! (இது என் சொந்தக்கருத்து!)

ஆனால்ஞ் தவ்ஹீதை வாய்கிழிய பேசும் (இயக்கத்தைச் சார்ந்த) நபர்களில், எத்தனைப் பேர்,இறைவனுக்கும் அவனின் மறுமைக்கும் பயந்து,அந்த (அப்பழுக்கற்ற) கொள்கையை (அப்படியே) கடைப்பிடிக்கிறார்கள்?

நமதூரில் நடந்த,,, எந்த தவ்ஹீத் அமைப்பு சகோதரரின் திருமணம், அல்லது அவரின் இல்லத்திருமணம்.. முழுக்க முழுக்க (நபி’ஸல்’ காட்டியத்தந்த வழியில்) தவ்ஹீத் முறைப்படி நிகழ்ந்தது! ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் பார்ப்போம்! (வீம்புக்காக சொல்லாதீர்கள். பெண் வீட்டில் விசாரிப்போம்!) ஆனால் திருமணச்சடங்குகளில் ஏதாவது (பெண்ணுக்கு கருகமனி கட்டவில்லை, அல்லது வரதட்சனை வாங்கவில்லை) இப்படி ஒன்றோ, இரண்டோ (மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்) சில காரியங்களை செய்துக்காட்டிவிட்டுஞ் மற்றப்படி நோன்பு சோறு, அல்லது அதற்கு பகரம் பணம் (அப்பவும் வீட்டுக்குமட்டும் சோறு கொடுத்திடுங்க!), மற்றும் நல்ல சோறு, நாற சோறுன்னு எதை விட்டு வைத்தார்கள். (கேட்டால், அம்மா திருப்திக்கு, அக்கா திருப்திக்கு வாங்கிகொண்டோம்னு கதை சொல்வார்கள்)(இன்று அமைப்பின் மாநில அலவிலான ‘தலமைப்பொருப்பில்’ உள்ளவர்கள்கூட,பெண்வீட்டார் விருந்திட்ட திருமணத்தில் கலந்துக்கொண்ட காரணத்துக்காக,அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே தூக்கி எறியப்படுகிறார்கள்)

அப்படியிருக்கஞ் இதையெல்லாம் நான் ‘குத்திக்காட்ட’ எழுதவில்லை சகோதரர்களே!

மார்க்கத்தில் வளைந்துக் கொடுக்க மாட்டோம் என்றக்கொள்கையை வரவேற்கிறேன். ஆனால்.. விட்டுக்கொடுக்கலாம் அல்லவா? விட்டுக்கூட கொடுக்கவேண்டாம். விட்டுப்பிடிக்கவாவது செய்யலாம் அல்லவா! நபி(ஸல்) காலத்தில் குடியில் மூழ்கிக்கிடந்த சமுதாயத்தை இறைவன்ஞ் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிலிருந்து மீளச்செய்தான். (என்று குரானின் வசனங்களிலிருந்து அறிகிறோம்!) அதேப்போல்,முன்னோர்கள் அறியாமையில் செய்த பழக்க வழக்கங்களை,பல தலைமுறையாய் பின்பற்றும் மக்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாகவே மீட்கவேண்டியுள்ளது. ஆனால்ஞ் ‘இணைவைக்கும் காரியத்தில்’ உடனடி நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். (அல்லாஹ்வின் உதவியால்..) இணைவைத்தல் என்பது... நம் பகுதில் அதிகமில்லை என்பது, ஆறுதலான விசயம்!

தவ்ஹீத் என்பதுஞ் போதிப்பதற்காக மட்டுமல்ல.. “பின்பற்றவே!” என்பதும்,பின்பற்றாத ஒருவர்... அதைப்பிறருக்கு போதிக்க தகுதியற்றவர் என்பதுமே என் வாதம்!

எனக்குத் தெரிந்து (உறிப்பதற்கு நிறயவே இருந்தாலும்,உதாரணத்திற்கு) ஓரிரு சம்பவங்களை முன் வைக்கிறேன்! எனக்கு தெரிந்த, ஒரு தவ்ஹீத்(?) சகோதரர்ஞ் (துபாயில்) ஒரு அரபி வீட்டில் ஓட்டுனராக பனி புரிகிறார். ”எதிர்காலத்தில் தவ்ஹீதுக்காகவே என் வாழ்வை அற்பனிக்க உள்ளேன். இன்னும் கொஞ்ச நாளில்,துபாயை முடித்துகொண்டு ஊர் போய், சமுதாயப் பனியிலும்,இயக்கப்பனியிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்” என்றார். அவர் கொஞ்சம் வசதியாய் உள்ள நபர் என்பதும், அவருக்கு மாத மாதம் (வாடகை) வருமானம் வரும் அளவுக்குஞ் ஒரு நகரத்தில் (டவுனில்) கட்டிடம் உள்ளது என்பதும் எனக்குத்தெரியும்! எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது! ஒருவகையில் பொறாமையாகக்கூட இருந்தது. (கட்டிடம் உள்ளதால் அல்ல! நன்மை விசயத்தில்..) அதன் பின், ஒருநாள்.. அவர் (துபாயின்) மார்க்கெட்டில் (ஒழிந்தபடி) ஒரு ஓரத்தில்ஞ் நின்றுக்கொண்டிருந்ததை கவனித்துஞ் இங்கு என்ன செய்கிறீர்கள் என்றேன்.

“வேறொன்றுமில்லை சிகரெட் குடித்தேன்” என்றார். அதோடு நிறுத்தியிருக்கலாம். தொடர்ந்து.. ”தவ்ஹீதில் உள்ளதால், எவனாவது பார்த்தால் ’நொட்டைச்சொல்’ சொல்வான். இது தேவையா..?” என்றார். எனக்கு, அவர் மீதிருந்த அபிமானம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது! பின்னர்.. வேலையெல்லாம் எப்படி போகுது? என்று பேச்சை மாற்றினேன்! ம்.. போகுது என்றார். விரைவில்.. முடித்துக்கொண்டு போவதாய் சொன்னீர்களே.. என்றேன்! “ஆமாம், இங்கு இப்பல்லாம் ஒரு பிரயோஜனமுமில்லை! முன்பெல்லாம் தினமும், மீன் மார்க்கெட் போவேன். கமிசனாவது கிடைச்சது.இப்பல்லாம் அந்த பிச்சைக்காரனே (அரபிக்காரனே) போயிடுரான். வெறும் சம்பளத்தை வச்சு ஓட்டமுடியுமா?” என்றார். திகைத்துப்போனேன்! இதை வேறு எவனாவது சொல்லியிருந்தால், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், பேச்சுக்கு பேச்சு ‘தவ்ஹீத்’ பேசும் இவர் இப்படி சொல்லும்போது ஆடிப்போய்விட்டேன்! ஆனால்,இவரிடம் ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை.தவ்ஹீத் என்ற வளையத்தில் இருப்பதால்.. சிகரெட் கூட புகைக்க (மக்களுக்கு) அஞ்சும் இவர்ஞ் என்னிடம் சொல்ல ஏன் துணிந்தார் என்பது எனக்கு இன்னும் ‘புரியாத புதிராகவே’ உள்ளது!

மேலும், ஒரு தவ்ஹீத் சகோதரரின் தந்தை இறந்துவிட்டார்! இறந்தவரின் மூன்று மகன்களுமே துபாயில் வசிக்கிறார்கள்! மரணச்செய்தி கேட்டவுன், மூவரில் ஒருவர் ஊருக்கு போய்விட்டார். மற்ற இரு மகன்களில் ஒருவர்,மூன்று தினம் கழித்து வெள்ளிக்கிழமையன்று தேராவிலுள்ள ‘பாத்திமா பள்ளியில்’ தன் தந்தைக்காக ஜியாரத் கொடுக்கிறார். மற்றொருவர்தான் நம் ’கதாநாயகன்’ தவ்ஹீத் வாலா! அதுவும் இவர் பக்கா(?)தவ்ஹீதாம்! சரி இருக்கட்டும்! ‘தவ்ஹீதான நீ..’ ஒன்று ஜியாரத் கொடுக்கும் பக்கம் வந்திருக்கக்கூடாது! அல்லது, அன்று மக்களை சந்திக்க (பஜார்) வந்தாலும், மரியாதையாக அந்த (ஜியாரத் நடக்கும்) அரைமனி நேரமாவது, வேறெங்காவது போய்விட்டு, பின்னர் வந்திருக்க வேண்டும்! பள்ளிக்கு கீழ் நின்றுக்கொண்டு, தன் தந்தைக்கு நடக்கும் ‘ஜியாரத்தை’ அவமானிக்கும் விதமாய்ஞ் “(தன் தம்பியை)இவனை எவன் ஜாரத் நடத்தச்சொன்னான்.இது எந்த சட்டத்தில் இருக்கிறது..ஆச்சா,போச்சான்னு அலும்பு பேசிக்கொண்டிருக்கிறார்!

அதேப்போல.. வேறொரு தவ்ஹீத்(?) நன்பர்!

தன் உடன் பிறந்த சகோதரன்,நோய்வாய் பட்டிருந்தபோது,தன் சகோதரனின் மருத்துவ சிகிச்சைக்காக,பல லட்சங்கள் செலவுச்செய்து, தன் பெற்ற பிள்ளையைப்போல் பார்த்துக் கொண்டார்! இந்த தவ்ஹீத்(?) நன்பர் துபாயிலும், சிகிச்சைப்பெற்றுவரும் சகோதரன் ஊரிலும்!

இப்படியிருக்க,எப்போதும் தன் சகோதரனைப்பற்றிய கவலையில், பேசும்போதே ‘வெடித்து’ அழுவார்! அப்போது கேட்கும் நமக்கே.. ‘துக்கத்தில் நெஞ்சு வெடிப்பது போலிருக்கும்’.ஒருநாள் சிகிச்சைப்பலனின்றி ஊரில், இவரின் சகோதரர் மரணித்துவிட்டார் (இன்னாலில்லாஹ்).

பின்னர், அடுத்த வெள்ளிக்கிழமை (துபாயில்) இறந்தவருக்கு ஜியாரத் கொடுக்கணும். துபாயில் உள்ள ஒரே ‘சகோ’வோ தவ்ஹீத் வாலா! எப்படி சாத்தியம்? சரி.. கேட்கும் மக்களுக்கு ‘பதில்’ சொல்ல முடியாதே என்பதற்காகஞ் இறந்தவரின் மூத்த சகோதரின் மகன்,துபாயில் தன் சிரியதந்தைக்கு ஜியாரத் கொடுத்துவிட்டார்! அப்போது, இந்த தவ்ஹீத்(?)வாலா என்ன செய்திருக்க வேண்டும்!முன்புள்ள தவ்ஹீத்(?) ‘கதாநாயகனுக்கு’ சொன்னதுப்போன்று..ஒன்று இந்தப்பக்கம் வந்திருக்கக்கூடாது! அப்படி வந்தாலும், ஜியாரத் நடந்த ‘அந்த’ ஒரு அரைமனி நேரமாவது வேறெங்காவது போயிருக்கவேண்டும்! ‘இல்லை!’ இவரும் அந்த பாத்திமா பள்ளிக்கு கீழ் நின்றுக்கொண்டு தங்களின் ‘தவ்ஹீத் பிரச்சாரத்தை’ மேற்கொள்கிறார்! ஐவேளைத் தொழாத மக்கள் கூட, இறந்தவருக்கு மரியாதை நிமித்தமாகஞ் ‘அரக்க-பறக்க’ பள்ளியை நோக்கி ஓடும்போதுஞ் இவரின் செயல் அருவறுக்கச்செய்தது! இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால்..’தன் சகோதரனின் உடல்நலமின்மையே.. உலுக்கச்செய்த இவரை, ஜியாரத் எனும் நிகழ்வால், “கொள்கை வீம்பு” சகோதரனின் மரண துக்கத்தைகூட மறந்து... வம்பு பேசவைக்கிறது!

நான் ஒன்றைக்கேட்கிறேன்! ஜியாரத் என்பது (யாசீன் ஓதி, இறந்தவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வது) இணைகற்பிக்கும் அளவுக்கு... அவ்வளவு மோசமானச் செயலா என்ன? நபியவர்கள் காட்டித்தராத வழிமுறைதான். ஒப்புக்கொள்கிறேன்! ஆனால்,கொஞ்சம் விட்டுத்தான் பிடியுங்களேன். ப்ளீஸ்!

மேலும், (நபியவர்கள் பிறந்த தினமான..) ’மீலாது நபி’ கொண்டாடும் மக்கள்மீது பாயும், கொள்கைச்சகோதரர்களில், எத்தனைப்பேர் தங்களின், குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? இவர்கள் தங்களின் குழந்தைமீது கொண்டுள்ள அன்பும்,பாசமும் இவர்களின் ‘கொள்கைக் கண்ணை’ மறைக்கும் போது, தங்களின் உயிராய்... உயிரினும் மேலாய், கருதும் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?

சரி... “தவ்ஹீத்” என்றால் என்ன? ஓரிறைக் கொள்கையைக் கொண்டிருக்கும் (குர்ஆன்-ஹதீஸை பின்பற்றும்) யாவரும் தவ்ஹீத்வாதிகள்தான். நமதூரில்.. (ஏற்றுக்கொள்ளாத,அல்லது தன்னை மாற்றிக்கொள்ளாத சில பழமைவாதிகளைத் தவிர) பெரும்பாலானோர் ‘தவ்ஹீத்’ கொள்கை உள்ளோர்தான்!

(மடமைகளான) மத்ஹபுகளை அகற்ற அல்லது அழிக்க பாடுபடும் நல்ல “கொள்கைச் சகோதர்களுக்கு” மத்தியில்... சில கருப்பு ஆடுகள், ஏதோ... ‘இறைவன் தன் திருமறையில்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினராகாத எவரும் சொர்க்கம் புக மாட்டார்கள் என்றுச்சொன்னது போன்றும், எனக்குப்பின் பீ.ஜே என்றொருவர் வருவார்.அவரையே பின் பற்றுங்கள் என்று நபியவர்கள் நவின்றது போன்றும்...‘மாயை’காட்டி, புதியதொரு மத்ஹபை உருவாக்கி, அழகான கொள்கையை உருகுலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கண்ணியத்துக்குரிய சகோ பீ.ஜே அவர்கள் (தன் இயக்கச் சகோதரர்களுக்கு) சொல்லக் கேட்டிருக்கிறேன்! ’பொது மக்கள் நம்மை கண்கானித்துக்கொண்டிருக்கிறார்கள்! கவனமாய் இருங்கள்! நம் கொள்கையை நாம் பின்பற்றினால்தான் பிறரும் பின் தொடர்வார்கள். அவர்கள் நம் மீது,நல்லபிப்பிராயம் கொண்டுள்ளார்கள்’ என்று. உண்மைதான்...! கெட்டவனை ‘குப்பை’ என்று யாருமே கண்டுக்கொள்ள மாட்டார்கள்! ஆனால்ஞ் ‘கொள்கைச்சகோதரர்கள்’ மீது நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளதாலேயே, அவர்களின் தவறு கண்டு விமர்சிக்கிறார்கள்!

தவ்ஹீத் கொள்கை “ரோஜா” மலரைப்போல அழகானதும், அப்பழுக்கற்றதும்தான்! ஆனால்.. அதை தாங்குவதாய் சொல்லும் காம்புகளில்தான் முட்கள் நிறைந்துக்காணப்படுகிறது! மலரை காக்கும் ‘அறனாய்’ விளங்கும் முட்கள் அவசியம்தான்! அத்துடன் சில விச(ம) முட்களும்..

இருந்து அழகான “ரோஜாவுக்கே” ஆபத்தாய் (அதாவது, குழப்பவாதிகள் என்ற அவப்பெயர்)ஆகிவிடக்கூடாது என்பதுதான் நம் ஆசை!

மேலும்,கொள்கையை அச்சுப் பிசகாமல் கடைப்பிடிக்கும் சகோதரர்கள் இருந்தால், என்னை மன்னியுங்கள்! தவ்ஹீத் என்றப்போர்வையில் கலங்கம் கற்பிப்பவர்களை அடையாளம் கண்டு திருத்துங்கள்! திருந்தாவிடின்... அந்த ‘குழப்பவாதிகளை’ இயக்கத்தை விட்டும் அப்புறப்படுத்துங்கள்!

இந்த (கட்டுரை)பதிவிலுள்ள சில கருத்துக்களை,ஏற்கனவே வேறொரு தளத்தின் ”கருத்துப்பகுதி”யில்,தெரிவிக்கையில்...ஒரு சகோதரர் என்னிடம் கேட்டிருந்தார்... “மார்க்கெட் கதை சொன்னீர்கள்,ஜியாரத் கதை சொன்னீர்கள்,உங்களின் சொந்தக்கதையைச் சொல்ல வில்லையே?உங்கள் வாழ்க்கையிலும்,பொருளீடலிலும் உண்மையானவராய் இருக்கிறீர்களா?என்று! அந்த கேள்விக்கு, நான் அவருக்களித்த அதே பதிலையே...இனி இந்தப்பதிவை படித்துவிட்டு...என்மீது பாய நினைக்கும் சில சகோதரர்களுக்குமாய் தருகிறேன்.

”ஒருவேளை நான் ‘குப்பை’ என்றே வைத்துக்கொள்வோம்! நான் யாரையும் சுத்தம் செய்ய, துடைப்பம் எடுத்துக்கொண்டு புறப்படவில்லை! ஆனால்... என்னை சுத்தம் செய்ய வருபவனை.. ‘முதலில் நீ சுத்தமா?’ என, கேள்விக்கேட்க எனக்கு உரிமை இருக்கிறது! இருப்பினும், நாகரிகம் கருதி, நான் அப்படியும் கேட்கவில்லை! ’சுத்தமாக வர வேண்டும்’ என எதிர் பார்க்கிறேன். அவ்வளவே!"

மேலும்.. என் எழுத்துக்களிலோ, உரையாடலிலோ, கருத்திடலிலோ நான் பின்பற்றாத, கடைப்பிடிக்காத எதையும் சொன்னதில்லை! (ஒருவேளை... நான் பின்பற்றாத ஒன்றை..‘நாம் இப்படி இருக்கிறோம். திருத்திக்கொள்வோம்’ என, என்னையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்.)

ஆதமுடைய மக்களில் யாரும் ‘அக்மார்க்’ இல்லைதான்! அப்படிப் பார்த்தால், யாரும் யாருக்குமே உபதேசம் செய்ய முடியாமல் போய்விடும். நான் அப்படிச் சொல்லவும் இல்லை! ஆனால்... அதற்கான வரையறை அல்லது அளவுகோல் என்னவென்றால், நாம் பிறருக்கு உபதேசிக்கும் விசயங்களிலாவது, உத்தமராய் இருத்தல் வேண்டும் என்பதே!

முன்பு சொன்ன கருத்தையே மீண்டும் சொல்லி முடிக்கிறேன். ”தவ்ஹீத்” என்பது... போதிப்பதற்காக மட்டுமல்ல “பின்ற்றவே!” என்பதும்,பின்பற்றாத ஒருவர்... அதைப்பிறருக்கு போதிக்க தகுதியற்றவர்! என்பதுமே... என்வாதம்!
இந்த கட்டுரை விவாதிப்பதற்காக அல்ல! விளங்குவதற்காக!