நாட்டுப்பற்று என்றால் என்ன?
யாரெல்லாம் நாட்டுப்பற்று உடையவர்கள்?
எவை எல்லாம் நாட்டுப்பற்றில் அடங்கும்?- என கேள்வித் தொடுத்தால்... சுலபமாய், அதுவும் மிகச் சுலபமாய் சொல்லி விடலாம், கேள்வியிலேயேதான் பதில் இருக்கிறதே! இதென்ன லூசுத்தனமான கேள்வி? ‘நாட்டின் மீது பற்றுக் கொண்டால்.. நாட்டுப்பற்று, நாட்டின் மீது பற்றுக் கொண்டுள்ள யாவரும் நாட்டுப்பற்று உடையவர்கள், நாட்டை நேசிக்கும் எந்த ஓர் செயலும் நாட்டுப்பற்றில் அடங்கும்!' சரி.. முதலில், நாடு என்றால் என்ன? எனும் கேள்விக்கு கூட.. “வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகளுக்குள் அடங்கும், நாம் காணும் இந்தியா நம் நாடு!” இதுவே.. இன்று பலரின் பதில்!
வெறும் நிலப்பரப்பும், அதன் மண் வளமும் மட்டுமே ஒரு நாடாகக் கருதப்பட வேண்டுமெனில், நம் இந்தியத் திரு(?)நாட்டை விட பண்மடங்கு நிலப்பரப்பும், மண் வளமும் மிகுந்த நாடுகள் ஏராளம் ஏராளம்! மேலும், ஒருவன் தான் பிறந்ததினாலேயே தாய் நாட்டை மதிக்க வேண்டுமெனில்.. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற வகையில்.. உலகில் உள்ள அனைவருக்குமே, அவர்களுடைய நாடு அவரவர்களுக்கு சொர்க்கம்!
ஆனாலும்.. உலக அளவில் ஒரு நாடு நன் மதிப்பை பெறுவதென்பது, தனிமனித சுதந்திரம், அரசியலமைப்பு சட்டங்கள், நாட்டின் ஒருமைப்பாடு, இயற்றப்பட்ட சட்டங்களை கையாளும் முறை, நாட்டின் பொருளாதாரம், பாதுகாக்கப் படும் மனித உரிமை போன்ற போற்றத்தக்க செயல்களாலேயே வளம் மிக்க நாடாகவும், சிறந்த நாடாகவும் போற்றப்படுகிறது?
அந்த வகையில் நம் இந்தியத் திரு(?)நாடு எந்த அளவுக்கு பிறரிடம் நன் மதிப்பை பெறுகிறது என்று பார்த்தால்.. விரக்தியும் வேதனையுமே மிஞ்சுகிறது. அது போகட்டும்.. நான் அதுப்பற்றி பேசவோ குறிப்பிடவோ இந்த பதிவை எழுதவில்லை!
ஆனால்.. நம் நாட்டிலுள்ள பெரும்பாலான அறிவு(?)ஜீவிகள்.. நாடு என்றால் வெறும் மண்ணையும், அதன் பரப்பளவையும் மட்டுமே நாடாக விளங்கிக் கொண்டு, அதன் மீது பற்றுக் கொண்டு நாட்டுப் பற்றென்றும் தேச பக்தியென்றும்.. (கேனத்தனமாக) பிதற்றிக் கொண்டும் பினாத்திக் கொண்டும் இருப்பதை எண்ணி சிரிப்பதா? வேதனைப் படுவதா தெரியவில்லை!
அதனாலேயேதான், ‘வந்தே மாதரம்’- ‘மண்ணே வணக்கம்’ என்றச் சொல்லுக்கு இத்தனை விவாதமும் விவகாரமும். வணக்கத்துக்குரியவன் இறைவன் மட்டுமே எனக் கருதும் இஸ்லாமியர்கள், வந்தேமாதரம் (மண்ணே வணக்கம்) சொல்லமறுப்பதால் நாட்டுப்பற்று இல்லாதவர்களென்றும், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும் கூறி அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
ஒரு முறை தற்செயலாக வின் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘நீதியின் குரல்’ எனும் நேரலை நிகழ்ச்சியை காண நேர்ந்தது. அப்போது.. அதில், காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வு என்ன என்ற தலைப்பில் இருவர்களை வைத்து ஒருவர் நடுவராக இருந்து, விவாதம் நடைப்பெற்றது. அந்த இருவரில் ஒருவர் நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர், மற்றொரு நபர் ஏதோ பத்திரிக்கை துறையைச் சார்ந்தவர் என நினைக்கிறேன் சரியாக நினைவில்லை. அதல்ல முக்கியம். நான் சொல்லவந்த செய்தி என்னவென்றால்.. பொது வாழ்க்கையில் ஈடு பட்டுள்ள நடிகர் எஸ்.வி.சேகர் ஓரளவுக்கு பொது அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பொது அறிவில் அடிப்படை அறிவைக்கூட பெற்றிருக்கவில்லை என்பதை அந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னரே அறிந்துக் கொண்டேன். நேரலை நிகழ்ச்சியில் ஒரு பாமர பார்வையாளன் கேட்கும் கேள்விக்குக்கூட மழுப்பலான, சொதப்பலான, பதிலை நையாண்டியோடு சொல்லிக் கொண்டிருந்தார். ஆக்கப்பூர்வமான அறிவுச்சார்ந்த நிகழ்ச்சிக்கு தகுதியற்ற இதுப் போன்ற பேர்வழிகளை அழைத்து, நிகழ்சியின் வீரியத்தை குறைத்திருக்க வேண்டாம். இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. எஸ்.வி.சேகரின் பேச்சில் நாட்டுபற்று(?) அதிகமாகக் காணப்பட்டது.
அவரும் இந்திய வரைப்படத்திற்பட்ட மண்ணின் மீதே பக்திக் கொண்டு.. அதையே தேச பக்தி என்று பிதற்றிக்கொண்டிருந்தார். கொஞ்ச நாளாகவே தேசியக் கொடியை மார்பில் ஏந்தி அலைந்துக் கொண்டிப்பதாய் அறிகிறேன். காங்கிரஸில் இணையப் போகிறாராமே? தேசியக் கொடி பலன் அளிக்கக் கூடும். ஜவஹர்லால் நேரு ரோஜாப்பூவை மார்பில் ஏந்தி இந்திய அளவில் நேரு மாமா ஆனதுப்போல்.. இவர் தமிழக அளவிலாவது மாமா ஆக வேண்டாமா என்ன? கிடைக்கட்டும் தமிழகத்துக்கு ஒரு நல்ல மாமா!
இன்று நாட்டுப்பற்று என்பது, முழுக்க முழுக்க அரசியல் ஆதாரம் தேடுவோருக்கான தாரகை மந்திரம் விட்டது. நாட்டு மக்கள் மீதான அபிமானம், நாட்டின்மீது ஈடுபாடு என்றில்லாமல், மண்மீதுள்ள மோகம் என்றே நாட்டுப்பற்று கற்பிக்கப் படுகிறது.
சுதந்திரத்துக்காக அறும்பாடு பட்டவர்களின், உயிர் தியாகம், பொருள் தியாகம் செய்தவர்களின் வரலாறு மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் உள்ளது. இஸ்லாமிய சமுதாய மக்களின் நாட்டுப்பற்றையும், தியாகங்களையும் மறந்த அல்லது மறைத்த ‘மண் வணங்கிகளான’ இந்த “வந்தேமாதரம் கோஷ்டி”யின் கையிலும், நீதியையும் சட்டத்தையும் தூக்கி எறிந்துவிட்டு தன் விருப்பத்துக்கு தீர்ப்பெழுதும் காவிச்சாமியாகள் கையிலும் நாடு கிடந்து அல்லாடும் வரை நாட்டுப்பற்றென்பது வெறும் மண் மீதான மோகமாகவே கருதப்படும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக