இனியொரு விதி செய்வோம் வி.களத்தூரில் இல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்
தனக்கு என்று வாழ்வதைவிட நமக்கு என்று வாழ்வது சிறப்பு,அதனினும் நம் சுற்றத்தாரின் துயர் துடைக்க பொதுநலனுக்காக வாழ்வது சிறப்பு. அந்த நல்ல சிந்தனையை மனதில் கொண்டு நமதூர் சகோதரர்களால் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஜக்காத் பவுண்டேஷன் நமதூரில் ஒரு புதிய புரட்சி ஒன்றை மலரச்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ்…
இந்த ஜக்காத் பவுண்டேஷன் அமைப்பதற்காக கடந்த வாரம் புஷ்ரா,ஐஎம்சிடி மற்றும் பொதுச்சேவையில் நாட்டம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அழைப்பினை ஏற்று அனைவரும் வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (05.08.2011) இரவு துபை பிஸ்மில்லா ரூம் மாடியில் கூட்டம் நடந்தது. சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் என்ற அமைப்பு உறுவாக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த ஜக்காத் பவுண்டேஷன் மூலமாக நமதூர் மக்களிடம் அவர் அவர்களின் ஜக்காத் தொகை மற்றும் சதக்காவினை வசூல் செய்து நமதூரில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு கொடுத்து அவர்களை ஏழ்மையில் இருந்த வெளிவரச்செய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.இந்த அரவனைப்பின் மூலம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் அவர்கள் மற்றவர்களுக்கு ஜக்காத் தரக்கூடிய சூழலை உருவாக்க நாடியுள்ளது. இன்ஷா அல்லாஹ்..
இந்த ஜக்காத் பவுண்டேஷன் பற்றி உங்களுக்கு சில கேள்விகள் தோன்றும் அதாவது முதலில் நமது சொந்த பந்தங்களுக்கு ஜக்காத் கொடுப்பது தானே சிறப்பு.இந்த அமைப்பிற்கு நாம் நம்முடைய ஜக்காத் தொகையை கொடுத்துவிட்டால் ஜக்காத் வாங்குவதற்காக நமது வீடு தேடி வரும் நமது சொந்த பந்தங்களுக்கு என்ன செய்வது,அவர்களுக்கு எப்படி இல்லை என்று சொல்வது,நாம் கொடுக்கும் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு கொடுப்பார்களா? என்று என்ன தோன்றும். ஜக்காத் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் அது தான் சிறந்ததும் ஆகும்.ஆனால் நீங்கள் கொடுக்கும் சிறு தொகையை வைத்து அவர்களுக்கு அன்றாட வாழ்விற்குத்தான் சரியாக இருக்கும்.அதுவே அனைத்து ஜக்காத் தொகையும் ஒன்றாக இனைத்து கொடுக்கும் போது அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுவதோடல்லாமல் ஏழ்மையில் இருந்து விடு பட ஏதுவாக இருக்கும்.
அதற்காக இதுவரைவந்து ஜக்காத்தை வாங்கி சென்றவர்களிடம் இல்லை என்று சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் கொடுங்கள் உங்களுடைய ஜக்காத் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது சதக்காவாக நமது ஜக்காத் பவுண்டேஷனுக்கு கொடுங்கள். இந்த வருடம் நாம் செய்ய இருக்கும் வினியோக முறைகளைப் பார்த்து அடுத்தடுத்த வருடங்களில் ஜக்காத் தொகை கூடுதலாக வரும்போது நமதூரை எழைகளே இல்லாத ஊராக மாற்றலாம். இது சற்றென்று முடியும் காரியமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும் சில வருடங்கள் ஆகலாம் ஆனால் மாற்ற முடியும் ஆண்டவன் உதவியுடன்.
நீண்ட, நெடிய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த ஜக்காத் பவுண்டேஷன் நிறுவப்பட்டுள்ளது. இது எந்த ஒரு சேவை அமைப்பையும் சார்ந்ததல்ல நமதூருக்கு பொதுவானது. நமதூரின் சேவை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் பொதுச்சேவை மணம் கொண்டவர்களையும் மார்க்க ஆலோசனைகளுக்காக ஆலிம்களையும் இனைத்து நமதூருக்காக துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வசூல் செய்யப்படும் அனைத்து ஜக்காத் மற்றும் சதக்காக்களை முறையாக வினியோகம் செய்ய இருக்கிறார்கள்.வரவு செலவுகள் முறையாக ஆடிட்டிங் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இந்த வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் தலைவராக மௌலவி. எம்.ஹெச். நூருல்லாஹ், அவர்கள் செயல்படுவார்கள். துபையில் ஜனாப். எப். அலிராஜா, ஜனாப். சேட் சர்புதீன் (வி.களத்தூர் துபை சங்க துணை தலைவர்) சகோதரர் பி. அஹமது அலி (தலைவர் ஐஎம்சிடி), எப். அப்துர் ரஹ்மான் (பொருளாளர் புஷ்ரா சேவை அமைப்பு) ஆகியோர் நிர்வாகிகளாக செயல் படுவார்கள்.
2:277 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
1403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்" 'நானே உன்னுடைய புதையல்" என்று கூறும்."
இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்." என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 1403
உங்களுடைய ஜக்காத் தொகை கீழ்கண்ட நபர்களிடம் கொடுக்கவும்.
துபை
1. எப். அலிராஜா மொபைல் – 050 6523501
2. சேட் சர்புதீன் மொபைல் – 055 9828616
3. பி. அஹமது அலி மொபைல் – 050 5848935
4. எப். அப்துர் ரஹ்மான் மொபைல் – 050 6402386
அபுதாபி
1. நூருல் ஹக் மொபைல் – 050 5660780
2. கெ. அப்துல் ஹக்கீம் மொபைல் – 050 3440786
3. எம். ஜாபர் சாதிக் மொபைல் – 050 7565955
ராசல் கைமா
1. ஜெ. பாருக் மொபைல் – 055 4434452
2. எஸ். சாதிக் பாஷா மொபைல் – 050 3230329
சார்ஜா
1. எ. சேக் தாவுத் மொபைல் – 055 4813518
சவுதி அரேபியா
1. பி. அப்துல் காதர் மொபைல் – +966558930403
2. நூர் முஹம்மது மொபைல் – +966595957492
கத்தார்
1. அப்துல் சுபஹான் மொபைல் – +97455201235
குவைத்
1. முஹம்மது யூனுஸ் மொபைல் – +96597239359
பஹ்ரின்
1. அன்ஸர் பாஷா மொபைல் – +97339774852
தாங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்களோ அந்தந்த நபர்களை தொடர்பு கொண்டு உங்களின் ஜக்காத் தொகை அல்லது சதக்காவை கொடுக்கவும்.முக்கியமா ஜக்காத் கொடுத்தால் ஜக்காத்திற்கா என்றும் சதக்கா கொடுப்பதாக இருந்தால் சதக்கா என்றும் தெளிவாக சொல்லி கொடுக்கவும்.
உங்களுடைய ஜக்காத் தொகையை கணக்கிடுவதில் ஏதும் சந்தேகம் இருந்தால் மௌலவி எம்.ஹெச் நூருல்லாஹ் ஹஜ்ரத் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 050 3486824.
இனியொரு விதி செய்வோம் வி.களத்தூரில் இல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்.சகோதரனே வில்லிலிருந்து அம்பாய் புறப்படு! வி.களத்தூரை ஏழைகள் இல்லாத ஊராக மாற்றிடு!!
புதன், 10 ஆகஸ்ட், 2011
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
கேள்வி-பதில்!
அஸ்ஸலாமு அலைக்கும்
என்பெயர் எ.முஹம்மது யுசுப் ( பிஸ்மில்லா ரூம் வாசி ) என்மனதில் பல நாட்கலாக உதயமாகும் கேள்வி ஒன்றய்
கேற்கிறேன் யாராக இருந்தாலும் பதில் தரலாம்… வட்டி தொழில் செய்பவர்கள் வீட்டில் கல்யான காரியங்கள் நடக்கும் போது உனவு விருந்து வைது அழைகிரார்கலே அதை உன்ன எல்ல ஜமாத்தார்கலும் (சுன்னத் & தவ்ஹித் )மற்றும் பல்லிவாசல் இமாம் முதல் செல்கிறார்கலே இது ஹராம ஹலால..! ஹராம் என்று தெரிந்து போகிரார்கல அல்லது தெரியாமல் போகிரார்கல
வட்டி வாங்குபவன் நிழலில் நின்டாலே பெரும்பாவம் என்று சொல்லும் இஸ்லாம்சட்டங்கள் இதை
கேவலபடுத்திவிட்டு உனவுக்காக செல்கிரார்கலே இது சரியா..? எனக்கு தவரு எனறுபட்டது நான்
இரு கல்யான விருந்துக்கு போகவில்லை இதேபோல் எல்ல சகோதரமார்கலும் கடைபிடித்தால் வட்டி வாங்குபவர்கள் பயந்து தொழிலை விட்டு விட்டு நமது சமுதாயத்தில் நல்லமனிதர்கலாக வாழ வழிகாட்டுவோம் உபதேசம் ஊருக்குமட்டும்தான வீட்டிலேயும் வேன்டும் யார் மனதையும்
புன்படுத்தி இருந்தல் மன்னிக்கவும் தவருகள் எங்கே நடந்தாலும் சுட்டிகாட்டும் உங்கள் நன்பன்
எ.முஹம்மதுயுசுப் ( மும்பைவாழ )
Reply
அண்ணன் யூசுஃப் அவர்களுக்கு..!
நல்ல ஆரோகியமான கேள்வியை மையப்படுத்தி.. சத்தான விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறீர்கள்! மகிழ்ச்சி! ஆனால்… நண்பர் புனைப்பெயர் வாசி ‘உங்களுக்காக’ சொன்னது போன்று… இன்று நம் வாழ்வில் நாமே (அறிந்தும்) அறியாமலே ‘வட்டி’யெனும் சாபம் இரண்டற கலந்து விட்டது. வட்டியில் சின்னது-பெரியது என பிரிக்க முடியாது! எந்த ‘பெயரிலும்’ வட்டி எனும் தீங்கு மனிதனை தீண்டி விடக்கூடாது. ஆனாலும், பெயரை மாற்றிக்கொண்டு ‘நவீன பெயரில்’… பைனான்ஸ், லோன், சீட்டு, இன்னும் பல பரிமானங்களில் ‘ஆஃபர்’ என்ற பெயரில் நம் வீட்டுக்கதவைத் தட்டவே செய்கின்றன. நாமும் நவீன யுகத்தின் (ஆடம்பரத்) தேவையின் அடிப்படையில் அதில் மூழ்கவே செய்கிறோம். ‘வட்டி’ வாங்குவது எவ்வாறு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளதோ… குற்றமோ… அதே அளவு பாவச்செயலே ‘வட்டி கொடுப்பதும்’. அதாவது வட்டிக்கு பணம் வாங்குவதும். ஆனாலும், இவ்வளவு தூரம் விவாதிக்கும் நாமே (எமெர்ஜென்ஸி) அவசரத் தேவைக்கு ’அதை’ நாடவே செய்கிறோம். அப்படி பார்க்கையில் ’கிரெடிட் கார்டு’ உபயோகிக்காத நபர்கள் சிலரே! இப்படி ஆழமாக அலசிப்பார்த்தால்.. நாம், பெரும்பாலானோர் வீட்டு விருந்தில் கலந்துக் கொள்ள முடியாமல் போய் விடும்!
இன்று இஸ்லாமிய நாடுகளில் இயங்கும், இஸ்லாமிக்(?) வங்கிகள் கூட 0% வட்டி என்ற ’புருடா’விட்டு, கார் லோன், வீட்டு லோன் என்ற பெயரில் ‘வட்டி’ வாங்கவே செய்கிறது! உதாரணத்திற்கு ஒரு காரின் விலை 50,000 என்று வைத்துக்கொண்டால், அத்துடன் 5,000 வட்டியை சேர்த்து, காரின் விலை 55,000 எனவும் 0%வட்டி எனவும் டக்குமெண்ட் தயாரித்து கையொப்பம் வாங்கி விடுகிறார்கள். நமக்கு(market rate) சந்தைவிலை 50,000தான் என்பது நன்றாகவே தெரியும். தவணை முறையில் வண்டி கிடைத்தால் போதும் என்று யாரும் கேட்பதில்லை! அப்படி வங்கி ஊழியரிடம் கேட்டாலும் ‘அப்படிப்பார்த்தால் வங்கி நடத்த முடியாது’ என்ற பதிலே மிஞ்சும்!
இதற்கெல்லாம் ஒரே தீர்வு… நம் ஊரில் இயங்கி வரும் “நலச்சங்கங்களின், வட்டியில்லா கடன்” திட்டத்திற்கு நம் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து.. ஏழைகளின் தேவையறிந்து அவர்களை அரவனைத்தால்… பெருமளவு ‘வட்டி’ எனும் வன்கொடுமையிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும்!
நம் தேவைக்கு போக, மீதமாய் இருக்கும் உபரி பணத்தை… அவசரத்தேவைக்கு, வியாபார (முதலீட்டு) தேவைக்கு, அவகாச (ஆற-அமர) தேவைக்கு என மூன்று வகையாக பிரித்து.. முதல்வகை தேவைக்கு வீட்டிலும், இரண்டாம்வகைத் தேவைக்கு, (பாதுகாப்புக்காக) வங்கியிலும், மூன்றாம் வகையை ‘சேவை’ அமைப்பிலும் கொடுத்து வைத்தால்… ’அனைவருக்கும்’ பலனாய் அமையும். தேவைப்படும்போது குறிப்பிட்ட நாளுக்கு முன் சொல்லி, திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்!
(இன்ஷா அல்லாஹ்.. விரைவில், ஊரோடு சென்று தொழில் தொடங்க இருக்கிறேன். அப்போது, இந்தத்திட்டத்துக்கு என்னாலான முழு ஒத்துழைப்பையும் தர இருக்கிறேன். எனவே, “நீ எவ்வளவு கொடுத்து வச்சிருக்கே?” என்று என் மீது யாரும் பாய்ந்து விட வேண்டாம். துஆ செய்யவும்! மேலும், சில காலம் நண்பர்களுடன், கூட்டாக தவனைமுறையில்… ’இஸ்லாமிய வங்கிகள் ஸ்டைலில்’ லேப்டாப், செல் ஃபோன் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.இறைவன் அருளால் அதிலிருந்தும் விலகி விட்டேன்.)
இவ்வாறாக முற்றிலுமாக வட்டியிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுத்தப்பின்… “பகிரங்கமாகவே” முன்கூட்டியே அமைப்பின் மூலமாகவே அறிவிக்கலாம்… ”இனி எவரேனும் வட்டி வாங்கினால் அவர்கள் வீட்டு விஷேசங்களையும், விருந்தினையும் புறக்கனிப்போம்” என்று! அதையும் மீறி அவர்கள் அச்செயலைத் தொடர்ந்தால்.. நீங்கள் சொன்னது போன்று செய்யலாம்.
உங்களின் கருத்தாழமிக்க கேள்விக்கும், சமுதாய நலனில் அக்கரைக்கொண்ட சிந்தனைக்கும் வாழ்த்துக்கள் !
நேசமிகு: வசந்தவாசல் அ.சலீம்பாஷா
(நன்றி: விகளத்தூர்.காம்)

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)