அஸ்ஸலாமு அலைக்கும்
என்பெயர் எ.முஹம்மது யுசுப் ( பிஸ்மில்லா ரூம் வாசி ) என்மனதில் பல நாட்கலாக உதயமாகும் கேள்வி ஒன்றய்
கேற்கிறேன் யாராக இருந்தாலும் பதில் தரலாம்… வட்டி தொழில் செய்பவர்கள் வீட்டில் கல்யான காரியங்கள் நடக்கும் போது உனவு விருந்து வைது அழைகிரார்கலே அதை உன்ன எல்ல ஜமாத்தார்கலும் (சுன்னத் & தவ்ஹித் )மற்றும் பல்லிவாசல் இமாம் முதல் செல்கிறார்கலே இது ஹராம ஹலால..! ஹராம் என்று தெரிந்து போகிரார்கல அல்லது தெரியாமல் போகிரார்கல
வட்டி வாங்குபவன் நிழலில் நின்டாலே பெரும்பாவம் என்று சொல்லும் இஸ்லாம்சட்டங்கள் இதை
கேவலபடுத்திவிட்டு உனவுக்காக செல்கிரார்கலே இது சரியா..? எனக்கு தவரு எனறுபட்டது நான்
இரு கல்யான விருந்துக்கு போகவில்லை இதேபோல் எல்ல சகோதரமார்கலும் கடைபிடித்தால் வட்டி வாங்குபவர்கள் பயந்து தொழிலை விட்டு விட்டு நமது சமுதாயத்தில் நல்லமனிதர்கலாக வாழ வழிகாட்டுவோம் உபதேசம் ஊருக்குமட்டும்தான வீட்டிலேயும் வேன்டும் யார் மனதையும்
புன்படுத்தி இருந்தல் மன்னிக்கவும் தவருகள் எங்கே நடந்தாலும் சுட்டிகாட்டும் உங்கள் நன்பன்
எ.முஹம்மதுயுசுப் ( மும்பைவாழ )
Reply
அண்ணன் யூசுஃப் அவர்களுக்கு..!
நல்ல ஆரோகியமான கேள்வியை மையப்படுத்தி.. சத்தான விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறீர்கள்! மகிழ்ச்சி! ஆனால்… நண்பர் புனைப்பெயர் வாசி ‘உங்களுக்காக’ சொன்னது போன்று… இன்று நம் வாழ்வில் நாமே (அறிந்தும்) அறியாமலே ‘வட்டி’யெனும் சாபம் இரண்டற கலந்து விட்டது. வட்டியில் சின்னது-பெரியது என பிரிக்க முடியாது! எந்த ‘பெயரிலும்’ வட்டி எனும் தீங்கு மனிதனை தீண்டி விடக்கூடாது. ஆனாலும், பெயரை மாற்றிக்கொண்டு ‘நவீன பெயரில்’… பைனான்ஸ், லோன், சீட்டு, இன்னும் பல பரிமானங்களில் ‘ஆஃபர்’ என்ற பெயரில் நம் வீட்டுக்கதவைத் தட்டவே செய்கின்றன. நாமும் நவீன யுகத்தின் (ஆடம்பரத்) தேவையின் அடிப்படையில் அதில் மூழ்கவே செய்கிறோம். ‘வட்டி’ வாங்குவது எவ்வாறு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளதோ… குற்றமோ… அதே அளவு பாவச்செயலே ‘வட்டி கொடுப்பதும்’. அதாவது வட்டிக்கு பணம் வாங்குவதும். ஆனாலும், இவ்வளவு தூரம் விவாதிக்கும் நாமே (எமெர்ஜென்ஸி) அவசரத் தேவைக்கு ’அதை’ நாடவே செய்கிறோம். அப்படி பார்க்கையில் ’கிரெடிட் கார்டு’ உபயோகிக்காத நபர்கள் சிலரே! இப்படி ஆழமாக அலசிப்பார்த்தால்.. நாம், பெரும்பாலானோர் வீட்டு விருந்தில் கலந்துக் கொள்ள முடியாமல் போய் விடும்!
இன்று இஸ்லாமிய நாடுகளில் இயங்கும், இஸ்லாமிக்(?) வங்கிகள் கூட 0% வட்டி என்ற ’புருடா’விட்டு, கார் லோன், வீட்டு லோன் என்ற பெயரில் ‘வட்டி’ வாங்கவே செய்கிறது! உதாரணத்திற்கு ஒரு காரின் விலை 50,000 என்று வைத்துக்கொண்டால், அத்துடன் 5,000 வட்டியை சேர்த்து, காரின் விலை 55,000 எனவும் 0%வட்டி எனவும் டக்குமெண்ட் தயாரித்து கையொப்பம் வாங்கி விடுகிறார்கள். நமக்கு(market rate) சந்தைவிலை 50,000தான் என்பது நன்றாகவே தெரியும். தவணை முறையில் வண்டி கிடைத்தால் போதும் என்று யாரும் கேட்பதில்லை! அப்படி வங்கி ஊழியரிடம் கேட்டாலும் ‘அப்படிப்பார்த்தால் வங்கி நடத்த முடியாது’ என்ற பதிலே மிஞ்சும்!
இதற்கெல்லாம் ஒரே தீர்வு… நம் ஊரில் இயங்கி வரும் “நலச்சங்கங்களின், வட்டியில்லா கடன்” திட்டத்திற்கு நம் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து.. ஏழைகளின் தேவையறிந்து அவர்களை அரவனைத்தால்… பெருமளவு ‘வட்டி’ எனும் வன்கொடுமையிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும்!
நம் தேவைக்கு போக, மீதமாய் இருக்கும் உபரி பணத்தை… அவசரத்தேவைக்கு, வியாபார (முதலீட்டு) தேவைக்கு, அவகாச (ஆற-அமர) தேவைக்கு என மூன்று வகையாக பிரித்து.. முதல்வகை தேவைக்கு வீட்டிலும், இரண்டாம்வகைத் தேவைக்கு, (பாதுகாப்புக்காக) வங்கியிலும், மூன்றாம் வகையை ‘சேவை’ அமைப்பிலும் கொடுத்து வைத்தால்… ’அனைவருக்கும்’ பலனாய் அமையும். தேவைப்படும்போது குறிப்பிட்ட நாளுக்கு முன் சொல்லி, திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்!
(இன்ஷா அல்லாஹ்.. விரைவில், ஊரோடு சென்று தொழில் தொடங்க இருக்கிறேன். அப்போது, இந்தத்திட்டத்துக்கு என்னாலான முழு ஒத்துழைப்பையும் தர இருக்கிறேன். எனவே, “நீ எவ்வளவு கொடுத்து வச்சிருக்கே?” என்று என் மீது யாரும் பாய்ந்து விட வேண்டாம். துஆ செய்யவும்! மேலும், சில காலம் நண்பர்களுடன், கூட்டாக தவனைமுறையில்… ’இஸ்லாமிய வங்கிகள் ஸ்டைலில்’ லேப்டாப், செல் ஃபோன் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.இறைவன் அருளால் அதிலிருந்தும் விலகி விட்டேன்.)
இவ்வாறாக முற்றிலுமாக வட்டியிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுத்தப்பின்… “பகிரங்கமாகவே” முன்கூட்டியே அமைப்பின் மூலமாகவே அறிவிக்கலாம்… ”இனி எவரேனும் வட்டி வாங்கினால் அவர்கள் வீட்டு விஷேசங்களையும், விருந்தினையும் புறக்கனிப்போம்” என்று! அதையும் மீறி அவர்கள் அச்செயலைத் தொடர்ந்தால்.. நீங்கள் சொன்னது போன்று செய்யலாம்.
உங்களின் கருத்தாழமிக்க கேள்விக்கும், சமுதாய நலனில் அக்கரைக்கொண்ட சிந்தனைக்கும் வாழ்த்துக்கள் !
நேசமிகு: வசந்தவாசல் அ.சலீம்பாஷா
(நன்றி: விகளத்தூர்.காம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக