சனி, 11 பிப்ரவரி, 2012
தவ்ஹீத் மர்கஸ் - மக்கள் கருத்தும் விவாதமும்
தவ்ஹீத் மர்கஸ் கட்டுமானபணி குறித்த தகவலின்போது, வி.களத்தூர்.காம் இணையதளத்தில் (கருத்துரையில்) இடம்பெற்ற விவாதங்கள்.
abuthahir,Dubai says:
February 1, 2012 at 15:14
ஜந்துக்கள்
சுய புத்தி இல்லை என்றால் சொல் புத்தியாவது இருக்கவேண்டும் ஆனால் வகாபிகளிடம் இரண்டுமே இருப்பதில்லை.
உம்மத்தில் 73 பிரிவுகள் உண்டாகுமாம் ? அதில் ஒரு பிரிவுதான் சொர்க்கம் செல்லுமாம் ?
வகாபிகளின் உட் பிரிவுகளே 80 தாண்டி ஓடும்போது மேற்சொன்ன ஹதீஸை வஹாபிகள் எடுத்துவைப்பதற்கு கூச்சமாக இல்லை.
தவறிளைத்தவர்களை நாங்கள் வெளியேற்றிவிட்டோம்
என்று நொண்டிச்சாக்கு சொல்லவேண்டாம்
பிஜே யும் பாக்கரும் மேலும் அவர்களை சேர்ந்தவர்களும் தவ்ஹீது வாதிகள் இல்லை வெளி ஏறிவிட்டார்கள் என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா ?
முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் வஹாபிகள்
மரியாதைக்குரிய அஷ்ஷஹீது பழனிபாபா உயிருடன் இருக்கும்போது அவரை கண்டபடி ஏசியவர்கள், அவருக்கு எதிராக மறைமுகமாக பல தில்லுமுல்லு வேலைகளை செய்தவர்கள் தான் இந்த வஹாபிகள்.
அவர் இறந்தவுடன் அவரின் அடக்கஸ்தலத்தில் வந்து நின்று நீலிக்கண்ணீர் வடித்து அங்கு வந்தவர்களைஎல்லாம் மடக்கிபோட்டவர்கள் தான் வஹாபிகள்
கொஞ்சம் பின்னால் போய் பாருங்கள் தெரியும் உங்கள் வரலாறுகள்
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஏதோ ஒரு காரணத்திற்காக நான்கு மதகபுகள் தோன்றி இருக்கிறது அதிலும் இரண்டு மதகபுகள் தான் நம் வட்டாரங்களில் புழக்கத்தில் உள்ளவைகள்
அந்த இரண்டு மதகபுகளிலும் மஸாயில்களில் சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் சண்டை இட்டுக்கொள்வதோ ஊர் சிரிக்க நடந்து கொள்வதோ ஒருவரை ஒருவர் விலக்கமாற்றலோ அல்லது செருப்பாலோ அடித்துக்கொள்வதில்லை.
என் போன்ற நடுநிலையாளர்கள் கருதுவது அந்த நான்கோ, அல்லது இரண்டுடனோ இருக்கட்டும் என்பதுதான்
உங்களால் ஒரே (கொள்கையின்) குடையின் கீழ் மொத்த சமுதாயத்தையும் கொண்டுவரமுடியும் என்றால் தாரளமாக கொண்டு வாருங்கள் !! ஆனால் அதன் இடையிலேயே உங்கள் குடை பிய்ந்து விடுகிறதே !!
நான்கை, 40, 80,100, என்று பிரித்துக்கொண்டே போவது இஸ்லாமியர்களையும் அவர்களின் மார்க்கத்தையும் துண்டாடுவது இல்லையா ?
சரி நாங்கள் தான் தவ்ஹீது வாதிகள் என்று சொல்கிறீர்களே
சுன்னத்து ஜமாஅத் மற்ற ஏனைய இஸ்லாமியர்களும் தவ்ஹீது கொள்கையில் இல்லையா ?
அரசாங்கம் என்று உங்கள் இயக்கத்திற்கு பெயர் வைத்துக்கொண்டால் உலக அரசே உங்கள் ஆணையின் கீழ் தான் நடக்கிறது என்று அர்த்தமாகிவிடுமா ?
சாமி என்று உங்கள் இயக்கத்தில் ஒருவனுக்கு பெயர் வைத்துக்கொண்டால் அவன் தான் கடவுள் என்று சொல்வீர்களா ?
முட்டாள்களின் வியாக்கியானம்
தவ்ஹீது என்ற வரியின் விளக்கம் தெரியுமா வஹாபிகளுக்கு ?
வஹாபிகள் நடத்தும் அடிதடி இயக்கங்களுக்கும் தவ்ஹீத் கொள்கைக்கும் யாதொரு சம்மந்தமும் கிடையாது
வஹாபிகளுக்கும் தவ்ஹீது கொள்கைக்கும் உள்ள தொடர்பு
புலி மார்க் சீயக்காய் பாக்கெட்டில் பொறிக்கப்பட்டுள்ள
புலி படத்திற்கும் உள்ளே உள்ள சீயக்காய் க்கும் உள்ள தொடர்புதான்
சகோதரர்களே இருப்பதைக்கொண்டு போதுமாக்கிகொள்ளுங்கள்
புதிய பிரிவினைகளை உண்டாக்காதீர்கள்
அபுதாகிர், துபாய்
Reply
tntj says:
February 2, 2012 at 00:03
அஸ்ஸலாமு அலைக்கும் (சகோ)அபுதாஹிர் அவர்களே!எனக்கு ஒரு உன்மை தெறியனும் உங்கலுக்கு தவ்ஹீத்வாதிகள்மீது கோபம்மா(அல்லது)இஸ்லாம் மார்க்ம்மீது கோபமா?ஏன் என்ரால் உங்கள் விமர்சணம் அப்படி உள்ளது”முதலில் புரிந்துகொள்ளுங்கள் வஹாபி&தவ்ஹீத் என்ரால் தனியா ஒருமார்க்கம் என்று நிணைக்கவேண்டாம் ஒர் இறை கொள்கை உடையவர்கள் அனைவரும் தவ்ஹீத் வாதிகள்தான் நபிகள்நாயகம்(சல்)அவர்கள் என்னாசெய்தார்கலோ&என்னசெய்யசொண்னார்கலோ அதைதான் அவர்கள் செய்வார்கள்!அவற்கள் எதைசெய்தாலும் மறுமைக்காகதான் இம்மைக்காக அல்ல!அவற்களால் பல சிறுக்கு வேலைசெய்தவற்கள் எல்லாம் திருந்தி ஒர் இறை கொள்கை பக்கம் வந்தவண்னம் உள்ளார்கள்!ஏன் மாட்று மதசகோதர்கள் கூட வந்தவண்னம் உள்ளார்கள்..(அல்லாஹ்ஹீ அக்பர்)உங்கநெஜ்ஜில் கை வைத்து சொல்லுங்கள் அவர்கலால் நமக்கு நன்மை அதிகம்மா தீமையா என்ரு? தீமை ஒன்ரு இரண்டு இருக்கலாம் ஆனால் நன்மைதான் அதிகம் இருக்கும்..ஒரேகொடையில் யார்ராலும் சேரமுடியாது அது எந்த ஜமாத்தாலும் முடியாது.பழனிபாபா அவர்கள் இஸ்லாமியர்கலுக்கு அரசியலும்& துனிவும் கற்று கொடுத்தார் இதை யாரும் மறுக்கமுடியாது ஆனால் மூடநப்பிகை பழக்கத்தை ஒழித்ததில் பெரும் பங்கு இவற்கலை சாரும். இந்தவழிதான் நம்மை சுவற்க்கம் செல்ல வழி வகுக்கும் வேன்டா வெருப்பை விட்டுட்டு நாம் அனைவரு ஒற்றுமையாக இருக்க எல்லாவல்லஇறைவண் இடம் துஃவா செய்கிறேன் ஆமீன்!
Reply
mohamed iqbal says:
February 2, 2012 at 12:41
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வபரகாதஹு,
சகோதரர் அபுதாகிர் அவருடைய கருத்து முழுக்க முழுக்க ஒரு தனிப்பட்ட மனிதரை தாக்கியே உள்ளது.
அதுவும் அவர் கருத்தை பார்க்கும் பொழுது சகோதரர் குதுபுல் ஆலம் அவருக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
சகோதரர் அபுதாகிர் ஒரு தனிப்பட்ட மனிதரின் மீது உள்ள வெறுப்பு உங்களை உண்மையான மார்க்கத்தை தெரிந்து கொள்ள தடுக்கிறது என்ற சந்தேகம் எனக்கு உருவாகிறது சகோதரரே.
நாளை மறுமையிலே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை பார்த்து கேள்வி கேட்கும் பொழுது நான்கள் இன்னார் சொன்னதை பின்பற்றினோம் என்று சொல்ல கூடாது என்ற காரணத்தினால் தான் கீழ் கண்ட வசனத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதர்களுக்காக அருளினான்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்கள் ஆக்கி பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன்- 7:3)
ஆக, அல்லாஹ் இங்கே சொல்வது என்ன..? நாம் குர்ஆன் மற்றும் நபி வழிகள் இவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டுமாம். எந்த அறிஞறையோ, பெரியாரையோ, ஆசிரியரையோ அதற்கு பொறுப்பாக்கி பின்பற்றக்கூடாதாம்
ALLAH KNOWS THE BEST
Reply
mohamed iqbal says:
February 1, 2012 at 12:08
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வபரகாதஹு,
பொதுவாகவே இன்று நம் இஸ்லாமியர்களிடத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நமக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதே.ஆனால் 1980 களுக்கு முன் நம்மிடம் ஒற்றுமை இருந்தாதாகவும் அதற்கு பின்புதான் இஸ்லாமியர்கள் இடத்தில் இருந்த ஒற்றுமை காணாமல் போய்விட்டதாகவும் பரவலான ஒரு நச்சு கருத்து உலாவந்து கொண்டு இருக்கிறது.உண்மையாகவே அப்பொழுது இஸ்லாமியர்கள் இடத்தில் ஒற்றுமை இருந்ததா? ஆம் சகோதரர்களே ஒற்றுமை இருந்தது எவற்றில் சந்தனக்கூடு, கந்தூரி, மீலாது விழாக்கள்,அனாச்சாரங்கள்,பித்ஹதுக்கள் etc,etc,,,,,,இது போன்ற நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் அணைத்து விசயங்களிலும் ஒற்றுமை இருந்தது.
அவர்கள் செய்யும் அன்னசாரங்களை நியாயாபடுத்த அவர்கள் கையாண்ட ஒரு யுக்தி ”ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என்று ஒரு திருக்குர்ஆன் வசனம் கூறுவதாக தமிழகத்தில் நீண்ட காலமாக தவறாக அந்த வசனத்தை கையாண்டு வந்தார்கள்.. அவர்கள் கூறும் வசனம் எது என்று தேடிப்பார்த்தால்… அது இதுதான்..!
“அல்லாஹ்வின் (ஒற்றுமை எனும்) கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள். நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்- 3: 103)”
ஆனால், மேற்கண்ட வசனத்தில் பிராக்கட் போட்டு ‘ஒற்றுமை’யை வலுக்கட்டாயமாக உள்ளே சொறுகித்தான் நோட்டிஸ் அடித்து பிரச்சாரம் புரிந்தார்கள். ‘நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்றும் இதனடிப்படையில் தான் இந்த மத்ஹப் வாதிகள் வாதிட்டு வந்தனர். (இன்னும் இப்படி வெகுசிலர் உள்ளனர்)
“ஓர் ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இஸ்லாம் தடுத்த ஒரு தீமையை செய்தால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்த தீமையை செய்யுமாறு அல்லாஹ் எப்படி கூறுவான்” என்று சிந்தித்த மக்கள் இதுவல்ல ஒற்றுமை என்று தெளியத்துவங்கினர். பிற்காலத்தில் குர்ஆன் தர்ஜுமாக்கள் வந்தவுடன், ஒற்றுமை பற்றியான அந்த வசனத்தை தேடத்துவங்கினர். அதில், ”அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்” என்று தான் அவ்வசனம் கூறுவதை கண்டனர்.
இந்த வசனத்தில், எல்லாம் வல்ல மகத்தான இரட்சகன், “அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்” என்றுதான் கட்டளையிடுகின்றான். மேலும் அல்லாஹ்வின் கயிறு என்பது திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் பற்றி பிடியுங்கள் என்று இயம்புகின்றது என்றும்…
“(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்கிறாரோ, அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2;256)”
…… குர்ஆனில் ஆல்லாஹ்வின் வார்த்தைகள் மூலமே தெளிவும் பெற்றனர்.
எனவே, ‘அல்லாஹ்வின் கயிறை’ அதாவது… “திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே முஸ்லிம்களிடையே ஒற்றுமை உருவாகும்” என்று இங்கே தெளிவாக புரிகிறது.
தொடரும்,,
mohamed iqbal says:
February 1, 2012 at 13:21
தொடர்ச்சி,,
இந்நிலையில்தான், 80-களின் மத்தியில் மதஹப்களுக்கு அப்பாற்பட்ட உண்மையான இஸ்லாம் பற்றி மதரசாவில் தான் கசடற கற்ற கல்வியை கூற முற்பட்ட ஒரு சிலரால்தான் மேற்படி ‘ஒற்றுமைக்கு’ வேட்டு வைக்கப்பட்டது.
ஆனால், “குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச்சொல்வதால் உண்மையில் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்” என்று இஸ்லாத்திற்கு விரோதமான தீய செயல்களில் இருப்போர் அதற்கு நேர் மாறான விளக்கத்தை தருகின்றனர்.இது ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி சகோ.
ஆனால், ‘அல்லாஹ்வின் கயிற்றை’ நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் நமது பிடியை நாம் விட்டு விடாமல், அவர்களையும் பிடிக்குமாறு, நன்மையை ஏவி அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும். அவர்கள் மீறினால், அவர்கள் செய்யும் தீமையை தடுக்கவும் வேண்டும்.இதை நான் சொல்லவில்லை சகோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் திருமறையிலே இவ்வாறு சொலி காட்டுகிறான்.
” நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்- 3 : 104)”
இந்த வசனம் தான் சகோ இப்பொழுது நமக்கு முக்கியம்.அதாவது நன்மையை மட்டும் ஏவுவதோடு மட்டும் அல்லாமல் தீமையையும் சேர்த்து தடுக்க கூடிய கூட்டம் உங்களில் இருக்க வேண்டும் அவர்கள் தான் வெற்றி பெற்றோர் என்று அல்லாஹ் தன் திருமறையிலே சொல்லி காட்டுகிறான்.அதாவது சகோ நாம் ஒருவரை நன்மை செய்யுங்கள் என்று சொல்லும்பொழுது நமக்குள் பிளவோ அல்லது பகைமையோ ஏற்படுவது இல்லை மாறாக தீமை தடுக்க நினைக்கும் போது தான் சகோ இந்த பிரச்சனையே ஏற்படுகிறது.
ஒருவர் வரதட்சணை வாங்கி திருமணம் செய்கிறார் என்று வைத்து கொள்வோம் அவரிடம் நாம் சென்று வரதட்சணை வாங்காதீங்க என்று சொல்லிவிட்டு வந்து விட்டால் பிரச்சனை இல்லை.இது நன்மையை ஏவுதல்.ஆனால் அவரிடம் நாம் சென்று அவர் செய்யும் தவறை சுட்டி காட்டி அது தவறு என்று சொல்லும்போது நமக்கும் அவருக்கும் இடையில் பிளவு ஏற்படும்.உன் வேலைய பாருயா பெருசா புத்தி சொல்ல வந்துட்ட என்று கோபப் படுவார்.இது தீமையை தடுத்தல்.இப்ப சொல்லுங்க சகோ ஏன் ஓரிறை கொள்கையை எடுத்து சொன்னால் பிரச்சனை வருகிறது என்று.
ஆனால் இந்த மத்ஹப் வாதிகள் நண்மையையும் ஏவுவது இல்லை.தீமையையும் தடுப்பதும் இல்லை.ஆனால் இந்த நன்மையை ஏவி தீமையை தடுக்க முயற்சிக்கும் கூட்டத்தை இந்த மத்ஹப் வாதிகள் வஹ்ஹாபிகள்,பிரிவினைவாதிகள்,குழப்பவாதிகள் என்று புனைப்பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்து விட்டனர் சகோஸ்.ஏனென்றால் இந்த மாதிரி ஒரு குரான் வசனம் இருப்பதே அவர்களுக்கு தெரியுமா? என்று நமக்கு தெரியவில்லை
நான் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனால், எந்த அமைப்பு ‘அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடித்து’ இருப்பதாக என் இஸ்லாமிய அறிவு தீர்மாணிக்கிறதோ அவர்களின், ‘நன்மையை ஏவி தீமையை தடுக்கும் செயல்’களில் என்னை தவறாது இணைத்துக்கொள்வேன். இயலாவிடின் அவற்றை செய்வோரை ஆதரிப்பேன்.
Reply
குத்துபுல் ஆலம் says:
February 1, 2012 at 03:34
அஸ்ஸலாமு அலைக்கும்..
இக்பால் ஒரு அழகிய கேள்வியை முன் வைத்து இருக்கிறார்..
“சகோதரர்களே,பொதுவாகவே குரான் மற்றும் ஹதீதை பின்பற்றுபவர்களை பார்த்து ஒரு கேள்வி எழுப்ப படுகிறது.அதாவது உங்களால் பிரிவினை ஏற்படுகிறது,ஊர் ரெண்டு படுகிறது.சொந்த பந்தங்கள் இடையே பிளவு ஏற்படுகிறது..”
இந்த குற்றச்சாட்டு நபிகள் நாயகம் சல்லல்லாஹு வசல்லம் மீதும் சொல்லப்பட்டது அவர் இஸ்லாத்தினை மக்களிடம் எடுத்து வைத்தபோது, அதனால் தான் அவருடைய சொந்த உறவுகளே அவரை கொல்லவும் துணிந்தார்கள்…
தௌஹீத் வாதிகள் அடித்துக்கொண்டு பல பிரிவாக பிரிந்து செல்கிறார்கள் என்பதும் உண்மை தான்
தௌஹீத் வாதிகளுக்குள் பிரிவு என்பது கொள்கையில் உறுதி இல்லாமல் போகும் போது தான் ஏற்ப்படுகிறது.. அவர்கள் தான் இன்று பல தௌஹீத் பிரிவாக நிற்கிறார்கள் கொள்கையில் உறுதியுடன் நிற்பவர்கள் தௌஹீத் என்றும் ஒன்றுதான். கொள்கையில் உறுதி இல்லாத தௌஹீத் வாதிகள் இப்பவே ஒரு குடையின் கீழ நிற்க ஆரம்பித்து விட்டார்கள். எதிர்காலத்தில் இவர்களும் தௌஹீத் எதிர்ப்பவர்கள் பின்னால் ஐக்கியமாகி விடுவார்கள். இன்ஷா அல்லாஹ்.. அப்புறம் இவர்களுக்குள் பிரிவும் பிளவும் வராது
ஆனால் தங்களை தௌஹீத் வாதிகள் என்று சொல்லிக்கொண்டு அதில் உறுதியாக இல்லாதவர்களால் தௌஹீத் வாதிகளுக்குள் பிளவும் பிரிவும் கண்டிப்பாக இருக்கும்.உலகம் அழியும் வரை..ஆனால் நபிகள் நாயகம் சல்லல்லாஹு வசல்லம் காட்டி தந்த உண்மையான தௌஹீத் இறுதி நாள் வரை தனித்து நிற்கும்… இன்ஷா அல்லாஹ்
மத்ஹப் வாதிகளுக்குள் பிரச்சினை இல்லையே என்று சொல்வது தவறு.மத்ஹப் பின்பற்றி அதிலிருந்து வெளியேறியவர்கள் தான் தௌஹீத் வாதிகள்.
ஆனால் இப்பவும் மத்ஹப் கொள்கையில் உள்ள குறைகளை சுட்டி கட்டுபவர்களை வஹ்ஹாபி என்று முத்திரை குத்தி விரட்டுறதும் ஜமாஅத்தை விட்டு ஒதுக்கி வைப்பதும் நடந்து கொண்டுதானே இருக்கு..
வெளியேறிவிட்ட தௌஹீத் வாதிகள் தவிர மீதமுள்ள மத்ஹப் வாதிகளுக்குள் சண்டை சச்சரவு இல்லையே என்று கேக்கலாம்
அதுக்கு காரணம் மத்ஹப் தோன்றிய அந்த காலத்துலேயே பிரச்சினைகள் நடந்து பிரிவும் பிளவும் ஏற்ப்பட்டு இனி தங்களுக்குள் சண்டையும் சச்சரவும் வேண்டாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்..
இது அனைத்தையும் விட “என்னுடைய உம்மத்துக்கள் 73 பிரிவினர்களாக பிரிவார்கள் என்பதும் அதில் ஒரு பிரிவினர் மட்டுமே சுவர்க்கம் செல்லக்கூடியவர்கள் என்றும் சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் சொன்ன பொன்மொழி” அதானால் பிரிவினை என்பது உலகம் இருக்கும் வரை தொடரும்
தௌஹீத் கொள்கையில் உறுதி உள்ள ஒரு கூட்டம் உலகம் அழியும் வரை தனித்தே நிற்கும்.. இன்ஷா அல்லாஹ் வஸ்ஸலாம்
Reply
குத்துபுல் ஆலம் says:
February 1, 2012 at 01:20
..சுண்ணத் ஜாமத் அல்லாஹ் வினாலும் அவ்னின் தூதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் வழி கட்டுதலின் பெயரிலும் இன்றுவரை அல்ஹம்துலிலஹ் நன்றாக உள்ளது……………அப்படி என்றால் நபிகள் சல்லல்லாஹு வசல்லம் அவர்களால் வழிகாட்டப்படாத ஹனபி ஷாபி மாலிகி ஹம்பல்..இந்த பிரிவினை ஏன் வந்தது?……………..இந்த கேள்விக்கு இது வரை பதில் இல்லை..பதில் சொல்ல தெரியவில்லை என்றால் இப்படி தான் எதையாவது சொல்லி திசை திருப்புவார்கள்.இது தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களை சொல்லி கொள்பவர்கள் அன்று முதல் இன்றுவரை செய்து கொண்டு இருக்கிறரர்கள்..இந்த விமர்சனங்கள் … படிப்பவர்கள் நன்கு அறிந்து இருப்பீர்கள் …அல்ஹம்துளில்லாஹ்..மார்க்கம் சம்பந்தமாக பேசும் போது அதை தான் பேச வேண்டும் தேவை இல்லாமல் பேசுவது தான் சுன்னத் வல் ஜமாஅத் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது..அது மட்டும் இல்லாமல் ஒரு செய்திக்கு பதில் தரும் போது அழகிய முறையில் பதில் தர வேண்டும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதும் எழுதுவதும் நல்ல விமர்சனத்துக்கு அழகல்ல….குற்றவாளிகள் என்று வெளியேற்றியவர்களை தான் உங்கள் விமர்சனம் சொல்கிறது நீங்கள் புதியதாக ஒன்றும் சொல்லவில்லை இப்போதும் என் கேள்விக்கு பதில் தர முயலுங்கள்..அதை தான் நான் எதிர் பார்க்கிறேன் ..இன்ஷா அல்லாஹ
Reply
mohamed iqbal says:
February 1, 2012 at 14:58
வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹமதுல்லாஹ்,
@குத்துபுல் ஆலம்
//மத்ஹப் வாதிகளுக்குள் பிரச்சினை இல்லையே என்று சொல்வது தவறு.மத்ஹப் பின்பற்றி அதிலிருந்து வெளியேறியவர்கள் தான் தௌஹீத் வாதிகள்.
ஆனால் இப்பவும் மத்ஹப் கொள்கையில் உள்ள குறைகளை சுட்டி கட்டுபவர்களை வஹ்ஹாபி என்று முத்திரை குத்தி விரட்டுறதும் ஜமாஅத்தை விட்டு ஒதுக்கி வைப்பதும் நடந்து கொண்டுதானே இருக்கு..// மாஷா அல்லா சரியான மற்றும் வரவேற்கப் படவேண்டிய கருத்துக்கள் சகோ.
//மத்ஹப் தோன்றிய அந்த காலத்துலேயே பிரச்சினைகள் நடந்து பிரிவும் பிளவும் ஏற்ப்பட்டு இனி தங்களுக்குள் சண்டையும் சச்சரவும் வேண்டாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்..//
கண்டிப்பாக அவ்வாறு இருந்திருக்க வாய்ப்பு உண்டுசகோ.ஏன் நம்ம ஊரு பள்ளியிலேயே தொப்பி போடாம,நெஞ்சில கை கட்டி இருந்தா,அதஹியாதில் விரலை நீட்டி யாரவது(இது ஷாபி மத்ஹப் வழக்கம்) வைத்து இருந்தால் தொழுக அனுமதிக்க மாட்டார்கள்.பள்ளி வாசலுக்கு முன்னாலேயே rules and regulation எழுதிய ஒரு black board ஒன்னு வச்சிருப்பாங்க.யார் யார் எப்படி தொழுக வேண்டும் என்று.அதாவது அவர்கள் செய்யும் ஒரு செயலை நாமும் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவது.இதற்கு பெயர்தான் ஒட்ருமையா?
//தௌஹீத் கொள்கையில் உறுதி உள்ள ஒரு கூட்டம் உலகம் அழியும் வரை தனித்தே நிற்கும்.. //இன்ஷா அல்லாஹ்
Reply
abuthahir,Dubai says:
January 31, 2012 at 20:37
தூய வடிவில் இஸ்லாம்
பிஜே யையும் பாக்கரையும் அவர்களை சேர்ந்தவர்களையும் வஹாபிகள் என்று தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்
இவர்கள் தவ்ஹீத் என்ற கொள்கையை தவறாக கையாள்பவர்கள் அல்லது தவ்ஹீது வியாபாரிகள் என்று கூறலாம்.
காரணம் இந்த பிரிவில் யாரை எடுத்துக்கொண்டாலும் தூய வடிவில் இஸ்லாம் என்றே வியாபாரத்தை தொடங்குவார்கள்
கொம்புத்தேன், மலைத்தேன், சுத்தமான தேன், அய்யா வாங்க அம்மா வாங்க என்று நரிக்குறவன் விற்ப்பானே அதுபோல, மோடிமஸ்தான் வேலையப்போல, கொரளி வித்தைக்காரனைப்போல,
இவர்களிடம் உள்ள ஹதீஸு மட்டும் தான் உண்மையானது (ஸஹிஹ்) மற்றவர்களிடம் உள்ளது அனைத்தும் பொய்யானது (லயீப்)
இவர்களின் பிரிவுக்குள்ளேயே பிஜேக்கு ஒரு ஹதீஸு, பாக்கர்க்கு ஒரு ஹதீஸு,எம்கீ, எஸ்கே, கேகே, என்று ஒரு பட்டியல் போடலாம் அதாவது ஒருவர் மற்றொருவருடன் மறுக்கக்கூடிய ஹதீஸ்கள்.
அதுலேயும் நேற்று வரை சஹி, அல்லது சாஹிஹுல் ஹஸன் என்று பீத்திக்கொண்டவர்கள் திடீரென்று
இல்லை, இல்லை,அதில் மூன்றாவது அறிவிப்பில் இடம்பெற்றுள்ள நான்காவது நபர் வாய்பேச இயலாதவர் ஆகையால் இது லயீப் (அது LIFE அவ்வளவுதேன்) என்று கையை விரித்து விடுவார்கள்.
அதுவரைக்கும் அது பிகாரம் செயல் பட்டவர்களின் செயல்கள் “அதோ கதிதான் ”
அதற்காக தவறு என்று தெரிந்தால் சொல்லாமல் இருப்பது குற்றம் இல்லையா ? என்று ஒரு கேள்வி கேட்கலாம்
ஏன் இவர்கள் ஏழு வருடம் மதரஸாவில் குப்பை கொட்டினார்களே அப்போது தெரியாதா ?
அல்லது இருபது ஆண்டு காலம் ஹதீஸுக் கலையை கரைத்துகுடித்துக்கொண்டு தீன் பிரச்சாரம் என்ற பெயரில் வீண் பிரச்சாரம் செய்தார்களே அப்போதாவது தெரியாதா எது பொய்யானது ? எது மெய்யானது ? என்று
ஆக இவர்களுக்கே முழுவதும் விளங்காத மார்க்கம் குப்பனுக்கும் சுப்பனுக்கும் எப்படி விளங்கும் ? எப்படி விளங்க வைப்பார்கள் ?
கேட்டால் தோண்ட தோண்ட வந்துகொண்டே இருக்குதாம் ஒரு வேலை இருட்டில் இருந்து கொண்டு வஹாபிகளே எழுதிக்கொள்கிறார்களோ என்னவோ தெரியவில்லை!!!!
பீஜே ஜமாஅத் சொல்லும் ஹதீஸ் எல்லாம் பாக்கருக்கு பொய் பாக்கர் எஸ்கே இவர்கள் சொல்லும் ஹதீஸு அனைத்தும் பிஜே வுக்கு பொய்
மொத்தத்தில் இந்த வஹாபிகள் தான் பொய்யர்கள்
நம் தாய் தந்தையர் நமக்கு மார்க்கம் பற்றிய போதிய அறிவுடன் வளர்த்து இருக்கிறார்கள் அதற்க்கு மேல் மார்க்க சான்றோர் ( உலாம ) பலர் இருக்கிறார்கள் அறிவு பகர்வதற்க்கு,
வேண்டாம் இவர்கள் சவகாசம் இவர்கள் நம்மை வழிகேட்டில் சேர்த்துவிடுவார்கள்.
அபுதாகிர் துபாய்
Reply
mohamed iqbal says:
January 31, 2012 at 12:14
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,
சகோதரர்களே,பொதுவாகவே குரான் மற்றும் ஹதீதை பின்பற்றுபவர்களை பார்த்து ஒரு கேள்வி எழுப்ப படுகிறது.அதாவது உங்களால் பிரிவினை ஏற்படுகிறது,ஊர் ரெண்டு படுகிறது.சொந்த பந்தங்கள் இடையே பிளவு ஏற்படுகிறது.ஆனால் மத்ஹப் பின்பற்றுபவர்களிடத்தில் மட்டும் ஏன் இந்த பிரச்சனை ஏற்படுவது இல்லை? என்று ஒரு கேள்வி உருவாகிறது.
ஏன் மத்ஹப் வாதிகளிடம் இந்த பிரச்சனை இல்லை?யாருக்காவது காரணம் தெரியுமா சகோஸ்?
Reply
ஏ.கே.அலியார் பாஷா says:
January 31, 2012 at 12:39
தாங்கலுக்கு அதற்கான காரனம் தெரிந்தால் விபரிக்கவும் சகோதரர் முஹம்மது இக்பால் அவர்கலே…..!plz asr
Reply
வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:
January 31, 2012 at 13:41
வ அலைக்கும் ஸலாம் இக்பால்!
தங்களுக்கு எழும் கேள்வி நியாயமானதே! நீங்கள் குறிப்பிடும் செய்தியில் உண்மை இல்லாமலில்லை! இதற்கு காரணம் உண்டு, அதாவது மதஹபை பின்பற்றுவோரிடம்.. “மதஹப்” எனும் (நான்கு) பிரிவில் ஒரேஒற்றுமை. அவரவர்களும் அவரவரின் இமாமை அச்சுப்பிசகாமல் பின்பற்றுகிறார்கள். ஆனால், தவ்ஹீத் எனும் ஒரு ‘கொள்கை’யில் நானூறுக்கும் மேபட்ட பிரிவுகள். இங்கு ஒரு (தவ்ஹீத்) இயக்கம் உடைந்தால்.. உடனே வேறு பல இயக்கம் உருவாகிறது! ஆனால், மத்ஹபில் விரிசல் இல்லை, உட்பூசல்கல் இல்லை, ஒற்றுமை மேலோங்கி நிற்கிறது.
ஆனால், குழப்பவாதிகள் என்று தவ்ஹீத்வாதிகள் மீது குற்றம்சாட்டும் மத்ஹப்வாதிகளுக்கு ஒன்றை சொல்கிறேன்! அழகான மார்க்கத்தில், அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் மட்டுமே பின்பற்றி வந்த மக்களுக்கிடையே.. (நான்குவகையான) மத்ஹபின் நுழைவினூடேதான் பிரிவினையும், குழப்பங்களும் இஸ்லாத்தில் நுழைந்தன என்பதை விளங்க.. சிறு அறிவே போதும்.
தூய மார்க்கத்தை எத்திக்கும் எத்திக்க… உலகமெங்கும் பயணித்து, ஊணின்றி, உறக்கமின்றி, அல்லாஹ்வையும், மருமையில் அவனின் பொருத்தத்தையும் என்னி, தரணியெங்கும் மார்க்கத்தை நிலைநாட்ட அரும்பாடுபட்ட சஹாபாக்களையும், உலமாக்களையும், இமாம்களையும் மதிக்கிறேன். ஆனால்.. இமாமைப் பின்பற்றுகிறேன் எனச்சொல்லி, தவ்ஹீத் எனும் ‘பொக்கிஷத்தை’ பிறக்கனிபேன் என்பது.. மடமை! நான் தவ்ஹீத் என்றது இயக்கங்களை இல்லை.
முன்பு, தகவல் தொழில் நுட்பம், தொலை தொடர்பு இல்லா காலத்தில்.. அறியாமையில், கண்டதெல்லாம் மார்க்கம், கேட்டதெல்லாம் மார்க்கம் என்றிருந்ததில் தவறில்லை. அதில் இறைவன் நம்மீது குற்றம் பிடிக்கப்போவதில்லை. ஆனால், இன்று அறிந்த்துக் கொள்ள அத்தனை வசதிகளுமிருந்த்தும்.. பித்அத் எனும் அறியாமையில் மூழ்கி இருப்பது நிச்சயம் கைசேதமே!
எல்லாம்வல்ல இறைவன், நம்மை… நன்மை-தீமை தெளிவு கண்டு, நன்மையை பேனும் நன்மக்களாகவும், இறைவனின் பொருத்தம் மிக்கவர்களாகவும் ஆக்கி அருள்வானாக!
Reply
mohamed iqbal says:
February 1, 2012 at 15:10
@வசந்த வாசல் அ.சலீம் பாஷா,
//ஆனால், குழப்பவாதிகள் என்று தவ்ஹீத்வாதிகள் மீது குற்றம்சாட்டும் மத்ஹப்வாதிகளுக்கு ஒன்றை சொல்கிறேன்! அழகான மார்க்கத்தில், அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் மட்டுமே பின்பற்றி வந்த மக்களுக்கிடையே.. (நான்குவகையான) மத்ஹபின் நுழைவினூடேதான் பிரிவினையும், குழப்பங்களும் இஸ்லாத்தில் நுழைந்தன என்பதை விளங்க.. சிறு அறிவே போதும்//
அப்படிஎன்றால் பிரிவினைக்கு அடித்தலமிட்டதே இந்த மத்ஹப் வாதிகள் என்று சொல்றீங்க.அப்படி போடு அருவாள. மாஷா அல்லாஹ் சும்மா நெத்தியடி கருத்துக்கள் சகோ.
//தூய மார்க்கத்தை எத்திக்கும் எத்திக்க… உலகமெங்கும் பயணித்து, ஊணின்றி, உறக்கமின்றி, அல்லாஹ்வையும், மருமையில் அவனின் பொருத்தத்தையும் என்னி, தரணியெங்கும் மார்க்கத்தை நிலைநாட்ட அரும்பாடுபட்ட சஹாபாக்களையும், உலமாக்களையும், இமாம்களையும் மதிக்கிறேன்.//
என்னுடைய கருத்தும் இதுவே சகோ.
//இமாமைப் பின்பற்றுகிறேன் எனச்சொல்லி, தவ்ஹீத் எனும் ‘பொக்கிஷத்தை’ பிறக்கனிபேன் என்பது.. மடமை!//நச் பாயிண்ட்
//எல்லாம்வல்ல இறைவன், நம்மை… நன்மை-தீமை தெளிவு கண்டு, நன்மையை பேனும் நன்மக்களாகவும், இறைவனின் பொருத்தம் மிக்கவர்களாகவும் ஆக்கி அருள்வானாக!//ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
உங்கள் அருமையான கருத்துக்கு ஜஜாகல்லாஹ் ஹைரன்
Reply
abuthahir Dubai says:
January 29, 2012 at 12:55
குரு சிஷ்யன் யாரு ?
சமுதாயம் சரியில்லை, மதஹபு வேண்டாம் குரானையும் நபிவழியையும் பின்பற்றுவோம் என்று சொல்லித்தானே வஹாபிகள் உள்ளே நுழைந்தீர்கள்
நீங்கள் செய்த சாதனை என்ன?
குபுராவும் சக்கிலவுமா ?
ஜமாத்தார்களின் பணத்தில் கட்டிய பள்ளிகளை உங்கள் ட்ரஸ்ட் க்கு எழுதிக்கொள்கிறேர்களே அதுவா ?
இல்லை கள்ளகாதலனையும் காதலியையும் இணைத்துவைக்கிறீர்களே அதுவா ?
ஊர் ஊருக்கு கட்டபஞ்சாயத்து பண்ணுகிறீர்களே அதுவா ?
இல்லை கன்னி பீபி தர்காவிற்க்கு
சந்தனகூடு எடுத்தீர்களே அதுவா ?
இல்லை பொற்பாதம் தொட்டு என்று நோட்டீஸ் அடிக்கிறீகளே அதுவா ?
இல்லை பாலியல் சேட்டைகளில் நித்யானந்தாவை மிஞ்சி நிட்கிறீர்களே அதுவா ?
அன்று பிஜே மத குரு பாக்கர் மத சிஷ்யன்
இன்று பாக்கர் காமகுரு, பிஜே சிஷ்யன் ( நாம் சொல்லவில்லை வஹாபிகள் சைட் தான் சொல்கிறது )
அன்று இஸ்லாம் ஒரு இனிய மார்கத்தில் பாக்கர் இயக்கம் பிஜே நடிப்பு இன்று பிஜே இயக்கம் பாக்கர் நடிப்பு
யாரிடம் வந்து குரு சிஷ்யன் கதை
எப்போதுமே வஹாபிகளுக்கு சொந்த புத்தியும் சொந்த சரக்கும் இருந்ததில்லை
மார்க்க விசயத்திற்கு கூட குரானையோ, ஹதீசையோ பார்க்க மாட்டார்கள் மாறாக அண்ணன் என்ன சொல்கிறார் தம்பி என்ன சொல்கிறார் என்று கேட்டே பழகிப்போன பாலாகிப்போன ஜென்மங்கள் தான் வஹாபிகள்
கட் காப்பி செய்தே பழக்கப்பட்டவர்கள்
அபுதாகிர் துபாய்
Reply
ஏ.கே.அலியார் பாஷா says:
January 30, 2012 at 11:19
மர்ஹும் பழனிபாப என்னும் மேதை உயிரோடு இருந்திரந்தால் இந்த குரு சிஷ்யன் பிரிவினை வாதம் கட்ட பஞ்ஞயத்து எப்போதே அழிந்து போய்யிருக்கும் மர்க்கஸ் கட்டுமானபனி முடியும் முன்பே இத்தனை பிரச்சினை திறப்புவிழ கன்டபாடு நம்மை வேட்டையாட மற்றமததுக்காரர்கள் தேவையில்லை நாம் நம்மையே வேட்டையாடிக்கொல்வோம் அன்பர்கலே தவரு எல்லேரிடமும் உன்டு பேசிதீர்கவேன்டிய விசியத்தை பிரித்துக்கொன்டு போவது நல்லது இல்லை இரு சமுதாயமும் ஒருவர் மற்றவரை குரைகூரிக்கொன்டு இருக்கும் போது நமது ஊரில் மூன்றவது சமுதாயம் >முரீது வியாபாரிகளின் வியாபாரம்< ஓஹோ என்று மற்ற ஊர்காரர்கள் என் இடம் விசாரிக்கும் அழவிற்கு உயர்ந்துல்லது எல்லோரும் சேர்ந்து இது தவரு என்று சொல்லி நிருத்த வழி செய்யலாமே சொந்தம் பந்தம் என்ற பாகுபாடு இல்லாமல் தவரை தவரு என்று சொல்லி தெழிவு படித்துவோம்.
Reply
வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:
January 30, 2012 at 14:35
முரீது முல்லாவிடம் 10ஆண்டுகளுக்கு முன்னரே… வெளியூரிலிருந்து உலமா பெருமக்கள் வந்திருந்தப்போது பள்ளியில் வைத்து கண்டித்தபோது, மிகவும் ஆணித்தரமாகவும், அழகாகவும் சொல்லி விட்டார். “நான் யாரையும் அழைக்கவில்லை.. உங்க பொண்டாட்டிப் பிள்ளைகளை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, என்னிடம் ஏன் சட்டம் பேசுறீங்க” என்று! தர்காவில்கூடத்தான் கூட்டம் அலைமோதுகிறது தர்காவில் யாரும் எதுவும் பேசுவதில்லையே! நம் மக்களைப்பார்த்துத்தானே சரி எது, தவறு எது எனப் பிரச்சாரம் செய்கிறோம்! வியாபாரிகள் விற்பனையில் மட்டுமே கவணமாய் இருப்பார்கள். நாம் நுகர்வோரிடம்தான் நல்லது கெட்டதை எடுத்துச்சொல்லணும்.
Reply
முஹம்மது says:
January 30, 2012 at 15:48
இதை்தான் சில மாதங்களுக்கு முன்பு ஆதம் சரீப் தர்கா முன் நின்று இது தவறு மார்க்கதிற்கு புறமான செயல் என்று எடுத்துச் சொன்னார். அப்போது யார் இவர் தர்க பேரவர்களை தடுப்பது என்று ஊரே பேசியது. நீங்களும் சொல்ல மாட்டீர்கள் சொல்பவரையும் ( தவ்ஹித் கொள்கை உள்ளவரையும். ) ஊரை பிரிக்கிற்ங்களா என்று பேசுவது, இப்படியே பேசி பேசி செல்பவர்களையும் தடுப்பதே வேலை.
Reply
ஏ.கே.அலியார் பாஷா says:
January 31, 2012 at 09:38
mr.முஹம்மது தாங்கள் பதில் வரவேற்கதக்கது வி.களத்தூர்.கோம் மூலம் அவர் அவர் உனர்வுகலை பகிர்ந்து கொல்ல ஓர் அறிய வாய்பு மீதம் உள்ள நன்பர்கலும் தயிரியமாக தாங்கள் கருத்துக்கலை எழதலாம்
Reply
ஏ.கே.அலியார் பாஷா says:
January 31, 2012 at 11:01
சலீம் பாஷா அவர்கலே தாங்கள் பதிலில் ஏதோ ஓர் உள்னோகம் தெரிகிரது(அழகாகவும் சொல்லிவிடார்)என்ற வசனத்தை பார்கும்போது முரீத் வியபாரி தாங்கலுக்கு சொந்தமாக இருக்கலாமோ?அதனால் அவர் செய்வதை நியாயபடுத்தி எழதுகிராயே என்ற சந்தேகம் வருகிரது.முரீது வியாபாரம் செய்வது அவர் சொந்தபிறச்சினை நமது ஊரைவிடு வெளியில் எங்கு வேன்டும் என்றலும் செய்யட்டும் பள்ளிவாசல் முன்புரம் வேன்டம் என்று சொல்கிரேன் இப்படியே எல்லோரும் கன்டுக்கொல்லாமல் போய் விட்டால் ஜமாத் என்று இருப்பதே waste
Reply
வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:
January 31, 2012 at 13:53
அலியார் அண்ணே… என்ன அப்படி சொல்லிட்டீங்க! அவர் கருத்தில், அவர் ஆழமாகவும் அழகாகவும் சொன்னார்.. என்பதில் மாற்றுக்கருத்தில்லை! உறவு, அன்பு இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது ஷிர்க் இல்லாத தூய மார்க்கம்! இங்கே உள்நோக்கம் ஏது அண்ணே!
Reply
al-fathah says:
January 30, 2012 at 18:12
அஸ்சலாமு அழைக்கும்.
சகோதரர் அபுதாகிர் அவர்களுக்கு . தொவ்ஹித் என்பது பீஜயும் பார்க்கரும் என்பது அர்த்தம் இல்லை. ..அது நபிகள் நாயகம் பின்பற்றிய கொள்கை நாம் நபிகள் நாயாககத்தின் கொள்கைகளை மட்டுமே பார்க்க வேண்டும்.
Reply
குத்துபுல் ஆலம் says:
January 29, 2012 at 02:03
சுண்ணத் ஜாமத் அல்லாஹ் வினாலும் அவ்னின் தூதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் வழி கட்டுதலின் பெயரிலும் இன்றுவரை அல்ஹம்துலிலஹ் நன்றாக உள்ளது……………அப்படி என்றால் நபிகள் சல்லல்லாஹு வசல்லம் காலத்தில் இல்லாத ஹனபி ஷாபி மாலிகி ஹம்பல்..இந்த பிரிவினை ஏன் வந்தது?……………..இதான் கேள்வி.. இதற்க்கு பதில் தராமல் இவங்களுக்குள் அடிச்சிக்கிறாங்க
”ஒருவர் விரலை மடக்கி ஆட்டவேண்டும் என்பார் மற்றவர்
ஆட்டிக்கொண்டே மடக்கவேண்டும் என்பார்”’
”ஒருவர் ஆமீன் என்று பள்ளிவாசல் அதிரும்படி கத்து என்பார் (அல்ஹம்து சூராவிற்க்குபிறகு) மற்றவர் இமாம் துவா ஓதினால் அமீன் கூறாதே என்பார்”
அப்படின்னா இந்த வித்தியாசங்கள் மதஹப் குள்ளயே இருக்கே அது எப்படி?……………..அன்று குரு சிஷ்யர்களா இருந்தவர்கள் தான் தங்களுக்குள் அடித்துக்கொண்டு நான்கு வழியை உண்டாக்கி கொண்டார்கள்…மத்ஹப தோன்றிய வரலாறு படிசிப்பருங்க புரியும்…………………………………………”" இதான் கேள்வி இதற்க்கு பதில் தராமல் இவங்களுக்குள் அடிச்சிக்கிறாங்க
”ஒருவர் விரலை மடக்கி ஆட்டவேண்டும் என்பார் மற்றவர்
ஆட்டிக்கொண்டே மடக்கவேண்டும் என்பார்”’
”ஒருவர் ஆமீன் என்று பள்ளிவாசல் அதிரும்படி கத்து என்பார் (அல்ஹம்து சூராவிற்க்குபிறகு) மற்றவர் இமாம் துவா ஓதினால் அமீன் கூறாதே என்பார்”
அப்படின்னா இந்த வித்தியாசங்கள் மதஹப் குள்ளயே இருக்கே அது எப்படி?……………..அன்று குரு சிஷ்யர்களா இருந்தவர்கள் தான் தங்களுக்குள் அடித்துக்கொண்டு நான்கு வழியை உண்டாக்கி கொண்டார்கள்…மத்ஹப தோன்றிய வரலாறு படிசிப்பருங்க புரியும்…………………………………………”"
நல்ல இருக்கே நியாயம்!!! தௌஹீத் மார்கஸ் பற்றி செய்தி போட்டு இருக்காங்க இங்க வந்து தேவை இல்லாம நீங்க விமர்சனம் பண்ணிட்டு
சகோதரர்களே வஹாபிகளோடு, மான மரியாதை மிக்க சுன்னத்துவல் ஜமாத்தினரையும், , ஜமாஅத்தில் உலாமா பெரியார்களையும்,இணைத்து பேசாதீர்கள்
…..
இதுல எங்களை சொல்றீங்க…….
Reply
abuthahir, Dubai says:
January 27, 2012 at 15:29
வஹாபிகளின் இந்த வலைத்தளங்களுக்கு பெண்களும் சிறார்களும் செல்லவேண்டாம்
http://www.mujahidsrilanki.net/
http://poyyantj.blogspot.com/
http://onlineintj.com/
http://sengisonline.blogspot.com
நன்றி
அபுதாகிர், துபாய்
Reply
abuthahir Dubai says:
January 27, 2012 at 12:41
நானும் உங்களைப்போல பொது மனிதன் தான் எந்த இயக்கத்தையும் சாராதவன்
இங்கு காணவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்,
ஹனபி ஜமாத்தும், ஷாபி ஜமாத்தும் வலை விரித்து அடித்துக்கொள்வதில்லை
தப்லீக் ஜமாத்தும் தரீகா வாதிகளும் தாறுமாறாக பேசியதில்லை
ஆனால் வஹாபியர்கள் அப்படியில்லை நான்கு மதகபு வேண்டாம் என்று நாற்பது இயக்கம் கண்டவர்கள்
பீஜே தவ்ஹீத், பாக்கர் தவ்ஹீத், எஸ்கே, எம்கே, வோய்கே,
இப்படி பென்ஸ் கார் சீரியஸ் போல எத்தனை எத்தனை
வகையான தவ்ஹீத். வலைத்தளம் விரித்து அடித்துக்கொள்ளும் வம்பர்கள்
இவர் சொல்லும் ஹதீஸை அவர் பொய் என்பார், அவர் சொல்லும் ஹதிஸை இவர் பொய் என்பார்.
ஒருவர் விரலை மடக்கி ஆட்டவேண்டும் என்பார் மற்றவர்
ஆட்டிக்கொண்டே மடக்கவேண்டும் என்பார்
ஒருவர் நெஞ்சில் கட்டவேண்டும் என்பார் மற்றவர் விலாவில் கட்டவேண்டும் என்பார்
ஒருவர் டவுசர் போட்டு தொழலாம் என்பார்
மற்றவர் தொப்பி போடாமல் தொழு என்பார்
ஒருவர் ஆமீன் என்று பள்ளிவாசல் அதிரும்படி கத்து என்பார் (அல்ஹம்து சூராவிற்க்குபிறகு) மற்றவர் இமாம் துவா ஓதினால் அமீன் கூறாதே என்பார்
ஒருவர் சஹாபிஹலையும் பின்பற்ற வேண்டும் என்பார்
மற்றவர் வஹாபிகளை பின்பற்றுவதே மோட்சம் என்பார்
ஒருவர் குபுரா என்பார் மற்றவர் ஷகீலா என்பார்
ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு – அது
“ ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் “
சகோதரர்களே வஹாபிகளோடு, மான மரியாதை மிக்க சுன்னத்துவல் ஜமாத்தினரையும், , ஜமாஅத்தில் உலாமா பெரியார்களையும்,இணைத்து பேசாதீர்கள்
நன்றி.
அபுதாகிர், துபாய்.
Reply
வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:
January 27, 2012 at 10:56
ஒரு விசயம், அல்லது ஒரு செய்தி அதிகமாக விமர்சிக்கப்படுகிறதென்றால்… அது அனைவராலும் ஆழமாக கவனிக்கப்படுகிறதென்றே பொருள்! அந்த வகையில், வி.களத்தூர்.காமில் இதுவரை அதிகமான கருத்துரைக்கும், விமர்சனத்துக்கும் உட்பட்டச் செய்தி ‘தவ்ஹீத் மர்கஸ்’ செய்திதான். முன்பொருமுறை 30க்கும் மேற்பட்ட கருத்துரையும், இப்போது கிட்டத்தட்ட இருபதை நெருங்கியும்..!
நல்ல சத்தான விமர்சனங்களே சமுதாயத்தை மேம்படுத்தும்! சமூகத்தை உயர்த்தும்!!
ஆனாலும்.. ஒரு தாழ்மையான (குற்றச்சாட்டு) கருத்து..! நான் அறிந்தவரை.. த,த,ஜ இயக்கத்தினர், ஒரு சமுதாய பிரச்சனையை முன்வைத்து (மாநாடு, கண்டனக்கூட்டம், ஆர்ப்பாடம், ரத்ததானம் என..) அழைக்கையில்.. எல்லா அமைப்பினரும், இயக்கத்தினரும், எந்த அமைப்பையும் சாராத பொதுமக்களும், திரளாக வந்து ஒத்துழைப்பை தந்து சிறப்பிக்கும்போது… பிற அமைப்பினரால் அழைக்கப்படும் எந்த சமுதாய நிகழ்விலும் த,த,ஜ-வினர் கலந்துக்கொள்ளாமல் புறக்கனிப்பது வருத்தத்திற்குரியதே! அது போகட்டும்.. அவர்களின் (பிடிவாத) கொள்கை அப்படியாக இருக்கலாம். ஆனால்.. இந்த(விருப்பு-வெறுப்பு)நிலை நம் சொந்த ஊரில் வேண்டாம். நமதூரிலாவது, பொதுப்பிரச்சனையை சேர்ந்தே கையாள்வோமாக! தவ்ஹீத் வளர்ர்சி செழித்தோங்கி நமதூரிலும் மறுமலர்ச்சி நிலவ நானும் பிரார்த்திக்கிறேன்! சமுதாய ஒற்றுமையே தலையாய ஒற்றுமையாக இருக்கட்டும். இன்ஷா அல்லாஹ்!!
Reply
குத்துபுல் ஆலம் says:
January 27, 2012 at 03:07
சுண்ணத் ஜாமத் அல்லாஹ் வினாலும் அவ்னின் தூதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் வழி கட்டுதலின் பெயரிலும் இன்றுவரை அல்ஹம்துலிலஹ் நன்றாக உள்ளது..அப்படி என்றால் நபிகள் சல்லல்லாஹு வசல்லம் காலத்தில் இல்லாத ஹனபி ஷாபி மாலிகி ஹம்பல்..இந்த பிரிவினை ஏன் வந்தது? இது ரசூலுல்லாஹ் வழி கட்டுதல் தானா? சகோதரர் இப்ராகிம் தெளிவு படுத்தினால் நல்லது நான் அறிந்து கொள்வேன்
Reply
குத்துபுல் ஆலம் says:
January 27, 2012 at 02:36
சுட்டிக் கட்டியதற்கு நன்றி சலீம் அவர்களே …தொடர்பு கொள்ளவும்..0507718669
Reply
MOHAMED IBRAHIM says:
January 27, 2012 at 00:57
hi jamil which 1 important in our village u know that in all our tamil nadu trihy tawhit jamath ,cheenai tawhit jamath like a v.kalatur tawhit jamath
Reply
MOHAMED IBRAHIM says:
January 27, 2012 at 00:51
வசந்தவாசல் சலீம் அவர்களே நீங்கள் த்வ்ஹீது &சுண்னத் ஜாமத்தை இணையாக ஒன்றாக நினைக்கவேண்டாம் த்வ்ஹித் பி ஜே அவார்களை சார்ந்தது அவர்களின் வழி காட்டுதிலில் நடக்கிறது ஆனால் சுண்ணத் ஜாமத் அல்லாஹ் வினாலும் அவ்னின் தூதர் நபி ஸல்ல்லாஹ் அலைஹ் வஸ்ஸலம் அவர்களின் வழி கட்டுதலின் பெயரிலும் இன்றுவரை அல்ஹம்துலிலஹ் நன்றாக உள்ளது
Reply
mohamed iqbal says:
January 28, 2012 at 15:25
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ் வ பரகாதஹு,
@Mohamed Ibrahim,
// த்வ்ஹீது &சுண்னத் ஜாமத்தை இணையாக ஒன்றாக நினைக்கவேண்டாம் த்வ்ஹித் பி ஜே அவார்களை சார்ந்தது அவர்களின் வழி காட்டுதிலில் நடக்கிறது ஆனால் சுண்ணத் ஜாமத் அல்லாஹ் வினாலும் அவ்னின் தூதர் நபி ஸல்ல்லாஹ் அலைஹ் வஸ்ஸலம் அவர்களின் வழி கட்டுதலின் பெயரிலும் இன்றுவரை அல்ஹம்துலிலஹ் நன்றாக உள்ளது\\
சுன்னத் வல் ஜமாஅத்(பெயர் தாங்கிகள்) என்று பெயர் மட்டும் தான் உள்ளது.பண்ணுவது எல்லாம் சுன்னாவிற்கு மாற்றமாக.சுன்னத் வல் ஜமாத்திற்கு(பெயர் தாங்கிகள்) எதிராக ஒரு மிகப்பெரிய பட்டியலையே தயார் பண்ணலாம் சகோ.அந்த அளவிற்கு அவங்க பண்ற செயல்களுக்கு எதிராக matters இருக்கு.வேணும்னா?சொல்லுங்க லிஸ்ட் தரேன் insha allah.
Reply
jamil basha riyath says:
January 26, 2012 at 21:21
its the important 4r in our village….?.so many problem in our village.u people r create another problem.
Reply
abuthahir Dubai says:
January 26, 2012 at 01:45
நண்பர்களின் கருத்திற்கு மிக்க நன்றி !
தொடங்கிய இடத்திற்கு வந்துதான் ஆகவேண்டும்
காலத்தின் அருமையை கருத்தில் கொண்டு
அவர்கள் வசைபாடும் லிங்க் கினை கீழே கொடுத்துள்ளேன் பார்த்துக்கொள்ளவும்
அது அவர்களின் பரிணாம வளர்ச்சியினை பற்றிச் சொல்லும்.
நன்றி
அபுதாகிர், துபாய்
http://poyyantj.blogspot.com/
http://onlineintj.com/
http://sengisonline.blogspot.com/
Reply
வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:
January 26, 2012 at 14:48
நட்புமிகு அபுதாஹிர்..! அஸ்ஸலாமு அலைக்கும்!
நீங்கள் மேலே குறிப்பிட்ட அனைத்து வலைத்தளமும், ஒரே இயக்கத்தவர்கள் இயக்கும் தளம்தான்! ஒரு மின்னஞ்சல் முகவரி இருந்தால் ஒரு பைசா செலவின்றி இரண்டு நிமிடத்தில் ஒரு வலைத்தளம் தொடங்கலாம் என்பதும், அதே நிமிடமே உங்கள் கருத்துக்கள் (எதுவாயிருப்பினும்)
வெளியிடலாம் என்பதும் உங்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை!
ஆனால், ஒன்று தெரியுமா? பிற சமுதாயத்தினரைவிட.. நம்மவர்களே, வலையில் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், அதில் சில தரித்திரங்களும் அமர்ந்து, ஒருவர்மீது ஒருவர் சேற்றை வாரி இரைப்பதற்கே வலை தொடங்கியிருக்கின்றன. பாவம்.. இதுவரை நீங்கள், அந்த ‘வளை’யில் சிக்கித்தவித்திருக்கிறீகள் போலிருக்கிறது. அதற்காக நான் யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ பேசுவதாய் என்ன வேண்டாம். நான் எந்த குறிப்பிட்ட இயக்கத்தைச் சார்ந்தவனுமில்லை! நன்மைப் பயக்கும் நல்லதை சொல்லும், செய்யும் யாவருக்கும் நான் நன்பன்!
Reply
mohamed iqbal says:
January 28, 2012 at 13:11
வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹமதுல்லாஹ் வ பரகாதஹு,
@ வசந்த வாசல் அ.சலீம் பாஷா,
/ /அதற்காக நான் யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ பேசுவதாய் என்ன வேண்டாம். நான் எந்த குறிப்பிட்ட இயக்கத்தைச் சார்ந்தவனுமில்லை! நன்மைப் பயக்கும் நல்லதை சொல்லும், செய்யும் யாவருக்கும் நான் நன்பன்!//
சகோ உங்களுடைய இந்த வரிகளுக்கு நான் முற்றிலும் உடன் படுகிறேன்.என்னுடைய எண்ணமும் அதுதான்.நானும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை சார்ந்தவன் அல்ல.எந்த ஒரு இயக்கமும் நல்ல காரியங்களை செய்யும்பொழுது அதை நாம் இயக்கம் சாராமல் மனமுவந்து பாராட்டத்தான் வேண்டும்.ஒரு குறிப்பிட்ட இயக்கத்தவர்கள் செய்தார்கள் என்பதற்காக அதை வெறுப்பதோ அல்லது ஒரு புனைப்பெயர் சூட்டி அழைப்பதோ எனபது வெறுக்க தக்க விஷயம் என்பதில் துளி கூட நமக்கு சந்தேகம் இல்லை.குரான் மற்றும் ஹதீதை பின்பற்றும் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் நம் தமிழகத்தில் ஓரிறை கொள்கையின் வளர்ச்சி மிக அபரிவிதமாக இருக்கும் என்பது என் கருத்து.இன்ஷா அல்லாஹ் அதற்காக நாம் துஆ செய்வோம்.
//ஆனாலும்.. ஒரு தாழ்மையான (குற்றச்சாட்டு) கருத்து..! நான் அறிந்தவரை.. த,த,ஜ இயக்கத்தினர், ஒரு சமுதாய பிரச்சனையை முன்வைத்து (மாநாடு, கண்டனக்கூட்டம், ஆர்ப்பாடம், ரத்ததானம் என..) அழைக்கையில்.. எல்லா அமைப்பினரும், இயக்கத்தினரும், எந்த அமைப்பையும் சாராத பொதுமக்களும், திரளாக வந்து ஒத்துழைப்பை தந்து சிறப்பிக்கும்போது… பிற அமைப்பினரால் அழைக்கப்படும் எந்த சமுதாய நிகழ்விலும் த,த,ஜ-வினர் கலந்துக்கொள்ளாமல் புறக்கனிப்பது வருத்தத்திற்குரியதே//
மிக அருமையான வரிகள் சகோ.என்னுடைய எண்ணங்களை பிரதிபலிப்பது போல் உள்ளது உங்கள் கருத்து.
ஜஜாகல்லாஹ் ஹைர்
Reply
குத்துபுல் ஆலம் says:
January 26, 2012 at 01:37
இந்தப்பணிக்கு உதவ நாடினால் துபையில் மு. முஹம்மத் யூசுப் அவர்களை நாடவும்..அபுதாபியில் என்னை நாடவும்..0507718669
Reply
வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:
January 26, 2012 at 13:58
அல்ஹம்துலில்லாஹ்!
‘நாடவும்’ எனும் சொல் தவிர்த்து, அனுகவும்.. தொடர்புக்கொள்ளவும் எனக் குறிப்பிடலாம். என்னுவது நாமாய் இருக்கலாம்.. நாட்டம் இறைவனின் செயல் என்பதால்.. ‘சொல்’லில் கூட இணை தவிக்கலாம். அதனால் சொன்னேன்.
Reply
குத்துபுல் ஆலம் says:
January 26, 2012 at 01:32
அல்ஹம்துலில்லாஹ்… எல்லா புகழும் இறைவனுக்கே!!!! அல்லாஹ்வின் ஒளியை யாரும் ஊதி அணைத்திட முடியாது. இன்ஷா அல்லாஹ் …விரைவில் நமது ஊரில் மறுமலர்ச்சி ஏற்ப்படுத்துவோம் நம் இறைதூதர் முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம் வழியில்…. துஆ செய்யுங்கள் சகோதரர்களே….
Reply
s.mohammedali says:
January 21, 2012 at 15:53
உன்மையில் பார்த்து சந்தோசம் அடைந்தேன் ஆனால் ஏன்னே உங்கள்ளுக்கு வாய் திஸ் கொழவேறி
Reply
abuthahir, says:
January 20, 2012 at 15:48
வி.களத்தூரிலும் வஹாபியிசாமா ?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மணிதரை நினைந்துவிட்டால்
அபுதாகிர் துபாய்
Reply
வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:
January 21, 2012 at 21:16
தவ்ஹீதின் வளர்ச்சி போற்றத்தக்கதேயன்றி… இதில் நெஞ்சுப்பொருக்காது வருந்துவதற்கு என்ன இருக்கிறது! வி.களத்தூரில் மட்டுமல்ல உலகின் எல்லா திசைகளிலும் பரவி.. உலகமே ஒப்பற்ற ஓரிறைவனை வணங்குவதில் என்ன நிலைக்கெட்ட நிலை இருக்க முடியும் அபுதாஹிர்?
போலியில்லாமல், பாசாங்கின்றி, வெறும் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல், மறுமையை எண்ணி, இறைவனுக்காக இயங்கும் எந்த இயக்கமும் இனிதே… இனிதே… வரவேற்று மகிழுங்கள் அபுதாஹிர்!
ஆனால்… கொஞ்சம் நாள் கழித்து, இயக்கம் வேறு, (ட்ரஸ்ட்) அறக்கட்டளை வேறெனச்சொல்லி.. ஒற்றுமையை யாரும் வேரறுத்துவிட வேண்டாம் தவ்ஹீத் சகோதரர்களே..! நடைமுறையைச் சொன்னேன். என்மீது வருத்தம் வேண்டாம்!
Reply
mohamed iqbal says:
January 25, 2012 at 12:55
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக,
வஹ்ஹாபிசம் என்றால் என்ன?
இந்தப் பெயர் அல்லாஹ்வுடைய அழகு திருநாமங்களில் ஒன்றாகும்.வஹ்ஹாப் (வள்ளல்) பார்க்க குர்ஆன் 3:8,38:9,38:35
‘வஹ்ஹாபி’ என்றால் ‘அல்வஹ்ஹாப்’ என்ற அல்லாஹ்வின் பெயருடன் இணைக்கப்பட்டு அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள்படும். உண்மையில் இப்படி நம்மைப் பார்த்து யாரவது அழைத்தால் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
(பாய் காபி சாப்பிடுகிறீர்களா டீ சாப்பிடுகிறீர்களா? என்று அன்போடு கேட்க வேண்டும்) ஏனென்றால் நம்மைப் பார்த்து இவர்கள் அல்லாஹ்வை சேர்ந்தவர் என்று சொல்வது சாதரணவிஷயமா?
அபு தாகிர் பாய் நம்மள பார்த்து எப்படி பாராட்டி இருக்கார் அவர்ட போய்.அபு தாகிர் பாய் நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க.பாய் டீ,காபி,டிபன்,கூல்ட்ரிங்க்ஸ் எதாவது சாப்டறீங்களா?
Reply
MOHAMED YUSUF says:
January 20, 2012 at 00:29
மாஷாஅல்லா என்ன ஒரு சமுதாய வழர்ச்சி விரைவில் மர்க்கஸ் கட்டுமானபனி முடிய துவ்வா செய்வோம்
Reply
ஏ.கே.அலியார் பாஷா says:
January 19, 2012 at 16:37
மாஷாஅல்லா என்ன ஒரு சமுதாய வழர்ச்சி எனது நன்பர் s.முஹமது அலி பார்து இருந்தால் சந்தோசம் பட்டு இருப்பார் விரைவில் மர்க்கஸ் கட்டுமானபனி முடிய துவ்வா செய்வோம்
நன்றி; வி.களத்தூர்.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக