புதன், 14 ஏப்ரல், 2010

கொத்து போயி... சாதி வந்தது டும் டும் டும் டும்

எல்லா மதங்களிலும் சாதி உண்டு!
சாதி என்பது... எவ்வாறு எந்த சூழ்நிலையில் யாரால் உருவானது அல்லது உருவாக்கப்பட்டது என்பது நம்மில் பலர் அறிந்த ஒன்றே! (அறியாதவர்களுக்கு...) இந்து சமயத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை அடிப்படையாகக் கொண்டு தம் வாழ்வாதாரங்களை அமைத்து... தம் சந்ததியினர் மீண்டும் அதே தொழிலையே பின்பற்றி வரும் சூழ்நிலையில் அந்தத் தொழிலை தம் குலத்தொழிலாக கருதி வாழ்ந்து வந்தனர். அந்தந்த பகுதியில் மக்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப சிலை வடித்து கோவில் கட்டி அச்சிலையை தெய்வமாக கருதி வழிப்பட்டு வந்தனர். நாளடைவில் அதுவே அவர்களின் குல தெய்வமாகவும் ஆனது.
அதுவரை நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சி... வறான் வறான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலேன்னு இந்த ஆரிய பசங்க... பசு மாட்டை ஓட்டிக்கிட்டு கைபர் போலாய் கணவாய் வழியா பொழப்புத் தேடி நம்ம நாட்டுக்குள்ள வந்தானோன்னோ... நாசமா போச்சு நாடே...! ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி பேரு வச்சு... உன் சாதி ஒசத்தி உன் சாதி மட்டம் ஒருத்தனெ கடவுளோட மார்புர்லேந்து வந்ததாகவும், ஒருத்தன் கடவுளோட முட்டியிலேர்ந்து வந்ததாகவும், நீ அங்கிருந்து வந்தே... நீ இங்கிருந்து வந்தேன்னு சொல்லி, தான் மட்டும் கடவுளோட தலையிலிருந்து வந்ததாகவும் சொல்லி... தன்னை மிக உயர்வாகவும் தான் உளரும் மொழியை தேவபாஷை (அதாவது கடவுளின் மொழியாம்) மத்தவங்க பேசுவது நீசபாஷை (கழிசடை மொழியாம்)ன்னு சொல்லி... அதனால கடவுள்கிட்ட பேச எங்கள (ஐயப்பயல) தவிர யாருக்கும் அருகதை இல்லேன்னு சொல்லி அத்தன பேரையும் அடி முட்டாளாக்கி சாதிங்கற சகதியில தள்ளி... இப்படிதான் சாதி உண்டாச்சுங்கோவ்.
இப்படிதான் கிருத்துவ மதத்திலும் கூட சில பிரிவுங்க இருக்கத்தான் செய்யுது. அது மட்டுமில்ல... புதுசா ஒருத்தன் கிருத்துவத்த தழுவினாக்கூட கூடவே அவனோட சாதி அவனையே தொத்திக்கிது. தலித்கிருஸ்து, நாடார்கிருஸ்து, கோனார்கிருஸ்து இப்படி எல்லா சாதியும் அங்கேயும் இருக்கு.
ஆனால்... இஸ்லாத்தில் மட்டும் சாதியே இல்லேன்னு காலரெ தூக்கி விட்டுக்குற மக்களுக்கு... “இதனால் தெரிவித்துக் கொள்வது என்னன்னா... நம்ம சமுதாயத்திலும் சாதி உருவாகி, என் சாதி பெருசு,உன் சாதி சின்னதுன்னு நம்மை நம்மிலிருந்தே பிரிக்குற சதி நடக்குது உசாரா இருங்கோ...”ன்னு தண்டோரா போட்டு சொல்ல வேண்டிய அவசியமும் உரிமையும் எனக்கிருக்குதுங்கோவ்!
’சியா சன்னின்னு’ உலக அளவிலே பிரிவு இருந்தாலும்... நம்ம தமிழ் நாட்டுக்குள்ளவே எத்தனை எத்தனை பிரிவு. இதுவும் கூட அடிப்படை தொழிலை வச்சு உண்டானதுதானுங்க!
ராவுத்தரு,மரைக்காயரு,லப்பை இப்படி இன்னும் பல பிரிவுகள் நாடெங்கும் பரவி கிடக்குது. இதெல்லாம் கூட கொஞ்சம் கொஞ்சமா மாறி வந்திட்டே இருக்கு... ஆனால், மாற்றமடஞ்ச ஒன்னு இப்ப மீண்டும் ‘குட்டய கிளற’ஆரம்பிச்சு சாதியை உருவாக்குற முயற்சியில சில கும்பல் ஈடு பட்டுக்கிட்டுருக்கு! இத நான் எங்க போயி சொல்ல... எங்கேயும் போயி சொல்ல முடியாதுன்னுதான் என் பிளாக்கருக்கு வந்தேனுங்க!
அதாவது வ.களத்தூர் என்னும் எங்க ஊர் உருவான கதை ரொம்ப சுவாரிஸ்யமானதுங்க! எங்க ஊரின் அமைப்பு அவ்வளவு எழில் கொண்டதுங்க! ஏன்னு சொன்னா ஊரைச் சுற்றி ஆறுன்னும் ஏரியின்னும் குளமுன்னும் நிறைய நீர் நிலைகளுங்க! எங்க பாத்தாலும் பச்ச பசேன்னு... விவசாய பூமிங்க! பெரம்பலூர் மாவட்டம் வரண்ட மாவட்டம்... பிந்தங்கிய மாவட்டம்னு யாராவது சொன்னீங்கன்னா எங்க ஊரை பாத்த பின்னாடி வருத்தப் படுவீங்க... ஆமாம்.. சொல்லிபுட்டேன். அம்புட்டு எழில் கொஞ்சுற ஊருங்க எங்க ஊரு! அதனாலதான் பக்கத்துல ஆண்ட ஆற்காட்டு நவாப் காலத்துல அவனோட சமஸ்தானத்துல விளையுற தானியப் பொருளுக்கு களமா இருந்ததினால ‘களத்தூர்’ன்னு பேரு வந்துச்சு! பக்கத்துல வண்ணாரம்பூண்டின்னு சின்ன கிராமமும் இருந்ததினாலும்... களத்தூர்ங்கற பேருல நிறைய ஊருங்க இருந்ததினாலும் வ.களத்தூர்னு ஆயிடுச்சு! இப்படி ஊரோட செழிப்ப கண்டு வியாபார காரணமாகவும், தொழில் நோக்கோடும் இங்கு வந்த மக்கள்... வாழ சிறந்த வழி கிடச்ச மகிழ்ச்சியிலே கொஞ்சம் கொஞ்சமா இங்கேயே குடியேற ஆரம்பிச்சுடுச்சு! பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் கூலி வேளையெல்லாம் செய்ய மாட்டாங்க. சின்னதானாலும் சொந்த தொழில்தான்! சொந்த வியாபாரம்தான். அப்படி இங்கே முதன் முதலில் தம்பி ராவுத்தர் (தொழில் தெரியலிங்க), தஞ்சை பகுதியிலேருந்து ஆட்டு மாட்டு தோல் விற்க வந்த தோலாரான்கள், சோளாரத்தார்,வெம்பாரத்தார்,இலுப்பனத்தார்(சித்தூரிலிருந்து வந்தவர்கள்) இப்படி இன்னும் பலர் பல பிரதேசத்திலிருந்து வந்தவர்களெல்லாம் அந்த பெயரிலேயே அறிப்பட்டார்கள். அதன் பின் தொடர்ச்சியாய் அவர்களின் வம்ச வழியினரும் தம்பாரத்தார்(தம்பி ராவுத்தர்) கொத்து என்றும், தோலாரான்(தோல் விற்பனைக்காரன்) கொத்து என்றும், சோளாரத்தார் கொத்து என்றும் தங்களின் கொத்தின் பெயரை தக்க வைத்துக் கொண்டார்கள். இதுவே நாளடைவில் பிரிவுகளாய் உருவானது. பின்னர் (இனவிருத்திக் காரணமாய்) மக்கள் தொகையின் எண்ணிக்கையின் அடிப்படையில்... அதிக எண்ணிக்கை கொண்டோர்(தோலாரான்கள்) உயர் கொத்தாகவும், அதைவிட குறைவான எண்ணிக்கைக் கொண்டோர்(தம்பாரத்தார்) அடுத்த நிலை கொத்தாகவும், மிக குறைந்த எண்ணிக்கையிலானோர் தாழ்ந்த கொத்தாகவும் ஆனார்கள். இவை யாவும் (ஆரியர்களைப் போல்) தோல் விற்பனையாளர்களான தோலாரான்களின் சூழ்ச்சி! பின்னர் கொஞ்சம் கொஞசமாய் ஆதிக்கமும் அதிகாரமும் அவர்கள் (தோலாரான்கள்) வசம் ஆனது!
பிறகென்ன... கொத்தெல்லாம் சாதியா மாறிடுச்சு! கொத்து போயி சாதி வந்திடுச்சு! சாதி வந்துச்சுன்னாதான் எல்லா எழவும் கூடவே வந்திடுமே...! இப்படி எல்லமே முத்திப்போயி ஒருத்தங்கூட ஒருத்தன் பேசறதில்லே... ஒருத்தன் வீட்டு விசேசத்துல அடுத்த சாதிக் காரன் கலந்துக்கறதில்லே... ஒருத்தன் சாவுக்கு இன்னொருத்தன் போறதில்லே...! இப்படி இருக்கும் போதுதான், ஒரு அம்பது வருசத்துக்கும் முன்னாடி (அம்பது வருசத்துக்கும் முன்னாடி உனக்கென்னடா தெரியும்னு கேக்கக் கூடாது. ஏன்னா இத என் பாட்டனார் சொன்னாரு சரியா?) ஊரெல்லாம் வியாதி. வாந்தி பேதின்னு தினம் தினம் நாலஞ்சு சாவு! இன்னிக்கு அவன் கொத்துல ரெண்டுன்னா.. மறு நாள் இவன் கொத்துல ரெண்டு... இப்படியா சாவுமேல சாவா இருக்க... அடடா ஏதோ (தெய்வக் குத்தம்) இறைவனின் சாபக் கேடு போல! இனிமே எல்லாம் ஒன்னா சேந்துக்குவோம்னு சொல்லி... கட்டி ஆரத்தழுவி ஒன்னா சேந்ததா எங்க பாட்டனார் சொல்வார். ஆனாலும் இந்த தோலாரான்களில் சிலருக்கு இன்னமும் அந்த கொத்து (சாதி) வெறி மனசுல நீரு விட்ட நெருப்பா கனன்றுகிட்டுதான் இருக்கு! இந்த விபரமெல்லாம் அறிஞ்ச பாதிக்குமேல உள்ள பெருங்கட்டைகள் (பெரியவர்கள்) போயிட்டதினால தோலாரான் தோலானா ஆயி.. அதுக்கும் பிறகு தோழானா ஆயி... இப்ப தோழானும் காலு முறிஞ்சி ‘தோழன்’னு மருகிடுச்சாஅதென்ன தோழன்னு கேட்டா... இன்னிக்குள்ள இளந் தலைமுறைக்குதான் தோல் விற்க வந்த சரித்திரம் தெரியாதேன்னு... ‘எங்க கொத்து.. அப்போதிலிருந்து எல்லோரிடமும் தோழமையா இருந்ததினால தோழன்’னு அர்தம் வேற சொல்லுதுங்க!
இதுல பெரிய ஒரு வேடிக்கை என்னன்னா தங்களுடைய பேருக்கு முன்னால தோழன்னு வேற சூட்டிக்கிறாங்க! (வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம் வேறயாம்... பாருங்க) சரி அதோட இருந்தா சரிங்கோவ். இல்லேன்ன வெவகாரம் பெருசால்ல ஆயிடும். இன்னிக்கு மக்கள் தொகையின் எண்ணிக்கை அப்படியே மாறி போச்சுங்க! இப்ப லீடிங்ல இருக்குறது தம்பாரத்தார் கொத்துதானுங்க! ஏன்னா ஆண் வாரிசை வச்சுதானே வம்ச விருத்தியின் கணக்கெடுப்பு. தம்பாரத்தார் கொத்துல ஆண்வாரிசு அதிகமுங்க! அதனாலயே தோலாரான்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறாங்க! எது எப்படியா இருந்தாலும் கொத்து குலைன்னு வம்ச பிரிவிணையை விடுத்து சமுதாய மேம்பாட்டுக்காகவும், வளர்ச்சிக்காகவும், எளியோரின் வருமையைப் போக்கி,அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்து, நல உதவிகள் புரிந்து நன் மக்களாக வாழ எல்லோரும் முன் வர வேண்டும். ஏன் கொத்துக்களோடு இந்த வெறியுணர்ச்சி... இவனுக்கு சொல்லும்படியா கொத்து இல்லியோ... சமீபத்தில் வந்த வந்தார்குடியோன்னு நினைக்காதீங்க. ஊரில் உள்ள குடியில் மூத்த குடியாய் அறியப்படும் தம்பி ராவுத்தர் குடிதான் என்குடியும். ஆனால்... கொத்திலோ குடியிலோ பெருமைக் கொள்வதை விட மனிதம் பேனி நல்ல மனிதன் என்ற பெருமைக் கொள்வதே சாலச் சிறந்த ஒன்றாய் கறுதுகிறேன்.
நன்றி!

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

www.vkalathur.com

பொதுவாகவே... இன்று பல ஊர் மக்கள், தங்கள் ஊருக்காக
தங்களின் ஊரின் பெயரிலேயே ஒருவலை தளத்தை உருவாக்கி...
அதில், தங்கள் ஊரின் சிறப்பு பற்றியும், சேவைகள் குறித்தும்,
நலத்திட்டங்கள், வளர்ச்சி, பொதுவான அம்சங்கள் இப்படி...
ஊரை மையமாகக் கொண்ட செய்திகளை, தங்கள் ஊர் மக்களுக்கு
அறிவிப்பதற்காகவும், தகவல் பறிமாற்றங்களுக்காகவும்
தளம் அமைப்பது சாதாரணமாகி விட்டது. இன்றைய சூழலில்,
மக்களில் பெரும்பான்மையோர் புலம் பெயர்ந்து வாழ வேண்டிய
கட்டாயத்தில் இருப்பதால்... இச்சேவை அவசியமான ஒன்றும் கூட...!
ஆனால்... சேவை மனப்பான்மைக் கொண்ட எல்லோராலும் கூட
இந்த பணியை செம்மையாய் செய்துவிட இயலாது! காரணம்...
(மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும்) உணர்வு பூர்வமாய்
உணர்ந்தாலே... இதன் வேலைப்பழுவும் சுமைகளும் உணர இயலும்.
அப்படி ஊரின் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கரைக் கொண்ட ஒருவர்
இப்பணியை மேற்கொண்டபோதிலும், இதற்குண்டான செலவுகளை
ஊரின் நல இயக்கங்களோ, அமைப்புகளோ ஏற்றுக் கொள்ளும்.
அல்லது ஊரின் பொது நிதியிலிருந்து பெறப்படும். ஆனால்...
ஊரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும்... ஊரை மட்டுமே
மையமாகக் கொள்ளாமல்... உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும்
பயன் பெரும் வகையில் ஓர் வலைதளம் உருவாக்கி... எந்த ஓர் பிரதி பலனும்
எதிபாராமல் தன் சொந்த செலவிலேயே இந்த அரிய சேவையை ‘இது என் கடமை’
என மேற்கொள்ளும் www.vkalathur.com நிர்வாகிகளுக்கு...
இத்தளத்தின் மூலம் பலனடைந்தவர்கள் என்ன கைமாறு செய்யப் போகிறார்கள்.
சாதரணமாக ஒரு ஊருக்காக அமைக்கப்பட்ட வலைதளத்தை விட
பண்மடங்கு அதாவது கிட்டத்தட்ட வணிக ரீதியாய் அமைக்கப்பட்ட ஊடகத்
தளங்களுக்கு நிகரான பார்வையாளர்களை கொண்டதாய்... சொல்கிறது.
இந்த சேவை மணம் கொண்ட நன்மக்களின் செயற்கறிய சேவை இன்னும்
சிறப்பாய் தொடர மனமாற வாழ்த்துவதுடன்,
எல்லாம்வல்ல இறைவனை இவர்களின் நலனுக்காக பிரார்த்திக்கவும்
செய்கிறது www.uyirezuthu.blogspot.com

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

இதோ வந்துட்டேன்...

நலம் பயக்க நாலு செஞ்சா...
நம்மையில்லா ஏசுறாங்க...! பின்னெ என்னாங்க?
சில வலை தளங்கள்ல கொஞ்சம் கவிதையும் சில தளங்கள்ல
கட்டுரையும் கேட்டாங்களேன்னு கொஞ்சம் வெளிய போயிட்டேன்..
நன்பர்கள் எல்லாம்... ’என்னடா மாப்ளே.. உயிரெழுத்துன்னு ஏதோ தளத்தை
அமெச்சிட்டு எங்கெடா போயி ஒளிஞ்சுகிட்டே... இதில... உணர்வின் உரிமையின் முதலெழுத்துன்னு அண்டெர் லைன் வேற’ ன்னு திட்டுறானுங்க..! நீங்களே சொல்லுங்க!
நான் என்ன செய்யட்டும்?
முதல்ல.. கொஞ்சம் சுனக்கமாத்தான் இருந்தேன். பிறகு இப்பல்லாம் அப்படி இல்லீங்க.
ஏதோ நம்மாள முடிஞ்சது. ஏதோ கொஞ்சம் எழுத தெரிஞ்சதுனாலதானே படைப்புகள கேக்குறாங்கன்னு மறுக்குறது இல்லே..! அதுமட்டுமில்லே...
ஏதோதோ பேருல ஏதோதோ குருமார்கள் (அப்படிதான் சொல்லிக்கிறாங்க)
எசகு பிசகான விசயத்துல எக்குதப்பா மாட்டிக்கிட்டானுகளா அதாங்க எதோ கல்கி பகவானாமே..அந்தாளு...
அந்த மீசையில்லா தம்பி... அப்பாவிமாதிரி முகத்த வச்சிகிட்டு அம்புட்டு நல்ல பேசுமே..
அதாங்க.. கதவெ திறந்தா காத்துவரும்னு கத சொல்லுமேங்க. ஆஆங்.. நித்தியானந்தா..
அந்த தம்பிவேற நடிகை ரஞ்சிதாவோட ராக்கூத்து பகல்கூத்துன்னு தியானம் பன்னுச்சா..
அதவேற படம்புடிச்சி அந்த சின்னசாமி வெளியிட்டுடுச்சி... அத ஆளாளுக்கு எடுத்துகிட்டு அலசி ஆராய்ஞ்சி நெட்டுல யூடுபேல்ல விட்டுட்டனுவ.. அத பாத்து நம்ம பயபுள்ளவ நெட்டு கழண்டு நட்டுக்கிட்டு அலையிதுவ... (ஆனாலும் அந்த தம்பி காவியெ கட்டிகிட்டே காமக் கூத்து அடிச்சிருக்க கூடாது.. அதுசரி அந்த தம்பி அதை சேவை, தியானம்னுல்ல சொல்லுது)
இதெல்லாம் இப்ப எதுக்கு முடிஞ்சவிசயத்த முக்கி முக்கி சொல்லிட்டுருக்கே... முக்காம விசயத்துக்கு வான்னு சொல்றது கேக்குதப்பு...
அவசரப்படாதிங்க.. அதான் வந்துட்டோமுல்ல!
இந்த கருமாந்துரத்துக்கு வக்காளத்து வாங்கி கிட்டு.. காவி உடுத்துன ரெண்டு பெரிய கருமாந்திரம் ஊருக்குள்ள புகுந்திடுச்சு! தொலைகாட்சி பேட்டி என்ன... பத்திரிக்கை பேட்டி என்ன.. அப்பப்பா! இதுகளுக்கு பின்னூட்டம் எழுதியே விரல் தேஞ்சுப் போச்சி போங்க!
அதற்கு பிறகு... நம்ம பெரியார்தாசன் (அதாங்க அப்துல்லாஹ் பாய்)
இஸ்லாத்த ஏத்துக்கிட்டாரா? அதெ பொருக்காம சிலதுங்க... அவரை பத்தி வாயிக்கு வந்தபடியெல்லாம் பேசிகிட்டு... அதுக்கு பின்னூட்டம் எழுத... புரியாததுகளுக்கு சில தளங்கள்ல போயி பதிவு எழுத... இப்படியா போயிடுச்சு! (கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன்)
சரி இப்பதான் வந்திட்டேன்ல.. இனிமே உயிரெழுத்துல உயிரோட்டமான செய்திகள் இருக்கும் போதுமா? அடுத்த பதிவு சாதிய பத்தி..! அட ஏம்பா சாதி சகதின்னு... யாரை யாரையோ வம்புக்கு இழுக்க பாக்கிறேன்னுதானே கேக்கறீங்க! அதுதான் இல்ல...
முதன் முதலில் பெரும்பாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாம் மார்க்கம் தோன்றியதே... கொள்கை ஈர்ப்பாலோ மார்க்க புரிந்துணர்வாலோ கிடையாது. சாதீய வண்கொடுமை, தீண்டாமை, இழிநிலை காரணமாகவே மக்கள் இஸ்லாத்தின் பக்கம் திரும்பினர். ஏனெனில் இங்குதான் சாதியெனும் சகதி இல்லைன்னு நம்பினார்கள், ஆனால்
இங்கேயும் சாதி தலை தூக்க ஆரம்பிடுச்சு! சியா சன்னின்னு உலக அளவில் பிரிவு இருந்தாலும்... மரைக்காயர், ராவுத்தர், லப்பை இப்படி சில கூட்டம் தமிழகத்தில் உலா வந்தாலும்... அத பத்தில்லாம் கூட எனக்கு அலச நேரமில்லீங்க!
எங்க ஊருல... என் கண்ணுக்கு முன்னாலயே சாதி உருவாவதை கண்டு என் நெஞ்சம் பொருக்குதில்லையே...!
ஏதோ கொத்து கொத்துன்னு சொன்னாங்கலே... கொத்து குலைன்னு இருந்திட்டு போகட்டுமேன்னு பார்த்தா... கொத்தெல்லாம் கொத்து கொத்தா சாதியால்ல உருவாகி நிக்குது!
என் சாதி ஒசத்தி... உன் சாதி மட்டம்னு!
விட மாட்டேனே! இத நான் விடவே மாட்டேன்!!

அடுத்த பதிவில் சந்திப்போம்!