நலம் பயக்க நாலு செஞ்சா...
நம்மையில்லா ஏசுறாங்க...! பின்னெ என்னாங்க?
சில வலை தளங்கள்ல கொஞ்சம் கவிதையும் சில தளங்கள்ல
கட்டுரையும் கேட்டாங்களேன்னு கொஞ்சம் வெளிய போயிட்டேன்..
நன்பர்கள் எல்லாம்... ’என்னடா மாப்ளே.. உயிரெழுத்துன்னு ஏதோ தளத்தை
அமெச்சிட்டு எங்கெடா போயி ஒளிஞ்சுகிட்டே... இதில... உணர்வின் உரிமையின் முதலெழுத்துன்னு அண்டெர் லைன் வேற’ ன்னு திட்டுறானுங்க..! நீங்களே சொல்லுங்க!
நான் என்ன செய்யட்டும்?
முதல்ல.. கொஞ்சம் சுனக்கமாத்தான் இருந்தேன். பிறகு இப்பல்லாம் அப்படி இல்லீங்க.
ஏதோ நம்மாள முடிஞ்சது. ஏதோ கொஞ்சம் எழுத தெரிஞ்சதுனாலதானே படைப்புகள கேக்குறாங்கன்னு மறுக்குறது இல்லே..! அதுமட்டுமில்லே...
ஏதோதோ பேருல ஏதோதோ குருமார்கள் (அப்படிதான் சொல்லிக்கிறாங்க)
எசகு பிசகான விசயத்துல எக்குதப்பா மாட்டிக்கிட்டானுகளா அதாங்க எதோ கல்கி பகவானாமே..அந்தாளு...
அந்த மீசையில்லா தம்பி... அப்பாவிமாதிரி முகத்த வச்சிகிட்டு அம்புட்டு நல்ல பேசுமே..
அதாங்க.. கதவெ திறந்தா காத்துவரும்னு கத சொல்லுமேங்க. ஆஆங்.. நித்தியானந்தா..
அந்த தம்பிவேற நடிகை ரஞ்சிதாவோட ராக்கூத்து பகல்கூத்துன்னு தியானம் பன்னுச்சா..
அதவேற படம்புடிச்சி அந்த சின்னசாமி வெளியிட்டுடுச்சி... அத ஆளாளுக்கு எடுத்துகிட்டு அலசி ஆராய்ஞ்சி நெட்டுல யூடுபேல்ல விட்டுட்டனுவ.. அத பாத்து நம்ம பயபுள்ளவ நெட்டு கழண்டு நட்டுக்கிட்டு அலையிதுவ... (ஆனாலும் அந்த தம்பி காவியெ கட்டிகிட்டே காமக் கூத்து அடிச்சிருக்க கூடாது.. அதுசரி அந்த தம்பி அதை சேவை, தியானம்னுல்ல சொல்லுது)
இதெல்லாம் இப்ப எதுக்கு முடிஞ்சவிசயத்த முக்கி முக்கி சொல்லிட்டுருக்கே... முக்காம விசயத்துக்கு வான்னு சொல்றது கேக்குதப்பு...
அவசரப்படாதிங்க.. அதான் வந்துட்டோமுல்ல!
இந்த கருமாந்துரத்துக்கு வக்காளத்து வாங்கி கிட்டு.. காவி உடுத்துன ரெண்டு பெரிய கருமாந்திரம் ஊருக்குள்ள புகுந்திடுச்சு! தொலைகாட்சி பேட்டி என்ன... பத்திரிக்கை பேட்டி என்ன.. அப்பப்பா! இதுகளுக்கு பின்னூட்டம் எழுதியே விரல் தேஞ்சுப் போச்சி போங்க!
அதற்கு பிறகு... நம்ம பெரியார்தாசன் (அதாங்க அப்துல்லாஹ் பாய்)
இஸ்லாத்த ஏத்துக்கிட்டாரா? அதெ பொருக்காம சிலதுங்க... அவரை பத்தி வாயிக்கு வந்தபடியெல்லாம் பேசிகிட்டு... அதுக்கு பின்னூட்டம் எழுத... புரியாததுகளுக்கு சில தளங்கள்ல போயி பதிவு எழுத... இப்படியா போயிடுச்சு! (கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன்)
சரி இப்பதான் வந்திட்டேன்ல.. இனிமே உயிரெழுத்துல உயிரோட்டமான செய்திகள் இருக்கும் போதுமா? அடுத்த பதிவு சாதிய பத்தி..! அட ஏம்பா சாதி சகதின்னு... யாரை யாரையோ வம்புக்கு இழுக்க பாக்கிறேன்னுதானே கேக்கறீங்க! அதுதான் இல்ல...
முதன் முதலில் பெரும்பாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாம் மார்க்கம் தோன்றியதே... கொள்கை ஈர்ப்பாலோ மார்க்க புரிந்துணர்வாலோ கிடையாது. சாதீய வண்கொடுமை, தீண்டாமை, இழிநிலை காரணமாகவே மக்கள் இஸ்லாத்தின் பக்கம் திரும்பினர். ஏனெனில் இங்குதான் சாதியெனும் சகதி இல்லைன்னு நம்பினார்கள், ஆனால்
இங்கேயும் சாதி தலை தூக்க ஆரம்பிடுச்சு! சியா சன்னின்னு உலக அளவில் பிரிவு இருந்தாலும்... மரைக்காயர், ராவுத்தர், லப்பை இப்படி சில கூட்டம் தமிழகத்தில் உலா வந்தாலும்... அத பத்தில்லாம் கூட எனக்கு அலச நேரமில்லீங்க!
எங்க ஊருல... என் கண்ணுக்கு முன்னாலயே சாதி உருவாவதை கண்டு என் நெஞ்சம் பொருக்குதில்லையே...!
ஏதோ கொத்து கொத்துன்னு சொன்னாங்கலே... கொத்து குலைன்னு இருந்திட்டு போகட்டுமேன்னு பார்த்தா... கொத்தெல்லாம் கொத்து கொத்தா சாதியால்ல உருவாகி நிக்குது!
என் சாதி ஒசத்தி... உன் சாதி மட்டம்னு!
விட மாட்டேனே! இத நான் விடவே மாட்டேன்!!
அடுத்த பதிவில் சந்திப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக