திங்கள், 4 அக்டோபர், 2010

காவி அணிந்த நீதி தேவதை!

இந்தியா என்றாலே... அனைத்து நாட்டினருக்கும் நினைவுக்கு வருவது ஒழுக்கம், ஒற்றுமை, பன்பாடு, கலாசாரம், நேர்மை மற்றும் சகிப்புத்தன்மை இவற்றுடன் முக்கியாமான ஒன்று... பலதரப்பட்ட மொழிகள் பேசும், பல சமுதாய மக்கள் வசிக்கும் ஒப்பற்ற ஒற்றுமையின் சின்னமே “இந்தியா!”

இங்கு நீதி, நேர்மை பாகுபாடின்றி கடைப் பிடிக்கப் படுவதாய் ஒரு ஆழமான நம்பிக்கை.. பிற நாட்டினருக்கு! எனவேதான்.. அயோத்தி தீர்ப்பையொட்டி, கடந்த செப்டம்பர்-30ம் நாளை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்தது! அறிவிக்கப்பட்டிருந்த தீர்ப்பின் நேரம் (மாலை 3;30) நெருங்க நெருங்க... வெளிவரப்போகும் தீர்ப்பை எதிர் பார்த்து, அனைவரது மனதிலும் திக் திக்! அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தை விட சில நிமிடங்கள் கூடிக்கொண்டே போனதினால் நீண்ட நேர படபடப்பு வேறு! ஒரு வழியாக ஊடகங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பை அறிவித்தனர்! ஆர்வத்துடன் தீர்ப்பை எதிர் பார்த்த அனைத்து நடுநிலையாளர்களும் நீதிமன்ற(?) தீர்ப்பைக் கேட்டு விக்கித்து நின்றனர்!

தீர்ப்பா இது? உலகமே காறித்துப்பி விட்டது! இது நடுநிலையான தீர்ப்பா என்று தெருவில் விளையாடும் ஒரு சின்ன குழந்தையிடம் கேட்டால் கூட.. கேட்கும் நம்மையே கேவலமாய் பார்த்துவிட்டு போகும். அப்படியொரு அபத்தமான தீர்ப்பை அறிவித்திருக்கின்றனர் இந்த நீதிபதிகள். இல்லை, இல்லை சாதிபதிகள்!

பாபரி பள்ளி இடிக்கப்பட்டது இந்திய வரலாற்றின் ஏட்டில் ஒரு கரும்புள்ளி என்றால்.. இந்த தீர்ப்பை கருப்பு பக்கம் என்பதா? இப்படி ஒரு தீர்ப்புக்காகவா 61 ஆண்டு காலம் விரயம் செய்தோம்! எதன் அடிப்படையில் இப்படியொரு தீர்ப்பு? இதுதான் சமத்துவ இந்தியாவின் லட்சனமா? சாமானியர்களின் மனதில் எத்தனை எத்தனை கேள்விகள்.

பள்ளிவாசல் இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ததில் கோவிலை இடித்து பள்ளி கட்டப்பட்டதிற்கான எந்த தடயமும் இல்லை என்றும், ஆனால் சிதிலமடைந்த ஏதோ ஒரு ஆலயம் இருந்த இடத்தில்தான் இந்த பள்ளி கட்டப்பட்டதாகவும் அறிவிக்கும் நீதி(?)பதிகள்.. அந்த சிதிலமடைந்த ஆலயம் ஏன் பள்ளி வாசலாகவே இருக்ககூடாது என்று ஏன் உணரவில்லை! இன்றும் பல பள்ளி வாசல்கள் இந்திய கலாசாரத்தையொட்டியே உள்ளன?
உதாரணத்திற்கு பழமை வாய்ந்த கீழக்கரை ஜும்மா பள்ளியும் கூட இந்திய கட்டிடக்கலையை உணர்த்துவது போன்றே அமைந்திருக்கின்றது. பாபரி பள்ளி உள்ள இடத்தில்தான் அதுவும் மூண்று டூமில் நடுவே அமைந்துள்ள பெரிய டூமின் கீழ்தான் ராமர் பிரந்தாராம்! பிரசவம் பார்த்த நீதிபதிகள் அறிவித்துள்ளனர். கம்பன் பொழுது போக்குக்காக கற்பனையாய் எழுதிவைத்த கம்பராமாயணமெல்லாம் உயிர் பெற்று, இன்று நீதிமன்ற நீதிபதிகளாலேயே பரிந்துரைக்கப் படுவதை எண்ணி இந்தியன் தாராளமாகவே தலைக் குனியலாம்!

அதுவும், சுதந்திரப்போராட்டத்தின் போது.. இந்தியா சுதந்திரம் அடைய பாடுபட்டவர்களில், தியாகம் செய்தவர்களில் பெரும்பான்மையோர் இஸ்லாமியர்களே.. இந்தியா சுதந்திரம் அடைய பெரும்பங்கு வகித்தது இஸ்லாமியச் சமுதாயம் என மார்தட்டிக் கொள்ளும் இஸ்லாமியர்களின், அதே மார்பில் வேல் கொண்டு பாய்ச்சும் நீதிமன்ற தீர்ப்பை எண்ணி இஸ்லாமியர்களும் தாராளமாகவே தலைக் குனியலாம்!

ராமபிரான் அங்குதான் பிறந்தான் என நீதிமன்றமே அறிவித்துள்ளது எங்களுக்கு என்னற்ற மகிச்சி, இதுவே பெரிய வெற்றி என்றெல்லாம் சொல்லி இனிப்பு பகிர்ந்துக்கொள்ளும் ஒருசாரார்...! சமத்துவ நாடு எனச்சொல்லி.. என் தேசம் என் பாரதம் என்றெல்லாம் பாடி மகிழ்ந்த எமக்கு நாடு காட்டிய நீதியும் தீர்ப்பும் இதுவா அய்யகோவெ நிலைதடுமாரும் மற்றொரு சாரார்..! என்னடா இது நீதி நேர்மை.. இவ்வளவு கேவலமாய் ஆகிவிட்டதா நம் நாடு என்னும் குழப்பத்தில் நடி நிலையான பொதுமக்கள்...! அடச் சே... இவ்வளவுதானா இந்தியா! நாம் என்னவெல்லாமோ கணவு கண்டோமே இந்தியாவைப் பற்றியும் இந்தியர்களின் ஒற்றுமை பற்றியும்.. என கனவை கலைத்து, துப்பிவிட்டு போகும் உலக நாட்டினர்..!

எப்படி பார்த்தாலும் அதிருப்தி, வேதனைதான் மிச்சம். யாருக்கு தெரியும் நீதி தேவதை அலகாபாத் நீதிமன்றத்தில் காவி உடையில் காட்சியளிக்கிறாள் என்று!
பார்ப்போம் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையாவது உச்ச நீதி மன்றத்தில் செல்லுபடி ஆகிறதா, அல்லது அங்கேயும் நீதி தேவதை தராசை விட்டெறிந்துவிட்டு காவி உடையோடு கையில் காவிக்கொடியும் பிடிடித்து வருகிறாளா என்று!

1 கருத்து:

  1. மகா மட்டமான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுள் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கியும் இருந்துள்ளார். அவருடைய கண்ணுக்கும் காவி(நீதி)தேவதை தான் தெரிந்துள்ளார் என்று பார்க்கும் போது மணது எவ்வளவு வேதனைப் படுகிறது.யார் தமக்கு பணிந்து, பரிந்து பேசுவார்களோ அவர்களுக்குதான் இப்படி உயர்ந்த பதவி அந்த பதவியில் அமர்ந்தவர் அவருடைய சமூகத்திற்கு துரோகம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. போகட்டும் விடுங்கள் சலீம் .... ஒரே ஒரு நிம்மதி உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் போனதுதான்.

    பதிலளிநீக்கு