புதன், 8 ஜூன், 2011

முன்னேறு... முன்னேற்று! தொடர் 12

முன்னேறு!முன்னேற்று!!

சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்



அதை எப்படிச் செயல்படுத்தலாம் –எப்படி வளர்க்கலாம் –அதன் தேவைகளை எப்படியெல்லாம் பூர்த்தி செய்யலாம். அதன்மூலம் சமூகத்திற்கு எப்படி நன்மை செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பார்.

ஐயா எதற்கும் அஞ்சுவதில்லை. போட்டியில் பின்வாங்குவதில்லை. தயவு தாட்சண்யம் பார்த்து மனமுருகி விட்டாலொழிய போட்டி பற்றிக் கவலைப்படுவதில்லை. அநாவசியமாய் வேண்டாத காரியங்களில் மூக்கை நுழைப்பதில்லை. வேண்டாததைச் சிந்திப்பதில்லை. தேவையானதைத் தேர்ந்தெடுத்து முழுக் கவனத்தையும் அதிலேயே செலுத்துவார். எந்த ஒரு காரியத்திலும் பிறரின் அபிப்பிராயத்தைக் கேட்டறிந்து –யோசிக்க அவகாசம் கொடுத்து முடிவெடுக்க வைப்பார். இவரது வெற்றிக்கு இன்னொரு காரணம் –மகள் –மருமகன்களையும் தன் எண்ண ஓட்டத்தில் வளர்த்து ஒரே பாதையில் பயணம் செய்ய வைத்திருப்பது.

(12)

தனலட்சுமி சீனிவாசன் பெண்கள் கல்லூரி ஆரம்பித்தது முதல் நிர்வாகத்தில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் டாக்டர் ராம மீனாட்சி, ஐயா பற்றி நிறையக் குறிப்பிடுகிறார். டாக்டர் ராம மீனாட்சி அவர்கள் பெண்கள் கல்லூரியின் ஆலோசகரும் கூட.

@@@@@@@@@@@@@@@

ஐயா அவர்கள் திருக்குறள் பலவற்றிற்கு இலக்கணமாய்த் திகழ்பவர். குறளிற்குப் பொழிப்புரை –விளக்கவுரை வேறு எதுவும் தேவையில்லை. இவரைக் கவனித்தாலே போது.

தோன்றின் புகழொடு தோன்றுக் அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்

தேரினும் அஃதே துணை.

(நல்ல வழியில் செயல்பட்டு அருளுடைய செயல்களைச் செய்வதே உயிருக்குத் துணையாக அமையும்.)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளிணும் தள்ளாமை நீர்த்து.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

இப்படி நூற்றக்கணக்காக குறள்களைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறார் ஐயா. இவற்றையெல்லாம் அவர் பள்ளியில் படிக்க வாய்ப்பில்லை.படிக்கவில்லை அனுபத்தில் இவர் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் குறளோடு ஒத்துப் போகிறது என்பதுதான் உண்மை.

இராமாயணம், மஹாபாரதம், கீதை,குறள்,பைபிள், குரான் இப்படி அவற்றைப் படித்து அதன்படி நடக்க வேண்டும் என்று அவர் செயல்படவில்லை. எல்லா நல்ல விஷயங்களும் அவரது உள்ளத்தில் ஊறி –இயல்பாகவே நடைமுறையில் கடைப்பிடித்து வருவதுதான் விசேஷம்

ஐயாவின் வாழ்க்கை அர்த்தமுள்ளது. உயர்ந்த குறிக்கோளை நோக்கிப் பயணிக்கிறது. இவருக்கு எப்போதும் தொலைநோக்குப் பார்வை! ஒரு காரியத்தைப் பற்றி யோசிக்கும் போது அதன் – நீண்டகாலப் பலாபலன்களை நன்மை தீமைகளை ஆராய்ந்து –ஆலோசித்தே முடிவெடுப்பார்.

எண்ணித்துணிக கருமம் என்பதுபோல, எந்தச் செயலையும் தொடங்கும் முன்பு நன்கு பரிசீலிப்பார். அதன் சாதக பாதகங்களை அலசி –துவங்கலாம் என்று முடிவெடுத்த பின்பு –துவங்கிய பின்பு அதிலிருந்து பின்வாங்கு வதில்லை. அதை வெற்றி பெற வைக்கும் வரை இவருக்குத் தூக்கம் வராது.

ஐயாவிற்கு எப்போதும் தொலைநோக்குப் பார்வை உண்டு. உயர்ந்த குறிக்கோளுடன் அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பவர். எந்த ஒரு காரியத்தையும் இடம் பொருள் ஏவல் அறிந்து, ஆராய்ந்து செய்யும் பண்புடையவர்.

இவரது மூலதனம் தன்னம்பிக்கை! உழைப்பு! விடாமுயற்சி! சிறந்த சிந்தனையோடு –தெளிந்த அறிவு பெற்றவ்ர், அதுவும் நன்கு பக்குவப்பட்ட அனுபவ அறிவு! படிக்க முடியாமல் போனாலும் கூட –ஒரு நூலக அளவிற்கு இவரிடம் உள்ள அறிவு ஆச்சர்யப்பட வைக்கும். எந்த விஷயத்திலும் சரியான முடிவு எடுப்பது இவரது சிறப்பு.

எதில் இறங்கினாலும் –வெற்றி பெறுவோம் என நம்பிக்கை வைத்துப் பயணத்தைத் தொடர்வார். வெற்றி பெறவும் வைப்பார். எதுவுமே எளிதாய்க் கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரியாது. எந்தக் காரியமானாலும் நிச்சயம் தடைகள் வரும். தடங்கல்கள்! அவற்றைக் கண்டு சோர்ந்து போகாமல் தடைக்கற்களைப் படிக்கற்களாய் மாற்றுவார். தன்னுடன் உள்ளவர்களையும் சோர்வடையாமல் ஊக்குவிப்பார்.

எடுத்த லட்சியத்தில் தவறு நடக்கிறது என்றால் –அது ஏன் எப்படி –எதனால்-எங்கே என அலசி ஆராய்ந்து தவறைச் சரி பண்ணி வெற்றி பெற வைப்பார்.

ஐயாவிற்கு இயல்பிலேயே இரக்ககுணம். மனிதாபிமானம்! பரோபகாரம்! பெருந்தன்மையுடன் –உதவி தேவைப்படுபவர்களுக்குத் தாராளமாய்ச் செய்வார். அது ஆத்மார்த்தமாய் வாழ்த்தி –செய்யும் உதவி சம்பந்தப்பட்டவர்களுக்குப் பலனளிக்கிறமாதிரி பார்த்துக் கொள்வார்.

இயற்கையிலேயே இவரிடம் நிர்வாகத் திறமை அமைந்துள்ளது. ஆட்களையும் விஷயங்களையும் சரியாய் எடை போடுவதில் இவர் கைதேர்ந்தவர். மாணவர்கள் மட்டுமின்றி- அலுவலர்கள் –கற்பிப்பவர்கள் அனைவரையும் ஐயா –தொடர்ந்து கவனித்து வருவார். நிர்வாகம் –சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருப்பார். அதே சமயம் திறமைக்கு மதிப்பளிப்பார். அவற்றை உற்சாகப்படுத்துவார்.

பெற்றோர்கள் இங்கே விரும்புவது, கட்டுப்பாடு! கட்டுக்கோப்புடன் கூடிய பாதுகாப்பு! படிப்புடன் ஒழுக்கம் பேண்ப்படுவதில் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி. இங்குப் பிள்ளைகளைச் சேர்த்து விட்டு விட்டால் –அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் கற்று –ஒரு முழு மனிதனாய் –வெளியே வருவார்கள் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பெற்றோர்களிடம் இந்தக் குழுமம் ஏற்படுத்தியிருக்கிறது.

பிள்ளைகளை இங்குச் சேர்த்துவிட்டபின் பெற்றோர்களுக்கு நிம்மதி. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி எந்தவிதக் கவலையுமின்றி தங்கள் அலுவல்களைக் கவனிக்கிறார்கள்.

ஏற்கெனவே கூட்டு வியாபாரம் செய்ததில் பங்குதாரர்கள் மூலம் எழுந்த பிரச்சனைகளால் சீனிவாசன் நிறைப் பாடம் கற்றுக் கொண்டுள்ளார். அதனால் கூட்டு வியாபாரத்திற்குப் போவதில்லை. எதையும் சொந்தமாகத்தான் ஆரம்பித்திருக்கிறார்.

சொந்தமாய் முடியக்கூடியதை மட்டுமே சிந்திக்கிறார்.

இவரது ஒரே மகன் திரு.கதிரவன் நிர்வாகத்தின் துணை சேர்மனாக (வைஸ் சேர்மனாக) இருக்கிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயர். சர்க்கரை ஆலை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் விருப்பம்.

அதற்கு ஐயா –உடனே சம்மதித்து விடவில்லை. ``எதற்கு மாற்றுப்பாதை? கல்விப் பயணம் போதுமே என்றிருந்தார். உள்ளதைக் கவனித்தால் போதாதா? இன்னொரு துறைக்குப் போய் அங்கு அடிமட்டத்திலிருந்து கற்று –ஆரம்பித்து –எதற்கு உனக்கு கஷ்டம்? நான் நிறையகச் சம்பாதித்து வைத்திருக்கிறேன். இவற்றைப் பார்த்துக் கொள்ளலாமே!’’ என்று முதலில் விருப்பமில்லாமலிருந்தார்.

தொடரும்...




.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக