முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
எனவே, இக்கல்வி நிறுவனங்கள் பல தேசிய அங்கீகாரம் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட வித்திட்டவர் என்பது பெருமகிழ்வைத் தருகிறது. திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக் கழகத்தில் சின்டிக்கேட் உறுப்பினராக நியமித்து ஐயாவைக் கெளரவப்படுத்திப் பெருமை சேர்த்து உள்ளவர்கள்.
நவீன சமையற் கூடங்களை அமைத்து அதிகச் சுகாதாரமான உணவு வகைகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தில் பெரும் ஈடுபாடும் அக்கறையும் கொள்பவர் ஐயா அவர்கள்.
மாணவர்களின் தனித்திறமைகளைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிக் கெளரவப்படுத்துவதில் பெருமகிழ்வு கொள்பவர்.
விவசாயத்தை இன்றும் இவ்வளவு பணிகளுக்கு இடையிலும் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் ஐயா அவர்கள் விவசாயகளிடம் பற்றும்,பாசமும் மிக்கவர்.
விவசாயிகளின் நலனில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் மிகச்சிறந்த சர்க்கரை ஆலையையும் நிறுவி, கரும்பு விவசாயிகளின் வாழ்வில் ஒளிபெறச் செய்திருக்கிறார்.
அன்பும், பண்பும், கனிவும் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் மிகுந்த ஈடுபாடு மிக்க பெருமை மிகு பண்பாளர்.
பெரும்பாலான கல்வி நிறுவனங்களையும், சர்க்கரை ஆலையையும் தனது சொந்த மாவட்டத்திலேயே நிறுவி மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதில் அரும்பாடுபட்டவர்.
மாலைநேர நடைப் பயணத்தில் விருப்பம் உள்ளவர். அப்போது மாணவர்களிடம் உரையாடுவதில் அதிக விருப்பம் உள்ளவர். அவர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்.
ஐயா நீண்ட ஆயுள் பெற்றுச் சிறப்பாகச் சேவையைத் தொடர என் சார்பிலும் பொறியியல் கல்லூரி சார்பிலும் வாழ்த்துகள்!
தனலட்சுமி சீனிவாசன்
சர்க்கரை ஆலை திறப்புவிழா
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.அ. சீனிவாசன் தலைமை வகித்தார். விழாவில் டி.எஸ்.குழுமச் செயலாளர் திரு.நீல்ராஜ் வரவேற்றார். இந்தியன் வங்கித் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.சுந்தரராஜன் சர்க்கரை ஆலையையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் திரு.நுபுர்மித்ரா சர்க்கரை உற்பத்தி நிலையத்தையும், ஆலையின் மின் உற்பத்தி நிலையத்தை மத்திய மாற்றத்தக்கவல்ல எரிசக்தி நிறுவனத்தின் (இரிடா) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.தெபாஷிஷ் மஜீம்தர் திறந்து வைத்தனர்.
விழாவில் இந்தியன் வங்கித் தலைவர் திரு.சுந்தரராஜன் ``இந்த சர்க்கரை ஆலை மிகக்குறைந்த காலத்தில் அதாவது ஓர் ஆண்டு 4 மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாடு வேகமாகப் பொருளாதார வளர்ச்சி கண்டுவருகிறது. நமது நாட்டின் பொருளாதாரம் வளர இதுபோன்ற ஆலைகள் பெரிதும் துணை புரியும். இங்குள்ள 3 வங்கிகள் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கத் தயாராக உள்ளன. வேளாண் பெருமக்கள் வங்கிக் கிளைகளுக்குச் சென்று பல்வேறு கடன் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2015 -2020 –க்குள் இந்தியா வல்லரசாக மாறும், அதற்குத் திறன்மிக்கவர்கள் தேவை. அந்தத் திறனைக் கல்வியால் மட்டுமே கொடுக்கமுடியும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் 30 ஆயிரம் பேருக்குக் கல்வி அளித்துவருகிறது. இவர்களது கல்விப் பணி தொடர்ந்திட வேண்டும். பாராட்டுக்குரிய இந்நிறுவனம் பல்வேறு சாதனைகளைப் புரிந்திட வேண்டும்’’ என்று பேசினார்.
விழாவில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தலைவர்
திரு.அ.சீனிவாசன் தொடக்க உரை
விழாவில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தலைவர் திரு.அ.சீனிவாசன் தொடக்க உரையில்.... ``எங்களது சர்க்கரை ஆலையைத் தொடங்க அனுமதி வழங்கிய முதல் அமைச்சர் கலைஞர் மற்றும் இந்த ஆலைக்குப் பரிந்துரை செய்த மத்தியத் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை மந்திரி திரு.இராசா, தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு வீராசாமி, வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பகுதி விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தைக் கடைப்பிடித்து கரும்பினை அதிகம் பயிர் செய்யவும்,அதன் மூலம் அதிக மகசூல் பெறவும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மேலும், `` சர்க்கரை ஆலையில் பணியாற்றும் அனைவருக்கும் அவர்களது ஒருமாதச் சம்பளம் போனஸாக வழங்கப்படும்’’ என்று அவர் பேசினார்.
விழாவில் அரியலூர் மாவட்டக் கலெக்டர் திரு.ஆப்ரகாம் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. திரு.ராமசுப்ரமணி, பேங்க் ஆஃப் இந்தியா உயர் அலுவலர் திரு. தயால், வட்டாரத் தலைவர் திரு கே.எஸ்.ராஜன், பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு திருமிகு. வனிதா, தந்தை ரோவர் கல்விக்குழுமத் தலைவர் ரோவர் திரு.வரதராஜன், கரும்பு விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர் திரு.செல்லதுரை உள்பட பலர் வாழ்த்திப் பேசினார்கள்.
விழாவில் சர்க்கரை ஆலையின் செயல் இயக்குநர் திரு.எஸ். சீனிவாசனுக்கு, அஒ பவுன் தங்கச்சங்கிலி ,ரூ3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் காசோலையும், மின்சார உற்பத்தி மேலாளர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் காசோலையும்,ஆலை மேலாளர் திரு.பழனிவேல் ராஜனுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி , ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் காசோலையும், எலட்ரிக்கல் மேலாளர் திரு.சரவணனுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் காசோலையும், ஆலைக் கட்டுமான நிறுவனமான சி.சி.எல். மேலாளர் திரு அறிவழகனுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி, 50 ஆயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.
&&&&&&&&&&&&&&&
தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையின் நவீன் தொழில்நுட்ப முறையில் ஒரு நாளைக்கு 3500 டன் கரும்பு அரவை செய்யப்படும். அத்துடன் 60 கிலோ லிட்டர் டிஸ்டிலரீஸ், ஒரு மணி நேரத்திற்கு 23 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளது.
இந்த ஆலையின் மூலம் 500 பேர் நேரடியாகவும், 2000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். இந்த ஆலையில் தினமும் 3 சிப்ட் முறையில் ஒரு நாளைக்கு 3500 முதல் 4000 மூட்டைகள் வரை சர்க்கரை உற்பத்தி செய்யப்படும்.
ஆலையின் மின்சாரச் செலவைக் குறைப்பதற்காகவும் சர்க்கரை உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும் நான்கு அதிநவீன 2 ரோலர் மில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான டர்பைன் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக சல்பர் அமிலம் பயன்படுத்தாமல் ரீபைண்ட் சர்க்கரை உற்பத்தி செய்ய சுமார் 30 கோடி செலவில் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலையின் சக்கைகளைப் பயன்படுத்தி ஒரு மணிநேரத்திற்கு 23000 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து 6.5 மெகாவாட் ஆலையின் தேவைக்காகவும் மீதமுள்ள 16.5 மெகாவாட் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் விற்கப்பட உள்ளது.
மொலாசஸ் எனப்படும் பை ப்ராடக்ட்டைக் கொண்டு நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் வீதம் எத்தனால் மற்றும் ஸ்பிரிட் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இது வரை சுமார் 19 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு 2009 ஆம ஆண்டில் மட்டும் சுமார் ரூ.50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டில் சுமார் 1528 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சொட்டுநீர்ப் பாசனம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு 253 விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு நாற்பதாயிரம் வீதம் மானியம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 693 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 விவசாயிகள் பயண்டைவார்கள். சுமார் 1250 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும்.
கரும்பு விவசாயிகள் மத்தியில் நல் உறவை மேம்படுத்த 10 கரும்பு மண்டல அலுவலகமும் 50 செக்சன் அலுவலகமும் தொடங்கப்பட்டு அதில் 60 கரும்பு விரிவாக்க அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதுவரை விவசாயிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க ஆஃப் இந்தியா போன்ற அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடனாக சுமார் பத்துக் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கரும்புப் பயிரினை இடைக்கணுப்புழுத் தாக்குதலிலிருந்து காக்க ஒரு இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை செய்ய சுமார் ரூ.4 கோடி செலவில் இரண்டு அறுவடை இயந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளது.
இதுவரை கரும்பு அதிகாரிகள், கரும்பு ஆய்வாளர்கள் மற்றும் அந்தந்தக் கிராமத் தலைவர்களைக் கொண்டு 221 கிராமக் கூட்டங்கள் நடத்தப்பட்டு விவசாயிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக