புதன், 8 ஜூன், 2011

முன்னேறு... முன்னேற்று! தொடர் 18

முன்னேறு!முன்னேற்று!!

சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்



யோசித்துப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. கதையிலும் சினிமாவிலும் சட்சட்டென வளர்ச்சியை வித்தை காட்டுவார்கள். இது பொய்யல்ல. நிஜம்.

சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட ஒரு பாமரர் இன்று 17 கல்வி நிறுவனங்களின் நிறுவனர் –தலைவர்! இங்கே 1300 ஆசிரியர்கள்! 800 இதர பணியாளர்கள்!

இந்தக் கல்வி நிறுவனம் விரைவில் பல்கலைக் கழகமாக ஆக விருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் மாணவர்களை உள்ளடக்க இருக்கிறது!

இவ்வளவு வளர்ச்சி கண்ட சீனிவாசன் கூட்டுக் குடும்பமாய் வசிக்கிறார். அதே பழைய வீடு. இவர்களுக்கென்று தனியாய் இடம் ஃப்ளாட் கிடையாது. சொகுசு –செளகர்யம் தேடாமல் தங்கள் மூச்சு –பேச்சு –சிந்தை –செயல் எல்லாவற்றையும் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள்.

(17)

திரு. என். வெங்கட்ராஜீ அவர்கள் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர், 30 வருடங்களாக திரு.அ.சீனிவாசன் அவர்களுடன் நெருங்கிய நட்புடன் இருப்பவர்.

@@@@@@@@@@@@@@@@@

எந்த ஒரு வீட்டு –வெளி விசேஷங்களுக்கும் ஐயாவுக்கு இவர் துனை.

திரு. அ.சீனிவாசன் அவர்களின் குணநலன்கள் –சேவை பற்றி இவர் சிலாகித்து மகிழ்ந்து பல விஷயங்களை விளம்புகிறார்.

``ஐயா புறத்தூய்மை –மனத்தூய்மை மலையளவு பெற்றவர் –தன் வாரிசுகளுடன் தன் குடும்பத்தில் மைத்துனர்கள், மைத்துனிகள் அனைவரையும் ஒரே குடும்பமாய் வைத்து –அனைவருக்கும் தானே முன்னின்று திருமணங்கள் செய்வித்து அவர்களும் சிறப்பாகப் பொருளீட்ட உதவிவருபவர்.

எந்தக் காரியமாகட்டும் சிந்தித்து –வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று நேர்த்தியாக –நியாயமாகச் செய்வது இவரது பண்பாடு.

தங்கள் நிறுவனங்களில் பணிபுரிவோரிடம் அவரவர்களின் திறமை –தகுதிக்கேற்ப பொறுப்புகள் கொடுத்து –வேலை வாங்கி –அவர்களின் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்பவர்.

அரசாங்க அலுவலர்களை எளிமையாய் –முறையாய் அணுகி சேவைகள் ஜனங்களுக்கு போய் சேரும்படி பார்த்துக் கொள்கிறார்.

சொந்தச் செலவில் கோயில் கட்டியிருப்பதுடன் –சுற்றுப்பக்கக் கோயில்களுக்குப் பொருளுதவி செய்து அவற்றையும் மேம்படுத்த உதவுகிறார்.

பெரம்பலூர் அரசாங்க மேல்நிலைப்பள்ளிக்குச் சுற்றுச்சுவர்; எய்ட்ஸ் நிறுவனங்களுக்கு நிதி உதவி; தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களில் தன்னைக் காண வரும் ஏழை எளியவர்களுக்குப் பண –பொருள் –ஆடைகள் உதவி;

சுனாமி வந்த போது லட்சக்கணக்கில் உடனடி உதவி; இதைமட்டும் அல்லாமல் தன் ஊழியர்கள், மாணவர்களையும் சிதம்பரத்திற்கு அனுப்பிச் சேவை செய்ய வைத்தார்.

தனது புது நடுவலூர் கிராமத்தில் 75 வீடுகளுக்கு இடம் கொடுத்து, அங்குக் குடிநீர் கிணறு வெட்டி –பைப் லைன் போட்டு விநியோகிக்கிறார். அந்த நல்ல காரியத்திற்கும் சில இடைஞ்சல் வர அவற்றையும் சமாளித்து இதிலும் வெற்றி கண்டுள்ளார்.

பெரம்பலூர் எப்போதுமே வறட்சிப் பகுதி. இங்குக் குடிநீருக்கு எப்போதுமே பிரச்சனை. பெண்கள் தண்ணீருக்காகக் குடம் குடமாய்ச் சுமப்பதைக் கண்டு –மனம் தாங்காமல் அவர்களுக்கு உதவும் பொருட்டு தங்கல் சொந்த இடத்தில் போர் குழாய் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இப்போதும் அரசுப் பொது மருத்துவமனைக்கு எதிரே பொதுமக்கள் இதன்மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

இவரது சேவை –தொண்டுகளை அடுக்கி மாளாது. இவை வெறும் சாம்பிள்கள் மட்டுமே.

ஐயா சத்தியத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவர். எவரிடமும் சண்டை சச்சரவுக்குப் போவதில்லை. மனிதனை மனிதனாய் மதிப்பவர். எளிமை –கனிவான அணுகுமுறை இவரது சிறப்பு. தவறு செய்தாலும் –எதிரிகள் இருந்தாலும் பழிவாங்கும் உணர்வு கூடாது என்பார். எதிரிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் நம் எனர்ஜி வீணாகி வளர்ச்சி குறையும்.

இவர் எந்த அரசியலிலும் அரசிலும் தலையிடுவதில்லை, எல்லோரும் இவருக்கு வேண்டியவர்களே 1996 முதல் பெரம்பலூர் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இவரது கல்லூரியில்தான் நடத்தப்படுகிறது.

ஐயா நிறைப் புத்தகங்கள் படிப்பார். புத்தகத்தை எடுத்தால் முடித்துவிட்டுத்தான் உறங்குவார். 66 வயதில் இன்னமும் கண்ணாடி அணியாமலே படிக்கும் `பவர்’ உள்ளவர்.

இவரது திறமை –சாதனை –சேவைக்குக் கெளரமளிக்கும் வகையில் திருச்சி அண்ணா யுனிவர்சிடி தனது சின்டிகேட் மெம்பராக்கியுள்ளது. பல்வேறு சாதனைகள் புரிந்த இவருக்குப் புதுக்கோட்டை இலக்கிய பேரவை `வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிக் கெளரவித்து –கெளரவம் பெற்றிருக்கிறது.

மொத்தத்தில்-

திரு.அ.சீனிவாசன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்குக் கிடைத்த அரிய முத்து –சொத்து! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்து –மக்கல் கொண்டாடும் இவரை முன்னுதாரணமாய்க் கொண்டு மேலும் பலர் உருவாக –உருவாக்கபட இவரைப் பற்றிய இந்த நூல் தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

(18)

பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு.ஜெயராமன் திரு.அ . சீனிவாசன் அவர்களைப் பற்றிப் பெருமையுடன் தெரிவிக்கிறார்.

@@@@@@@@@@@@@@

அரசு, பொது, தனியார் எனப் பல நிறுவனங்களில் பணி ஆற்றி உள்ள எனக்கு –அங்கங்கே சந்தித்த மேல் அதிகாரிகள், இயக்குநர்கள், முதல்வர்கள் எனப் பலரின் அனுபவங்கள், செயல்கள் அனைத்தும் நன்கு அத்துப்படி.

இப்போது நான் முதல்வராகப் பணி ஆற்றும் சீனிவாசன் பொறியியல் கல்லூரி கல்வி நிறுவனம் நிச்சயமாகப் பிற நிறுவனங்களில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது.

தம் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றால் அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி. இவர்களை மகிழ்வித்துத் தான் மகிழ்வது என்பது மிக உயர்வான பண்பு. இந்த உவகையும் எல்லையில்லா மிகிழ்வும் கொள்பவர் நமது தலைவர் ஐயா அவர்கள்.

இங்குப் படித்த மாணவர்களும் பிறகு சிறந்த பணியில் அமர்த்தப்படும் போது ஐயா பெறும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.

காலத்தால் அழியாத, கள்வர்களால் களவாட முடியாத நிலையான சொத்து; அள்ள அள்ளக் குறையாத அத்தகைய அரிய கல்விச் செல்வத்தை மாணவர் சமுதாயத்திற்கு வாரி வாரி வழங்க வேண்டும் எனபதற்காக மருத்துவம், தொழில்நுட்பம் எனப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருப்பவர்தான் நமது ஐயா அவர்கள்.

கல்வி நிறுவனங்கள் அடுத்து அடுத்து அமைத்து வளம் பெறச் செய்து மிகத் தரமான கல்வியை மாணவர்ச் சமுதாயத்திற்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் பெருமகிழ்வு கொண்டவர். கல்விக் கூடங்களை மிகச்சிறப்பாக நிர்வகித்து வரும் இவர் கல்வி நவீன மயமாவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். இக்கல்வி நிறுவனஙகளில் அதிநவீன ஆய்வுக்கூடங்களை அமைத்து அதன் தரத்தை உயர்த்துவது, நவீன நூலகங்களை அமைத்து அரிய பல நூல்களை இந்த நூலகத்தில் இடம் பெறச் செய்து மாணவர்கள் தங்கள் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளப் பெரிதும் உதவுவது எனப் பல வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றிக் கல்விக் கூடங்களில் தரத்தை மெருகூட்டியவர்.

தொடரும்...





.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக