புதன், 8 ஜூன், 2011

முன்னேறு... முன்னேற்று! தொடர் 13

முன்னேறு!முன்னேற்று!!

சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்



ஆனால் கதிரவனோ விடவில்லை. தந்தைக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை! ``அப்பா –நீங்கள் நிறைய கஷ்டப்பட்டீர்கள் –நிறையவே சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள். மறுக்கவில்லை. செல்வம் மட்டுமின்றிப் புண்ணியமும் நிறையவே. இவையெல்லாம் எனக்கப்புறம் உள்ள தலைமுறைகளுக்கும்கூட போதும். ஆனால்-

என்னதான் நான் நிர்வாகம் பார்த்தாலும் –இவை எல்லாம் நீங்கள் உருவாக்கியவை. இதை நான் நிர்வகிப்பதில் எனக்குப் பெருமைதான். அந்த நாளில் எந்த வசதியும் –எந்தவிதப் பக்க பலமுமேயில்லாத நீங்கள் இந்த அளவிற்குச் சாதித்திருக்கும் போது.

எல்லா வசதிகளையும் பெற்றிருக்கிற –செல்வம் –படிப்பு-பதவி பெற்றுள்ள நான் ஏதாவது புதிதாய்ச் செய்து சாதிக்க வேண்டும் –வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு...? என் திருப்திக்கு –என் விருப்பத்திற்கு மதிப்பளியுங்கள் –உங்கள் பிள்ளை நிச்சயம் தோல்விடைய மாட்டேன்!’’ என்கிர கதிரவனின் நியாயமான விருப்பத்திற்கு ஐயா சம்மதித்தார்.

பிள்ளைகள் வளர்ந்த பின்பும் அவர்களை நம் கட்டுப்பாடிலேயே வைத்திருக்கக் கூடாது. அவர்களையும் சுகந்திரமாய்ச் செயல்பட விடணும், பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்து –நிர்வகிக்கச் சொல்ல வேண்டும்.

பெரம்பலூர் அருகே உடும்பியம் எனும் இடத்தில் தனலட்சுமி சீனிவாசன் சுகர் –பவர் –டிஸ்டிலரி மில் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கே சர்க்கரை மட்டுமின்றி 23 மெகாவாட் மின் உற்பத்தியுடன் 60 ஆயிரம் லிட்டர் டிஸ்டிலரியும் தயாரித்து அரசுக்கு வழங்கும் வண்ணம் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஐயாவின் அலுவல்கள் அதிகாலையிலேயே ஆரம்பித்து விடுகின்றன. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுகிறார் 4.45 –க்கு இவரது இஷ்ட தெய்வமான முருகனை நினைத்துப் பிரார்த்தனை 5 மணிக்குத் தேநீர். ஒரு மணி நேரம் செய்தித்தாள்கள்!

பிறகு பார்வையாளர்கள் சந்திப்பு.

உடற்பயிற்சி, குளித்து, தயாராகி 8.30க்குப் பள்ளிக்குச் சென்று பிரேயரில் கலந்து கொள்கிறார். அங்கு டீச்சர்கள் –மாணவர்களிடம் நலம் விசாரிப்பு!

பிறகு காலைச் சிற்றுண்டி முடித்து கல்லூரிக்குப் பயணம். அங்கே நிர்வாகத்தைக் கவனித்தால். அனாவசியமாய் இவர் எதிலும் தலையிடுவதில்லை. பொறுப்புகள் சரியாய்க் கையாளப்படுகிறதா எனப் பார்ப்பார்.

மாதம் ஒரு முறை பிரின்ஸ்பால்,வைஸ் பிரின்ஸ்பாலுடன் மீட்டிங்! குறைகள் கேட்பார். அவற்றைச் சரி பண்ண நடவடிக்கை எடுப்பார்,ஹாஸ்டல் உணவு இவருக்குக் கேரியரில் வந்துவிடும். இவற்றைப் பரிசோதிப்பார். குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்ய வைப்பார்.

மாலையில் காம்பஸிற்குள்ளேயே நடப்பார். வழியில் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து செயல்படுத்துவர்.

எப்போதும் நேர்மை- நேர் வழி இவரது கொள்கை. நல்லதையே நினைத்துச் செயல்பட்டால் நல்லதே நடக்கும் எனபது இவரது நம்பிக்கை!

இந்தக் குழுமத்தில் அனைத்துவிதக் கல்வி –பல மொழிகளில் கற்பிக்கப்பட்டாலும் கூட தமிழ்மேல் இவருக்கு அலாதி மரியாதையும் பற்றும் உண்டு.

தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்குப் பஸ் இலவசம். 50 கி.மீட்டருக்குள் இருந்து வந்து போகும் மாணவிகளுக்குப் பஸ் இலவசம். இந்தக் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 150 பஸ்களுக்கு மேல் இயங்குகின்றன.

மாணவ –மாணவிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைவு என்றாலும் கூட ஸ்டாஃப்களுக்குத் தாராளமாய் ஊதியம் வழங்கப்படுகிறது. தகுதியான ஆசிரியர்கள் நியமனம்! இங்கே தகுதியில்லாமல் சிபாரிசுக்கு இடமில்லை!

சுதந்திர தினம், குடியரசு தினத்தில் கொடியேற்றும் போது –இங்குள்ள மாணவர்களே உருவாக்கின விமானத்தைப் பறக்க விடுவதுண்டு.

பொதுவாய்த் தமிழ் மீடியத்தில் பள்ளியில் படித்தவர் கல்லூரிக்கு வந்ததும் ஆங்கில மீடியம் என்றதும் தடுமாறிப் போவர், அவர்களால் பாடங்களைச் சரியாய்ப் புரிந்து கொள்ள முடியாமல் போகும் அதைத் தவிர்ப்பதற்காக இங்கு Bridge Course -15 நாட்கள் நடத்துகிறார்கள். இதன் மூலம் புதிய மாணவர்களின் ஆங்கில மொழித் திறன் மேம்படுத்தப்படுகிறது. அதன்பிறகு அவர்களின் தாழ்வுமனப்பான்மை போய் பாடங்களில் ஆர்வமுடன் கவனம் செலுத்தவும் முடிகிறது.

பெண்கள் கல்லூரியில் 3500 மாணவிகள் படிக்கின்றனர்.அதில் பாதிக்கு மேல் விடுதியில் தங்கியுள்ளனர். விடுதி என்றால் சும்மா பெயருக்கு இல்லை. ஐந்து நட்சத்திர ஹோட்டல் அளவிற்கு வசதிகள்! நீச்சல் குளம்! அடுக்கு மாடி அறைகள்! லிஃப்ட்! ஹைடெக் கிட்சன்! போன், கம்ப்யூட்டர், ஈமெயில், பொழுதுபோக்கு வசதிகள்.

இங்குக் கேரளா, ஆந்திரா, சிக்கம், மணிப்பூரிலிருந்தும் கூட வந்து படிக்கிறார்கள். பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கட்டணத்தில் சலுகையும், உதவித் தொகையும் வழங்கிப் படிக்க உதவுகிறார்கள். இங்கே பட்டப்படிப்பு முடித்து –முதுகலைப் பட்டம் படிக்க வருபவர்களுக்குக் கட்டணத்தில் சலுகை உண்டு.

எப்போதும் 60 –க்கும் குறையாமல் யுனிவர்சிட்டி முதன்மை ரேங்க்குகள் பெறுகிறார்கள். மாணவர்கள் –டாப் ரேங்க் பெற்றால் –அதற்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை அளித்துக் கெளரவிக்கிறார்கள்.

ஸ்டாஃப்கள் பாட நூல் எழுதினால் அவர்களுக்கு விருது! பணமுடிப்பு! அவர்கள் பிஹெச்.டி செய்வதால் ஊக்கத்தொகை உண்டு! ஸ்டாஃப்களின் மேற்படிப்பை நிர்வாகம் உற்சாகப்படுத்துகிறது. அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருகிறது.

பொதுவாக மாணவ –மாணவியர் விடுதிகளில் ஒரே தரம் உணவுதான் வழங்கப்படும். இங்கே அப்படியில்லை. கேரளத்தவர்களுக்கு அவர்களின் ரசனைப்படி கேரள வகை உணவுகள்! ஆந்திர மாணவர்களுக்கு உணவு! எல்லோருக்கும் தனித்தனி உணவகங்கள்! ஸ்டாஃப்களுக்குத் தனி உணவகம்! தீபாவளிக்கு ஊருக்குச் செல்லாமல் இங்கு இருக்கும் மாணவர்களுக்கு நிர்வாகமே பட்டாசுகள் வாங்கிவந்து –அவர்களின் குறை போக்குகிறது.

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஹோலி, ஓணம் எனப் பண்டிகைகளை இங்கேயே கொண்டாட வைக்கிறார்கள்.

பெண்கள் கல்லூரியில் பட்டம் முடித்து வெளியே செல்லும் மாணவிகளுக்கு –நமது கலாசாரம் –பண்பாட்டை நினைவூட்டும் வகையில் குத்து விளக்குக் கொடுத்தனுப்புவது இவர்களின் வழக்கம். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

தொழிற் கல்வியாளர்களுக்கு இந்தக் கல்லூரி மூலம் உடனடி வேலைக்கு நல்ல வாய்ப்புகல் ஏற்படுத்தித் தருகிறார்கள். இதற்காக வருடந்தோறும் நூற்றுக்கணக்காக நிறுவனங்கள் –வந்து கேம்பஸ் இண்டர்வியூ நடத்துகின்றன. பொதுவாக, பிற கல்லூரிகளில் ஆங்கங்குப் படிக்கும் மாணவர்களை மட்டுமே கேம்பஸ் இண்டர்வியூவிற்கு அனுமதிப்பர்.

ஆனால் இவர்களோ –அப்படிக் குறுகிய அளவில் சிந்திப்பதில்லை.

வேறு இடங்களில் படித்த மாணவர்களும்கூட இங்கு நடக்கும் கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்து கொள்ள அனுமதிக்கிறார்கள். அதற்கான வசதிகளுடன் மாணவர்கள் வந்து செல்ல இலவச பஸ் வசதியும் செய்து தருகிறார்கள்.

(13)

ஐயா தனது இளமைப் பருவத்திலும் ஆரம்ப காலகட்டத்திலும் தனியாகக் கஷ்டப்பட வேண்டியிருந்தது. சொந்த உடன் பிறப்புகளே உதறித் தள்ளின பிறகும் தனி மரமாக வேர் விட்டு வளர்ந்தார்.

பொதுவாக, தனி மரம் தோப்பு ஆகாது என்பர். இவர் தோப்பாக மாற மனைவி திருமதி தனலட்சுமி அவர்கள் ஒரு கருவியாக –பாலமாக –பலமாக –தெம்பு தந்திருக்கிறார்.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக