முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
பெரம்பலூரில் ரூ.2 கோடி மதிப்பில்
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை
தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் சார்பில் சர்வதேசத்தரத்தில் அமையும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியின் முன்னோட்டமாக ரூ.2 கோடி செலவில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி திரு.இராசா திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றியதாவது; ``பொதுவாழ்விலும், வர்த்தகத்திலும் செல்வம் ஈட்டுவது பண்பாடு, திருவள்ளுவர் கூறியதுபோல அறவழியில் வரும் பொருள் இன்பம் தரும். தலைமுறைக்கு அறம் தரும் கல்விப்பணியை இந்நிறுவனத்தலைவர் திரு.அ.சீனிவாசன் மேற்கொண்டுள்ளார். அவரது கடின உழப்பினால் இந்நிறுவனம் மாபெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. அறிஞர் அண்ணா கூறியதுபோல மழை வரவேண்டும் என்பது பொதுநலம். அதில் நாம் நனையாமல் இருக்கக் குடைபிடிப்பது சுயநலம். அதுபோல இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் பொதுநலத்துடன் இணைந்த சுயநலமும் உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்கு எனது முயற்சி காரணம் என்று இங்கே கூறினார்கள். இந்தச் சாதனைகளுக்கெல்லாம் காரணமானவர் கலைஞர். நான் கருவி மட்டுமே. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லாப் புகழும் கலைஞருக்கே என்று கூறுகிறேன். இங்கு மருத்துவக்கல்லூரி அமைய உள்ளதை அறியும்போது இவர்களுக்கு நிகராகப் போட்டியிட அரசு மருத்துவக்கல்லூரி உடனே தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது.’’
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத் தலைவர் திரு.அ.சீனிவாசன் தலைமை வகித்துப் பேசியதாவது;``எங்களது இந்த மருத்துவமனையில் 16 படுக்கை வசதிகள் உள்ளது. புறநோயாளிகள் பிரிவு தினமும் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் இயங்கும் 24 மணிநேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படும். பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் மற்றும் பழைய பஸ்நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு அடிக்கடி இலவச பஸ்கள் இயக்கப்படும். கிராம மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெரம்பலூர் மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் வளர்ச்சியைப் பலர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இதற்கு மத்திய மந்திரி திரு.இராசா முயற்சியே முக்கியக் காரணம் ஆகும்.’’
விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் திரு.ராஜ்குமார், ஆண்டிமடம் திரு.சிவசங்கர், தந்தை ரோவர் கல்விக்குழுமத் தலைவர் திரு.வரதராஜன், முன்னாள் ஒன்றிய சேர்மன திரு.அட்சயகோபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமச் செயலாளர் மகன்
டாக்டர் வினோத் –டாக்டர் சரண்யா திருமணம்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.அ.சீனிவாசனின் பேரனும், செயலாளர் திரு.நீல்ராஜ் –திருமதி . ஜெயந்தி மகனுமான டாக்டர் என்.வினோத் மற்றும் சென்னை பி.எம்.மருத்துவமனை இயக்குநர்கள் டாக்டர் வி.தியாகராஜன் –டாக்டர் வசுந்தரா, இவர்களது மகள் டாக்டர் டி.சரண்யா திருமணம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் 17.02.2010 அன்று காலை நடைபெற்றது.
திருமணத்திற்கு முந்தை தினத்தன்று பெண் அழைப்பும், வரவேற்பு நிகழ்ச்சியும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்து. இதனை முன்னிட்டு திரு. கங்கை அமரன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரம்பலூர் சினிமாத் தயாரிப்பாளர் திரு.பிரபுவெங்கட் உள்படப் பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், பெரம்பலூர் கலெக்டர் திரு.மா.விஜயகுமார் ஒரு இந்திப் பாடலைப் பாடினார்.
``மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.அ.இராசா கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
திருமண விழா மற்றும் வரவேற்பு விழாவில் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.கே.என் நேரு மாவட்ட கலெக்டர்கள் திரு.விஜயகுமார் (பெரம்பலூர்), திரு.சவுண்டையா (திருச்சி), திரு.சுடலைக்கண்ணன் (ஈரோடு), போலீஸ் சூப்பிரண்டுகள் திருமிகு. வனிதா, திரு.பிரேம் ஆனந்த சின்கா, திரு.நஜ்மல்கோடா (அரியலூர்), திரு.கலியமூர்த்தி (திருச்சி), திருச்சி தொழில் அதிபர் திரு.ராமஜெயம், எம்.எல்.ஏல்க்கள் திரு.ராஜ்குமார் (பெரம்பலூர்), திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் (ஆண்டிமடம்), அரியலூர் பாளை திரு.அமரமூர்த்தி, திரு,அன்பில் பெரியசாமி, வரகூர் திரு.சந்திரகாசி, திருச்சி மாநகர கமிஷனர், மாவட்ட வருவாய் அதிகாரிகள் திரு.பழனிசாமி, திரு.சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. திரு.துரைசாமி, தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைச் செயல் இயக்குநர் திரு.எஸ்.சீனிவாசன்,அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் திரு.பாலசுப்ரமணியன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை டீன் டாக்டர் திரு.ரெங்கநாதன் பன்னாரி சர்க்கரை ஆலைத் தலைவர் திரு.பாலசுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் திரு.கு.ப.கிருஷ்ணன், பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் திரு.எம்.என். ராஜா, துணைத்தலைவர் ஓவியர் திரு.முகுந்தன், சென்னைத் தொழில் அதிபர்கள் திரு.பாரி, திரு.சாதிக்பாட்சா, பெரம்பலூர் திரு.கர்ணம் சுப்ரமணியம், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.வரதராஜன், துணைத்தலைவர் திரு.ஜான் அசோக் வரதராஜன், சாரதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.சிவசுப்ரமணியன், சிவகாமம் மோட்டார்ஸ் அதிபர் மற்றும் பனிமலர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.கலியபெருமாள், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.கிறிஸ்டோபர்,
மற்றும் மருத்துவத்துறையினர், அரசு உயர் அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள், அரிமா, ரோட்டரி மற்றும் லியோ சங்க நிர்வாகிகள், பஸ் அதிபர்கள்,பெரம்பலூர், திருச்சி, சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வர்த்தகப் பிரமுகர்கள் நிரளாகக் கலந்து கொண்டனர்.
பத்மஸ்ரீ விருதுபெற்ற சாக்சபோன் கலைஞர் திரு. கத்ரி கோபால்நாத் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருமண விழாவையொட்டி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் தோரண வாயில்கள் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதோடு கல்லூரி வளாகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலமாகக் காட்சி அளித்தது. திருமண விழாவிற்கு வந்திருந்த பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, நாட்நாட்செவன் கலர்லேப் சார்பில் இலவசமாக போட்டோக்கள் எடுத்து உடனுக்குடன் வினியோகிக்கப்பட்டது. பெரம்பலூரில் பிரம்மாண்டமான அளவில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன் பற்றி இவர்கள்;
திரு.மு. அட்சயகோபால் (முன்னாள் ஒன்றிய சேர்மன்)
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.அ.சீனிவாசன் அவர்களைப் பற்றி தாங்கள் எழுதும் புத்தகம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
திரு.அ.சீனிவாசன் அவர்கள் தன்னுடைய கடின உழைப்பாலும், தளராத தன்னம்பிக்கையாலும், மிகப் பெரிய சாதனை செய்து வெற்றி கண்டுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக, திரு.அ.சீனிவாசன் அவர்களை உற்று நோக்கியும், அவருடன் பழகியும் வந்திருக்கிறேன். அவருடைய எளிமையும், பாசத்துடன் பழகும் பாங்கும், என்னை மிகவும் கவர்ந்தது.
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், நவீன் சர்க்கரை ஆலை, மருத்துவமனை என்று பெரம்பலூரில் பலரும் வியக்கும் வண்ணம், பல அரும்பெரும் சாதனைகளை ஆண்டுதோறும் நிகழ்த்திக் கொண்டே வருகிறார்.
திரு.அ.சீனிவாசன் அவர்களுடைய சாதனைகள் மென்மேலும் தொடர, என் இனிய நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன்.
திரு.மு.இராஜாராம், (அரிமா சாசனத் தலைவர்)
அன்புகெழுமிய நண்பர் திரு.மோகன்தாஸ் அவர்களுக்கு, வணக்கம்! சிகரம் தொட்ட சாதனையாளர் திரு.அ.சீனிவாசன் அவர்களைப் பற்றித் தாங்கள் புத்தகம் எழுதுவது குறித்து மகிழ்ச்சி.
பெரம்பலூரில் எத்தனையோ மனிதர்கள், பெரியவர்கள் தோன்றி, மறைந்து இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரிய சாதனைகள் எதையும், எவரும் செய்த வரலாறு இல்லை. அரசியலில், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அ.இராசா அவர்கள் பெரம்பலூருக்கு மகத்தான பல செயற்கரிய சாதனைகளைச் செய்துள்ளது மறுக்க முடியாது.
அதேசமயம் தனிப்பட்ட முறையில், தனது திட்டமிடலாலும், அயராத கடும் உழைப்பினாலும், பெரம்பலூருக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கித் தந்த முதல் மனிதர் திரு.அ.சீனிவாசன் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அதனால், பெரம்பலூருக்கு பெருமை சேர்த்துத் தந்தார் என்பதும் உண்மையிலும் உண்மை. உழைப்பால் உயர நினைப்பவர்கள், இவரைத்தான் முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை வாழ்க்கையில் இவர் உணர்ந்த காரணத்தால், தமிழகத்தின் தலைசிறந்த மாபெரும் கல்வி நிறுவனங்களைப் போகிற போக்கில், சர்வ சாதாரணமாக நிறுவி, இமாலயச் சாதனையை பத்தே வருடங்களில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். சாதனைகளை அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.
தனலட்சுமி சீனிவாசன் சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலையும், அதே பெயரில் பிரம்மாண்டமான மருத்துவமனையும் பெரம்பலூர் பகுதியில் நிறுவிப் பிற்படுத்தப்பட்ட இப்பகுதி ஏழை மக்கள் பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு, மற்றும் சுகாதார நல்வாழ்வு போன்றவற்றுக்கு அடித்தளம் ஏற்படுத்தி உள்ளார். இன்னும் அவரால் பெரம்பலூர்ப் பகுதி மக்கள் பல நன்மைகளை அடையப்போவது உறுதி.
சமீப காலங்களில், அளவற்ற அவரது வள்ளல் தன்மையையும் பார்க்கிறேன். அவரது எளிமை, அனைவரையும் அனுசரிக்கும் பாங்கு, அவரை இன்னும் உச்சத்தில் கொண்டு சேர்க்கும் என்பது திண்ணம். தனி மனிதனாகத் தன் உழைப்பால், சிகரம் தொட்ட இச்சாதனையாளர் மேலும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து பலரின் உயர்வுக்கும் வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
முற்றும்!
(முற்றுமென்பது என் கட்டுரைக்கேயொழிய... திரு அ.சீனிவாசன் அவர்களின் சாதனைக்கு அல்ல!)
தகவலுக்கு உதவிய www.lakshmansruthi.com இணையதளத்திற்கு நன்றி பல!
நன்றியுடன்..
வசந்தவாசல் அ.சலீம்பாஷா.
சீணிவாசனின் முழு விபரமும் தாங்களுக்கு நன்றாக தெரியுமா? அவருக்கு இத்தனை சொத்துக்களுக்கும் பணம் எங்கிருந்து வந்தது என்று தெரியுமா? இவரையெல்லாம் தாங்கள் சாதையாளர் பட்டியலில் சேர்த்து உள்ளீர்களே இதைவிட கேவலம் என்னாவக இருக்க முடியும். லக்சுமன்சுருதி.காம் தகவலை வைத்து தாங்கள் எழுதியது வருத்ததிற்குறியதாகும்.
பதிலளிநீக்கு