முன்னேறு!முன்னேற்று!!
சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்
கட்டணம் குறைவில் –தரமான கல்வி –கலாசாரத்துடன் கூடிய கட்டுப்பாடு –நல்லொழுக்கம் –மாணவர்களுக்கு வேண்டிய வசதிகளை என இந்த நிறுவனங்கள் பெற்றோர்களிடம் பெரும் மதிப்பு பெற்றிருக்கின்றன. இங்குச் சேர்த்தால் தங்கள் பிள்ளைகள் நல்ல மாணவனாக –மனிதனாக வெளியே வருவான் என்கிற நம்பிக்கையையும் இது ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கு 17 கல்வி நிறுவனங்கள்! ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவர்கள்! மாணவர்களுக்கு 4 மாணவிகளுக்கு 4 என தனித்தனியாய் விடுதிகள்! எட்டு மாடிக் கட்டடம்! லிஃப்ட் வசதியுடன் விடுதிகள்! நீச்சல் குளம்! ஏஸி லைப்ரரி. இங்கே கிடைக்காத நூல்கள் கிடையாது.
ஏஸியுடன் கூடிய ஆடிட்டோரியம்.
விளையாட்டு, விஞ்ஞானம், கலை, இலக்கியம், பாட்டு, நடனம் என அத்தனை துறைகளுக்கும் வசதிகள்! செய்து தந்துள்ளனர்! அறைக்கு அறை தொலைபேசி இணைப்புகள்! இண்டர்நெட்! விடுதியில் செல்போன்களுக்கு அனுமதி! உடற்பயிற்சிக்கு ஜிம்!
மனம் குளிரவும், மகிழவும் எங்கும் பசுமை பரப்பிச் செடி கொடி மரங்கள் எனப் பராமரிக்கிறார்கள். வீட்டுக் கஷ்டம் படிப்பைப் பாதிக்காமலிருக்க சிங்கப்பூர் அட்மாஸ்பியர் இங்கே!
விடுதியில் தரமான உணவு. புதுப்புது உபகரணங்கள் வரவழைத்து வேகமான விநியோகம்.
1 மணி நேரத்தில் 2000 சப்பாத்திகள் சூடாக –சுவையாக தயாரிக்க மெஷின்!
1 மணி நேரத்தில் 400 தோசைகள் தரும் மெஷின்கள்!
சுத்தமான –சுவையான சத்தான உணவு இங்கே வழங்கப்படுகிறது.எல்லோருக்கும் மினரல் வாட்டர்!
இங்கே நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
நியாயமான தேவைகளுக்கு வேண்டியதையெல்லாம் செய்து தருகிறார்கள். படிப்போடு –கடமை –கண்ணியம் –கட்டுப்பாட்டுடன் –நாளைய பாரதத்திற்கு இங்கே இளைஞர்கள் தயாரிக்கப்படுகிறார்கள்.
அதே மாதிரிப் பிரச்சனையில்லாத –பெண்கள் கல்லூரி.
1996 –இல் முதன் முதலில் பெண்கள் கல்லூரி ஆரம்பித்த போது இதை வழி நடத்த சரியான பிரின்ஸ்பால் வேண்டும் என்று தேடினபோது காரைக்குடியில் ரிடையராகியிருந்த டாக்டர் ராமமீனாட்சி பற்றித் தகவல் வந்தது.
உடன் அவர்களைப் போய் அணுகினர். விவரம் சொல்ல –அவர் உடனே ஒப்புக் கொள்ளவில்லை. ``நான் வந்து உங்கள் நிறுவனங்களைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்’’ என்றார்.
அதே மாதிரி வந்து பார்த்து-பிடித்துப் போய்,``உங்களின் சீரிய நோக்கம் -லட்சியத்திற்காக –உங்களின் கஷ்டநஷ்டத்திலும் பங்கேற்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று எந்த வித கண்டிஷன்கள் –டிமான்ட்களும் இல்லாமல் அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அன்று முதல் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சியில் இவரது பங்கு அதிகம்.
இங்குக் கண்டிப்பான –தரமான –பாதுகாப்பான நிர்வாகத்தை ஏற்படுத்தித் தரமான மாணவிகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யப் பெருந்தூணாய் அவர் நிற்கிறார்!
இவர்களின் சேவையும் சாதனையும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல அரசாங்கம் –அலுவலர்கள் மத்தியிலும் நன்கு பதிந்திருக்கிறது. இந்தப் பகுதியில் கரும்புச் சாகுபடி செய்பவர்கள் –கரும்பு வெட்டக் குறித்த காலத்தில் ஆர்டர்கள் கிடைக்காமல் மனம் வெந்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் நிலை ஏற்பட்டது.
அதைப் பார்த்ததும் ஏன் சர்க்கரை ஆலை ஆரம்பித்து விவசாயிகளின் துயர் துடைக்கக் கூடாது எனச் சர்க்கரை ஆலைக்கு மனு போட்டனர். உடன் கிடைத்தது.
500 பேர்களுக்கு வேலை தரும் வண்ணம் –சர்க்கரை, டிஸ்டிலரி, மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த ஆலை 21.2.2010 –இல் சிறப்பாக குறித்தபடி ஆரம்பிக்கப்பட்டது.
(16)
1994 –இல் இவர்கள் முதலில் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கலிருந்த சமயம்-எஸ்.எஸ். ராஜகோபால் எனும் பெரிய கல்வியாளர் இந்தப் பகுதியில் மருத்துவமனையும் மருத்துவக்கல்லூரியும் ஆரம்பியுங்கள் என்று ஆலோசனை தெரிவித்தார்.அது ஜனங்களுக்கு நல்ல சேவையாக இருக்கும் என்று தூண்டினார்.
சேவை என்பதில் நாட்டமிருந்தாலும்கூட கிராமப்பகுதியில் மருத்துவமனை கட்டினால் பணிபுரிய டாக்டர்கள் வரமாட்டார்கள் என்கிற தயக்கம் அப்போது இருந்தது. இவர்களுக்கு.
டாக்டர்களை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவர் முன் வந்தார். ஆனாலும் கூட ஐயாவிற்கு அப்போது அதைச் செயல்படுத்த முடியவில்லை.
இருந்தாலும் அன்றிலிருந்தே மருத்துவச் சேவை எண்ணம் அவரது மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதற்கான சூழ்நிலை தருணத்திற்காகக் காத்திருந்தார்.
அது இப்போது சேர்ந்து அமைந்துள்ளது.
மருத்துவமும் கல்வி போல மக்களுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று. கிராம மக்கள் வசதியின்மை –சரியான வழிகாட்டுதலில்லாமல் நோய்க்கான சிகிச்சை பெற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். கல்வியைப் போலவே இந்தப் பகுதியில் மருத்துவப் புரட்சியும் ஏற்படுத்த வேண்டும் என்று ஐயா விரும்பினார்கள்.
அதன் செயல் வடிவம் சென்னை –திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் எனும் ஊரின் அருகே இவரின் மருத்துவமனைக் கனவு நனவாகியிருக்கிறது.
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் தற்போது 100 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். இரவு –பகல் எப்போதும் சேவை, இதில் என்ன விசேஷம் என்றால் மக்களுக்கு இலவசமாகவும் மிக்க குறைந்த கட்டணத்திலும் மருத்துவ சேவை.
அரசாங்கம் இலவச மருத்துவமனையை நடத்தச் சிரமப்படும் காலத்தில் இந்த மருத்துவமனை சிறப்பாக இயங்குகிறது. இங்கே தினம் 1000 பேர்களுக்கு மேல் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
மத்திய அமைச்சர் திரு.இராசா திறந்து வைத்த இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து போக தனலட்சுமி சீனிவாசன் நிர்வாகம் பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளிலிருந்து பஸ்களை இயக்குகிறது.
அதுவும் கூட இலவசம்.
ஐயாவின் சேவைக்கு மகுடம் சூட்டுவதாக இம்மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை ஏழைகளுக்கு மட்டுமின்றி –வெளி நாட்டினரும் இங்கு வந்து சிகிச்சை பெறும்படி உலக்த் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பது ஐயாவின் லட்சியம்.
நிச்சயம் உயரும். உயர்த்துவார்.
இந்த வளாகத்தில் இவர்களின் மருத்துவக் கல்லூரியும் உருவாகிவருகிறது. 2011 –இல் இது நிறைவடைந்து திறக்கப்படும்.
மனதிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கு சீனிவாசன் அவர்கள் ஒரு முன் உதாரணம்.எந்தக் காரியத்திலும் முழு ஈடுபாடு கொண்டு ஜெயிக்கணும் என்கிற முனைப்போடும் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சி-துணிவு –நாணயம் தவறாமை –தரம் பேணல் –சேவை மனப்பான்மை போன்றவற்றை அடிப்படையாய் வைத்து இவரும் குழுவினரும் செயல்பட்டதால்.
அந்தந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் –கஷ்டங்கள் –பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடிந்திருக்கிறது.
தொடரும்...
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக